வங்கி அது ஏன் அவ்வாறு
அழைக்கப்படுகின்றது?
இந்தியாவில் வங்கிகளின் ஒழுங்கு முறை சட்டத்தின்படி (Banking Regulation Act) வங்கி என்பது பொதுமக்களிடமிருந்து அவர்களுடைய சேமிப்பை திரட்டி அதை தேவையுள்ளவர்களுக்கு கடனாக வழங்கவோ அல்லது முதலீடு செய்யவோ நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்.
சுருக்கமாக கூறினால். பொதுமக்களின் சேமிப்பை முதலீடாக மாற்றும் ஒரு இடைநிறுவனம் (Intermediary) என கூறலாம்.
இந்தியாவில் வங்கிகளின் ஒழுங்கு முறை சட்டத்தின்படி (Banking Regulation Act) வங்கி என்பது பொதுமக்களிடமிருந்து அவர்களுடைய சேமிப்பை திரட்டி அதை தேவையுள்ளவர்களுக்கு கடனாக வழங்கவோ அல்லது முதலீடு செய்யவோ நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்.
சுருக்கமாக கூறினால். பொதுமக்களின் சேமிப்பை முதலீடாக மாற்றும் ஒரு இடைநிறுவனம் (Intermediary) என கூறலாம்.
இப்படியாக நமதூரில் இந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற பெரும்படியான
வங்கிகள் வரிசையில் “கனரா வங்கி” “இந்தியன் வங்கி” “தனலெட்சுமி வங்கி” “ஸ்டேட் வங்கி இந்தியா” “கூட்டுறவு வங்கி” இவ்வங்கிகள் இப்படி ஒருபுறம் இயங்கிக் கொண்டு இருக்க, இதையும் தாண்டி கடன்
கொடுக்கின்றோம் என்ற பெயரில் நெருப்பு வட்டியை விழுங்கிக் கொண்டிருக்கும் குட்டி
வங்கிகள் ஆங்காங்கே இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இதில் அதிக வாடிக்கையான பெருமக்களை பெற்றிருப்பது கனரா வங்கி, ஆனால்
வாடிக்கையாளர்கள் படும் பாடு சொல்லில் மாளாது. தற்போது இ.சி.ஆர்.பெருவழிச் சாலையில்
இயங்கிக் கொண்டிருக்கும் கனரா வங்கிக்கு போதுமான இடவசதி இல்லை, எப்போது
பார்த்தாலும் டவுன் பஸ் போலவும், ரேஷன் கடை போலவும், மீன் மார்கட் போலவும் மக்கள்
பிதுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
சிறு தொழில் பெரு தொழில் புரிவோர், குடும்பத்தில் உள்ளோர், மாணாக்கர்கள்,
விவசாயிகள், சுற்று வட்டார மக்கள், வெளி மாநிலங்களில் இருப்போர், வெளி நாடுகளில்
இருப்போர், அரசு அலுவலர்கள், வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள், உள்ளூரில் இருந்து
வருபவர்கள் இப்படியாக கனரா வங்கி தினம் தினம் பிதுங்கி
வழிகின்றது.
குடிப்பதற்கு குடி நீர் கிடையாது, வாடிக்கையாளர்களுக்கு போதுமான இடவசதி
கிடையாது, ஆண் பெண் என்று தனி வரிசை கிடையாது, வாடிக்கையாளர்களுக்கு தங்கநகைகள்
பாதுகாப்பு பெட்டக வசதி போதுமானது கிடையாது(Locker
System), வயோதிகர்களுக்கு முன்னுரிமை கிடையாது, சரியான காற்றோட்டம் கிடையாது, போதுமான அலுவலர்கள் ஊழியர்கள் கிடையாது,
வங்கி சேவையில் துரிதம் கிடையாது, ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவிட வாடிக்கையாளர்
சேவை கிடையாது.
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர் அமரும் இடத்திற்கு மிக அருகில் மும்முனை
மின் மாற்றிக்கு உண்டான உபகரங்கள் பொருத்தப்பட்டு இருக்குது, இது மிகவும்
அபாயகரமானது, சில சமயம் மின் கசிவு ஏற்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார்
பொறுப்பு? மேலும் தீயணைப்பு சாதனம் ஏதும் அவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாடிக்கையாளர்கள் முன்கதவை திறந்து கொண்டு வங்கிக்குள் நுழையும் பொது
தாராளமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையமுடியாது காரணம் நெருக்கமான இடவசதி
காரணமாக சில பேர் இருக்கையில் அமர்ந்தும் சில பேர் நின்றுகொண்டும் இருப்பதினால்.
வங்கிக்கு இன்னும் அதிகம் வாடிக்கையாளர்கள் தேவை, கோடி கணக்கில் பணவைப்பு
தேவை, டன் கணக்கில் தங்க நகைகள் தேவை, அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்னும்
கூடுதலாக சம்பளம் தேவை, வாடிக்கையாளர்கள் எந்த கேள்வியும் ஊழியர்களிடம் கேட்டு
விடக்கூடாது, அடிக்கடி அரசாங்க விடுமுறை, அதுக்கு விடுமுறை, இதுக்கு விடுமுறை,
ஏப்பம் விட்டால் விடுமுறை, கெட்ட கனவு கண்டால் விடுமுறை இப்படி பல விடுமுறைகளை
விரும்பும் ஊழியர்கள்..
முப்பத்தைந்து ஆண்டுகளாக வான் பரிதா கட்டிடத்தில் இயங்கி வந்த கனரா
வங்கிக்கு வளர்ச்சியின் காரணமாக அதிக இடம் கொண்ட புதிய இடம் தேவைப்படும்பொழுது பழைய
இடத்தைவிட இன்னும் அதிக இடவசதி உள்ள கட்டிடத்தை தேர்ந்து எடுப்பதுதான் முறையானதும்
நியாயமானதுமாகும், தற்போது இயங்கி வரும் கட்டிடம் மிகவும் நெருக்கமானது,
இ.சி.ஆர்.சாலையில் கணக்கில் அடங்கா வாகனப் போக்குவரத்து இருப்பதால் வங்கிக்கு
வருவோர் போவோர்களுக்கு பாதுக்காப்பற்ற இடமாக இருக்கின்றது.
ஆக மொத்தத்தில் வங்கிக்கு கூடுதல் இடவசதியோடும், வரும்
வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாகவும், வாகன நெரிசல்களிலிருந்து பாதுகாப்பானதும், நல்ல
காற்றோட்டம் உள்ள வேறு கட்டிடம் மிக மிக அவசியம்.
தற்போதுள்ள கட்டிடம் வங்கிக்கு ஏற்றது அல்ல, வாடிக்கையாளர்களுக்கு உகந்தது
அல்ல, காற்றோட்ட வசதிகள் இல்லை, வாகன நெரிசல் கடுமையாக உள்ளது. ஆகவே, வங்கியின்
திருச்சி மண்டல நிர்வாகம் உடன் வந்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்தால் ஒழிய
மேலே சொல்லப்பட்ட பிரச்சனையிலிருந்து வாடிக்கையாளர்களை
திருப்த்தி படுத்த முடியாது.
திருப்த்தி படுத்த முடியாது.
குறிப்பு:-
அதிரை கனரா வங்கி விஷயமாக திருச்சி மண்டல அலுவலகம்
(Circle
Office) Assistant General Manager, Mr. M.Panner Selvam அவர்களை (04
June 2013 – 02.15pm) மொபைலில் தொடர்பு கொண்டபோது மருத்துவத்திற்காக ஒரு வாரம் காலம் விடுப்பில்
மதுரையில் தங்கி இருப்பதாகவும், விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புங்கள் என்று
கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி உள்ளது.
இப்படிக்கு.
K.M.A.
ஜமால் முஹம்மது.
Consumer
& Human Rights.
S/o.
K.Mohamed Aliyar (Late)
No comments:
Post a Comment