Wednesday, April 24, 2013

கேரளா: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்: 21 பேர் கைது


                                

திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வெடிகுண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 21 பேர்கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மையில் அருகே நாராத்து பகுதியில் உள்ல கட்டிடத்தில் சிலர் ரகசியமாக ஆயுத பயிற்சி செய்வதாக மையில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலையில் இருந்து அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்தனர். அங்குள்ள தென்னந்தோப்பில் சணல் என்ற பெயரில் அறக்கட்டளை அலுவலகம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அந்த கட்டிடத்தில் சிலர் ரகசியமாக ஆயுத பயிற்சி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கு அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அங்கு ஏராளமான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், அரிவாள்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், தேச விரோதத்து தூண்டும் வகையிலான துண்டு பிரசுரங்கள், ஈரான் நாட்டை சேர்ந்த அடையாள அட்டைகள், மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறி்முதல் செய்யப்பட்டன. போலீசார் உள்ளே நுழைந்த போது அங்கு சிலர் ஆயுத பயிற்சி நடத்தி கொண்டிருந்தனர். தப்பி ஓட முயன்ற அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
நாரத்து பகுதியை சேர்ந்த அப்துல் சமது, அசீஸ், ஹஜ்மல் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 21 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWS FROM : THAT'S TAMIL NEWS 
Published: Thursday, April 25, 2013, 10:36 [IST] 

Tuesday, April 9, 2013

நபி மொழிகளும் நவீன விஞ்ஞானமும்


                                 


நபி மொழிகளும் நவீன விஞ்ஞானமும்

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

من يكشف مجري الدم ؟

     உணவு உட்கொள்ளப்பட்டவுடன்,  அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள்உறிஞ்சப்பட்டுசக்கைகள் வேறாகவும்சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறுபாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போதுஅதன் வேகம் மணிக்கு 65கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால்வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன்அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து,மாவுச் சத்துபுரதம்தாதுப் பொருள்கள் வடிவத்தில்ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.
இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட­ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
 இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டத்தை முதன் முத­ல் கண்டுபிடித்தவர் யார் ?

உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும்உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார்.

வில்­யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உட­ல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமாஇதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

2038 حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا  رواه البخاري

2038 ஸஃபிய்யா (ர லி­அவர்கள் அறிவிக்கிறார்கள் :
     நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ''அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!''என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போதுஅன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துஅவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ''இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!'' எனக் கூறினார்கள். அவ்விருவரும்''சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!'' என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''நிச்சயமாக ஷைத்தான் மனிதனின்இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்'' என்று தெளிவுபடுத்தினார்கள்.
நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ''உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.(அல்குர்ஆன் 34 : 6)

மௌலவி கே.எம்.அப்துந் நாஸிர்,

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!


                                                       

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!

மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இரண்டு வகையான தவறுகள்

தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள். இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள்.
தவறுகளை காணும்போது நாம் செய்ய வேண்டியவை என்ன?
வெளிப்படையாக செய்யப்படும் தவறுகளை நாம் விமர்சனம் செய்யலாம். அதைக்கண்டிக்கலாம். அதை பகிரங்கப்படுத்தலாம்; அவர்களைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்கள் இத்தவறுகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்.


இப்படி இல்லாமல் மறைமுகமாக உட்கார்ந்து யாருக்கும் தெரியாமல், அதை நேரத்தில் யாருக்கும் அந்த தவறு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இருக்குமானால் அதை வெளிப்படுத்தக்கூடாது. அதை பகிரங்கமாக கண்டிக் கக்கூடாது. அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவரின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும்.

துருவித் துருவி ஆராயக்கூடாது

இவர் தவறு செய்கிறாரா? என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அவரின் அனைத்து நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு செய்து கொண்டிருக்கக்கூடாது. பொதுவாக எல்லாரையும் நல்லவராகவே எண்ண வேண்டும். தவறு செய்திருக்க முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (49 : 12)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகüலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கüன் குற்றங் குறை களை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொ ருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்க ளாய் இருங்கள்.
நூல்: புகாரி (5143)

பிறர் தவறு செய்து அது நம்முடைய பார்வைக்கு வருமானால் நேரடியாக அவரை சந்தித்து அவர் செய்யக்கூடிய பாவத்தின் தண்டனையை பற்றி நாம் அவருக்கு விளக்க வேண்டும். மறுமையை பற்றி அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் அவரின் பாவத்தை வெளிப்படுத்தி னால் இதனால் ஏற்பட்கூடிய விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.

ஏற்படும் விளைவுகள்

மக்களின் குறைகளை நீ ஆராய்ந்தால் நீ அவர்களை பாழாக்கிவிட்டாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் (4244)
ஒருவர் புகை பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் புகை பிடிப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இப்பபோது இதை நாம் பகிரங்கப்படுத்தும்போது மறைமுகமாக தவறு செய்தவர் நாளை நம்முடைய முகத்துலே அதன் புகையை ஊதி தள்ளுவான்.
இதை பகிரங்கமாக செய்தவதால் இதைப்பார்க்கும் மற்றவர்களும் செய்வ தற்கு துணிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தீமை அவனோடு ஒட்டிக்கொண்டு அடுத்தவர்களையும் ஈர்க்கும் நிலையும் ஏற்படும்.

மறுமையில் ஏற்படும் தண்டனை

யாருடைய பாவத்தை நாம் துருவித் துருவி ஆராய்ச்சி செய்யும் நாமும் கூட தவறுகளுக்கு உட்பட்டவர்கள்தான். அவர்களிடம் ஒரு குறை. ஒரு தவறு இருந்தால் நம்மிடம் வேறொரு குறை, தவறு இருக்கும். இந்த தவறுகள் நாளை மறுமையில் பலருக்கு முன்னால் வெளிப்படுத்தி அவமானப்படாமல் இருக்க வேண்டுமானால் நாம் இம்மையில் நம்முடைய பார்வைக்கு வந்த குறைகளை தவறுகளை மறைத்தாக வேண்டும். அப்படி மறைக்காத பட்சத்தில் நம்முடைய குறைகளை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி யிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாüன் துன்பங் கüல் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாüல் அல்லாஹ்வும் மறைக்கின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி (2442)

காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும்

பிறரின் குறைகளை கேட்பதற்காக மற்றவர்களின் உரையாடலை கேட்பவ னுக்கு மறுமை நாளில் அவனின் காதில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் தண்டனை கொடுக்கப்படும்.
"தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது "தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்' யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாüல் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள் : புகாரி (7042), திர்மிதீ (1673)

வீட்டில் நுழைவதற்கும் அனுமதி தேவை

பிறரின் குறைகளை ஆராயும் வகையில் அமைந்த விஷயங்களை இஸ் லாம் தடைசெய்துள்ளது. அந்தரங்க விஷயங்களில் தலையிடும் வகையில் உள்ளவற்றை தவிர்க்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. இந்த அடிப்படையில் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும்போது ஸலாம் கூறி அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர் களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர் கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப் படும்வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் (24 : 27,28)

இந்த அழகிய நடைமுறையை இஸ்லாமியர் பலர் பின்பற்றுவதில் பிச்சை எடுக்கவரும் நபர்கள்தான் ஸலாம் கூறி பிச்சை கேட்டுக்கும் நிலை உள்ளது.

ஒருவரின் குறைகள் பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக இட்ட முதல் அணை ஒருவருடைய வீடடிற்கு சென்றால் அவரிடம் முதலில் அனுமதி கேட்டுத்தான் செல்ல வேண்டும்.

உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.
அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், "அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!'' என்றார்கள். "அவர் திரும்பிச் சென்றுவிட்டார்!'' என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள்.
("ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?''என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது) அபூமூசா (ரலி) அவர்கள், "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந் தோம்!'' எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டு வாரும்!'' எனக் கேட்டார்கள். உடனே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், "நம்மில் இளையவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்ல மாட்டார்கள்!'' என்றனர்.
அபூமூசா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசை திருப்பிவிட்டது போலும்! என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (2062)

வீட்டில் பதில் வரவில்லையானால் திருக்குர்ஆன் நபிவழியின் அடிப்படை யில் திரும்பிச் சென்றுவிடவேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வீட்டின் கதவின் சாவியின் ஓட்டை வழியாக பார்க்கும் மோசமான நிலையையும் பாôக்கிறோம்.

வீட்டினுல் எட்டிப்பார்ப்பது கூடாது

சிலர் யாரும் கதவை திறக்காத பட்சத்தில் கதவின் சாவியின் ஓட்டைக்குள் கண்ணை விட்டு நுழைத்து ஆராய்வதை பார்க்கிறோம்.
அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (6902)

அனஸ்' பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüன் அறைகüல் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் "கூர்முனையுடன்' அல்லது "கூர்முனைக ளுடன்' அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.
நூல்: புகாரி (6242)

வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்கவேண்டும் என்பது வீட்டில் உள்ளவர்களின் அந்தரகங்களை பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்கüன் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், "நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப் பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப் பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால்தான்'' என்று சொன்னார்கள்.
நூல்:புகாரி (5924)

எனவே பிறரின் குறைகளையும், அந்தரங்க விஷயங்களையும் ஆய்வு செய்யும் காரியங்கள் அனைத்திலிருந்தும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
  

Tuesday, April 2, 2013

யார் மணப்பெண் ?



                            
மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை.

தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான்.

அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது.

ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுவதோடு, திருமணத்தைப் புறக்கணித்து துறவி வேடமிடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஒரு முஸ்லிம் இறைவனை வழிபடுவதைக் காரணம் காட்டிக் கூட திருமணத்தைப் புறக்கணிக்க இயலாது. 
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்-க்கொண்டனர். அவர்கüல் ஒருவர், "(இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
புகாரி 5063

ஒரு நபித்தோழர் முழுக்க முழுக்க இறைவனை வணங்கி வழிபடுவதற்காக திருமணம் செய்யவே மாட்டேன் என்கிறார். இதைக் கண்ட நபியவர்கள் ஆஹா... பேஷ்... பேஷ் என்று பாராட்டாமல் இதை கண்டிக்கின்றார்கள். தான் திருமணம் செய்துள்ளதாகவும் தனது வழிமுறையை புறக்கணிப்பவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்து திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றார்கள்.

இறை வணக்கத்தில் ஈடுபடுவதை காரணம் காட்டிக்கூட திருமணத்தை புறக்கணிக்க இயலாது எனும் போது வேறெந்த காரணத்திற்காகவும் திருமணத்தை புறக்கணிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது என்பதை அறியலாம்.

திருமணம் ஓர் கேடயம்

குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவர்கள் காலம் தாழ்த்தாமல் திருமணத்தை செய்து விட வேண்டும், அதுவே அவர்களை மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டும் தடுக்கும் கேடயமாக திகழும் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கüடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்கüடம் "இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் யஸீத்,
நூல் : புகாரி 5066

திருமணம் என்பது தீமைகளிலிருந்து காக்கும் ஓர் பாதுகாப்பு கருவி என நபியவர்கள் கூறியுள்ளதை காணலாம்.

திருமணம் ஓர் மன அமைதி

பல்வேறு காரணங்களால் நிம்மதியை இழந்து, மனஅமைதியை தொலைத்து தவிக்கும் ஆண்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, இழந்த மன அமைதியை திரும்ப பெறுவதற்காக திருமணமே மிகச் சிறந்த வழி என இறைவன் கூறுகிறான்.
"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 7:189

ஒருவரின் கட்டுப்பாடான, நிம்மதியான வாழ்க்கைக்கு திருமணம் வழிவகுக்கும் என இறைவனும் இறைத்ததூதரும் உத்தரவாதம் அளித்துள்ளதை இதிலிருந்து அறிகிறோம்.

திருமணத்தின் மூலம் என்ன பயன் ஏற்படும் என்று இறைவனும் இறைத்தூதரும் உத்தரவாதம் அளித்துள்ளார்களோ அது நடைமுறையில் இல்லை என பலர் புலம்புவதை காணமுடிகிறது.
உண்மை தான். இன்றைக்கு பலர் என்றைக்கு நான் திருமணம் செய்த அன்றே எனது நிம்மதி பறிபோய் விட்டது என புலம்பித் தவிக்கிறார்கள்.
இவர்களுக்கு இறைவன் வாக்களித்த நிம்மதி திருமணத்தின் மூலம் ஏற்படவில்லையே?

இன்னும் பலர் திருமணம் செய்த பிறகும் அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு திருமணம் தீமைகளிலிருந்து காக்கும் அரணாக இல்லையே? ஏன்?
எவரைத் திருமணம் செய்தாலும் இறைவன் வாக்களித்தது கிடைத்து விடாது. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என இறைவன் அறிவுறுத்தியுள்ளானோ அப்பெண்ணை மணந்தால் தான் இறைவன் வாக்களித்த மன அமைதியை, கட்டுப்பாட்டைப் பெற முடியும். அது சரி.

யாரந்த மணப் பெண்?

மார்க்கப்பற்றும் மறுமை வெற்றியும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
புகாரி 5090

மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்ய வேண்டும் என நபிகளார் கூறுவதோடு அவள் மூலம் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் இந்த செய்தியில் தெரிவிக்கின்றார்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு, கருத்து வேறுபாடுகளுக்கு மணப்பெண்ணை தேர்வு செய்வதில் உள்ள குளறுபடியே அடிப்படை காரணமாக திகழ்கின்றது. மேற்கண்ட புலம்பலுக்கும் தவிப்புக்குமான காரணம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்யாததே என்பதை திட்டவட்டமாக கூறலாம்.

நல்ல பெண்ணே சிறந்த செல்வம்

இஸ்லாம் நல்லொழுக்கமுள்ள பெண்ணை மணந்து கொள்ள சொல்வதின் காரணம் ஒழுக்கமுள்ள பெண்ணுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கி அவளை கண்ணியம் செய்கிறது. உலகில் குவிந்து கிடக்கும் செல்வங்களில் நல்ல பெண்ணே சிறந்த செல்வம் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
முஸ்லிம் (2911)

ஒரு மனிதன் உலகில் திரட்டும் பொக்கிஷங்களில் சிறந்த பொக்கிஷம், பொற்புதையல் நல்ல பெண்ணே.

ஒரு மனிதன் சேகரிப்பதில் மிகச் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? அவள் நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள். அவளை அவன் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமலிருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவர்களை) பாதுகாத்துக் கொள்வாள் என்று நபியவர்கள் உமரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் (1417)

நல்லொழுக்கமுள்ள பெண்ணிற்கு இவ்வுளவு உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்குவதாலே மணப்பெண்ணை தேர்வு செய்வதில் ஒழுக்கத்திற்கும், மார்க்கத்திற்கும் முதலிடம் ஒதுக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடுகிறது.

ஒருவர் மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதினால் அவரது வாழ்வில் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்கிறார். அவரது நிம்மதியான வாழ்விற்கு பல வகையில் ஒழுக்கமுள்ள பெண் அடித்தளமாக திகழ்கிறாள்.

குடும்ப நலனில் அக்கறை

நல்லொழுக்கமுள்ள பெண் தனது கணவனின் வீட்டாருக்கு, தான் ஆற்ற வேண்டிய கடமைகளை, பணிகளை அறிந்து, அது தொடர்பாக மார்க்கம் கூறும் பின்வரும் போதனையை எப்போதும் நினைவில் நிறுத்துக் கொள்கிறாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாüயாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), புகாரி 2554

என் கணவனின் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைப்பற்றி இறைவன் விசாரிப்பான் என்ற கடமையுணர்வு மார்க்கப்பற்றுள்ள பெண்ணிடத்திலேயே இருக்கும். ஆதலால் அவள் தனது கடமைகளை செம்மையாக நிறைவேற்றுவாள்.

குடும்பத்தில் செய்ய வேண்டிய இதர வேலைகளை மாமியார் (பிறர்) சொல்லி செய்யப்படும் நிலை இருக்காது. தானே மனமுவந்து குடும்ப வேலைகளை இழுத்து போட்டு செய்வதால் குடும்ப உறுப்பினர்களின் அன்புக்கு பாத்தியப்பட்டவளாக மாறிவிடுவாள்.
எனவே கணவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லும் நிகழ்வுகளுக்கு இடமில்லாது போவதால் கணவனின் உளரீதியான பல பிரச்சனைகளுக்கு இது முற்றுப்புள்ளியாக அமையும். இந்த ரீதியில் கணவனுக்கு பெருமளவு நிம்மதி ஏற்படும் என்பது உறுதி.

ஒழுக்க ரீதியாக...

நல்லொழுக்கமுள்ள பெண்ணை மனைவியாக தேர்வு செய்வதால் நமது குடும்பமும் ஒழுக்கமுள்ளவர்களாக, ஓரளவு மார்க்கப்பற்றுள்ளவர்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

ஜாபிர் (ரலி அவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது தங்கள் சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவர்களை பராமரிக்கும் பண்புள்ள, ஒழுக்கமுள்ள பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸிலிருந்து அறிகிறோம்.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) "நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா?'' என்று கேட்டிருந்தார்கள்.அதற்கு நான்,"வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்'' என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், "கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே'' என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள்...அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்'' என்று பதிலüத்தேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (2967)

மார்க்கப்பற்றுள்ளவளை மனைவியாக தேர்வு செய்வதாலே நமது குடும்பம் சொர்க்கப்பாதையை நோக்கி பயணிக்கும் ஒரு வாய்ப்பு வாய்க்கும் என்பதை நினைவில் கொள்க.

குழந்தை வளர்ப்பில் அக்கறை

நல்லொழுக்கமுள்ள பெண் கணவனின் குடும்ப நலனில் பொறுப்போடு நடந்து கொள்வது போல் தங்களின் குழந்தை வளர்ப்பிலும் கடமையுணர்வோடு நடந்து கொள்வாள்.

. பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாüயாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
புகாரி (2554)

இன்று பலரும் தீயவர்களாக, இறைவனின் வெறுப்பிற்குரியவர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு முறையே.

குழந்தைகளை எப்போது கண்டிக்க வேண்டும்? எந்த இடத்தில் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இடம் பொருள் தெரியாமல் தங்கள் குழந்தைகள் தறுதலைகளாக மாறுவதற்கு ஒரு விதத்தில் பெற்றோர்களே காரணமாய் அமைந்து விடுகின்றார்கள்.
தீமையான காரியங்களில் ஈடுபட பணம் கேட்டாமல் மறுப்பேதுமின்றி வழங்குவது, தீய நண்பர்களோடு சகவாசம், தொழுகையை புறக்கணித்து உறக்கம், தொலைக்காட்சியில் மூழ்கி விடுதல் போன்ற காரியங்களில் குழந்தைகள் ஈடுபடும் போது தக்க அறிவுரைகளையும் கண்டிப்புகளையும் வழங்க பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள்.

இது போன்ற குறைகள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணப்பெண்ணாக தேர்வு செய்வதால் வேறோடு பிடுங்கி, களையெடுக்கப்படும். அவளது அன்பு கலந்த கண்டிப்பினால் நமது குழந்தைகள் நல்லவர்களாக, ஒழுக்கசீலர்களாக மாறுவார்கள்.

கணவனுக்கு நல்ல துணையாக

யாருக்கேனும் சிரம் பணிய வேண்டும் என ஒருவருக்கு நான் கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு சிரம்பணிய வேண்டும் என பெண்ணுக்கு கட்டளையிட்டிருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதி 1079

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
, நூல் : புகாரி (3237)

குறிப்பாக நல்லொழுக்கமுள்ள பெண் இது போன்ற கணவனுக்கு கட்டுப்படுவதின் அவசியத்தை உணர்ந்து, அவனுக்கு செய்ய வேண்டிய கடமையறிந்து செயல்படுபவளாக இருப்பாள்.

கணவன் கவலையில் வாடும்போது ஆறுதல் கூறுபவளாக, வறுமையில் உழலும் போது இருப்பதைக் கொண்டு போதுமாக்கி கொள்ளும் தாராள மனப்பான்மையுடையவளாக, கணவனின் நெளிவு சுளிவுகளை அறிந்து நடப்பவளாக இருப்பாள். இப்படி நல்லொழுக்கமுள்ள பெண்ணிண் மூலம் ஒரு ஆண் அடையும் நன்மைகள் பற்பல.

ஒரு சில தம்பதிகள் சிறுசிறு விஷயங்களுக்காக எழுத சகிக்காத வார்த்தைகளால் சதா ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பார்கள். மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணமகளாக தேர்வு செய்வது இது போன்ற பலபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்கும். ஒருவரையொருவர் புரிந்து நடக்கும் சூழல் கனியும்.
இது போன்ற இன்னும் பல நன்மைகளை அனுபவித்தே உணரமுடியும். அவைகளை எழுத்தில் வடித்திட முடியாது.

ஆகவே திருமணத்திற்கு பிறகு நமது வாழ்க்கை இனிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது அழகு, குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒழுக்கம் மார்க்கப்பற்று ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதுவே நிம்மதியான, கட்டுப்பாடான வாழ்க்கைக்கு அச்சாரமாய் அமையும் என்பதை இறுதியாக நினைவூட்டிக் கொள்கிறேன்.
(குறிப்பு ; மேற்கூறப்பட்ட விஷயங்கள் யாவும் பெண்கள் மணமகனை தேர்வு செய்வதற்கும் பொருந்தக்கூடியதே)

அப்துல் கரீம், துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்