Sunday, June 22, 2014

அதிரை WSC நடத்திய மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியில் திருச்சி - அதிரை - மதுரை- திருப்பூர் அணியினர் பரிசை தட்டிச்சென்றனர் !


அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான 14 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று மேலத்தெரு WSC மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

நேற்று இரவு முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக  நடைபெற்று வந்த ஆட்டத்தில் பல்வேறு ஊர்களை அணிகள் பங்கேற்று ஆடியது. போட்டியின் இறுதியில் முதல் பரிசை திருச்சி அணியினர் ரூபாய் 20,000/ த்தையும்,இரண்டாம் பரிசைஅதிரை KMC அணியினர் ரூபாய் 15,000/ த்தையும்,  மூன்றாம் பரிசை மதுரை அணியினர் ரூபாய் 10,000/ த்தையும், நான்காம் பரிசை திருப்பூர் அணியினர் ரூபாய் 8,000/ த்தை  தட்டிச்சென்றனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரை KMC அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் ஜமீம் ஆட்ட நாயகன் பரிசை தட்டிசென்றார்.

இன்றைய ஆட்ட இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை காவல்துறை அதிகாரிகள், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி  ஆசிரியர் திரு ராமச்சந்திரன், தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், WSC முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள்.

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படும் வரதராஜன் மற்றும் அருள் ஜோதி ஆகியோர் இன்றும் நேற்றும் நடைபெற்ற  போட்டிகளுக்கு நடுவர்களாக பணி புரிந்தனர். நிகழ்சிகளை ராஜேந்திரன் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்றைய இறுதி ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகைதந்து ரசித்தனர்.வந்திருந்த அனைவருக்கும் அமர்ந்து பார்வையிட நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களத்திலிருந்து அப்துல் வஹாப் ( உஜாலா )













thanks to adirai news .net 

வாகனப் பதிவு – விரிவான அலசல்


வாகனப் பதிவு என்றால் என்ன?
வாகனப்பதிவு என்பது அந்த வாகனத்தின் அடையாளம். சம்பந்த ப்பட்ட வாகனத்தின் முழு விவரமும் வாகனப் பதிவு சான்றிதழில்
இடம் பெறும்.
ஏன் வாகனப் பதிவு செய்ய வேண்டும்?
25 சி.சி. திறன் தொடங்கி அத ற்கு அதிகமான சி.சி. திறன் கொண்ட வாகனங்கள் எதுவு ம் மோட்டார் வாகன சட்டத்தி ன்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய ப்படாமல் சாலையில் இயங் கக்கூடாது. அதற்காக வாக னத்தை பதிவு செய்ய வே ண்டும்.
எத்தனை நாட்களுக்குள் வாக னத்தைப் பதிவு செய்ய வேண்டு ம்?
வாகனத்தை வாங்கியதில் இரு ந்து 7 நாட்களுக்குள் சம்பந்தப்ப ட்ட வாகனம் வட்டார போக்கு வரத்து அலுவலகம் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப் பட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்கு வது சட்டப்படி குற்றமா கும். அப்படி இயக்கினால் அபராதம் விதி க்கப்படும்.
வாகனப் பதிவில் என்னெ ன்ன வகைகள் உள்ளன?
தற்காலிக மற்றும் நிரந்த ரப் பதிவு என இரு வகை உண்டு. சிலர் வாகனத் தை சொந்த மாவட்டம், மாநிலம் நீங்கலாக வேறுஇடத்தில் வாங் க நேரிடும். எனினும் பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையி ல் இயக்கக்கூடாது என்பதால், வாகனம் வாங்கிய இடத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்து கொள் ள வேண்டும்.
இது தற்காலிகப் பதிவு. இந்தப் பதிவு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அ தற்குள் தங்களது வாகனங்க ளை சம்பந்தப்பட்ட உரிமையாளர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத் து வந்து நிரந்தரப் பதிவு செய்து கொள்ளவேண் டும்.
வாகனப் பதிவுக்கான வழி முறைகள் என்ன?
வாகன விற்பனையாள ர், அதை வாங்குவோரி டம் பதிவு செய்யாமல் வழங்கக் கூடாது என மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிற து. அதன்படி படிவம் 20, 21 உட்பட இருப்பிடச்சான்று, வாகனத்தை விற்பனை செய்ததற்கான படி வம் மற்றும் வாகனத்தை வட் டாரப் போக்குவரத்து அலுவல கத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் கவனத்திற்கு…! எச்ச‍ரிக்கைப் பதிவு !!!!!!!!!!!!!!!

ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக் கிய கவனத் திற்கு . . .


பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்து வ நெறிமுறைகள் தனியா க உள்ளன. தனியார் மருத் துவமனை, தனியார் கிளி னிக்கிற்கு சிகிச்சைக்கு வ ரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போ து, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியா ளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன்







வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்க லாம்.
பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிற கு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல் ) செ ய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிட ம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய் ய வேண்டும். வயிறுவலி, கல்லீ ரல், சிறுநீரகம்போன்ற பிரச்ச னைகளுடன் பெண்கள் வருவார் கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச்சனையைக் கண்டறிய முடியும்.
இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெ ண் நோயாளியின் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னரே பெ ண் நோயாளியின் வயிற்றை தொட வோ
, அழுத்தவோ, தட்டிப்பார்க்க வோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவி த்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டு ம்;
புகார் கொடுக்கலாம்:
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவ றான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால்,
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சி லில் பாதிக்கப்பட்ட பெண் புகா ர் அளிக்கலாம். அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண் மை என்று தெரியவந்தால், அந் த டாக்டர் மீது நடவடிக்கை எடு க்கப்படும் என்று இந்திய மருத் துவச்சங்கத்தின் தமிழக தலைவர் தெரிவித்தார்.


Saturday, June 21, 2014

அதிரை WSC நடத்திய மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !


அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான 14 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத்தில் இன்று [ 21-06-2014 ] இரவு 7 மணியளவில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய முதல் ஆட்டமாக மதுரை அணியினரும், திருப்பூர் அணியினரும் ஆடினார்கள். அதனைத்தொடர்ந்து அதிரை KMC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினார்கள்.

முன்னதாக இன்றைய முதல்நாள் ஆட்டங்களை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட காவல்துறை ஆய்வாலர் திரு.ரவிசந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் MMS அப்துல் கரீம், தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் M.M.S சேக் நசுருதீன், பொருளாளர் பகுருதீன், சமூக ஆர்வலர்கள் மான் சேக், ரபி அஹமது மற்றும் WSC நிர்வாகிகள் ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி துவக்கி வைத்தனர்.

ஜொலிக்கும் மின்னொளியில் இரவு நேர ஆட்டங்களாக இன்றும் நாளையும் நடைபெற இருக்கின்ற போட்டிகளில் மாநில அளவில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தலைசிறந்த அணிகள் ஆட இருக்கின்றனர். இதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் சிறந்த அணிகளுக்கு நாளை நடக்கும் இறுதிபோட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களால் பல்வேறு பரிசளிப்புகள் வழங்கபட இருப்பதாக போட்டியை நடத்துபவர்கள் தெரிவித்தார்கள்.

TIYA மற்றும் WSC ஆகியோர் இணைந்து வழங்க இருக்கின்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புக்குகள், 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நமதூர் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிப்பு மற்றும் நலிவடைந்த 5 ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி ஆகியன வழங்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள். 

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படும் வரதராஜன் மற்றும் அருள் ஜோதி ஆகியோர் இன்றும் நாளையும் நடைபெற உள்ள போட்டிகளுக்கு நடுவர்களாக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. நிகழ்சிகளை ராஜேந்திரன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்றைய முதல் நாள் ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகைதந்து ரசித்தனர்.வந்திருந்த அனைவருக்கும் அமர்ந்து பார்வையிட நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களத்திலிருந்து அப்துல் வஹாப் ( உஜாலா )














thanks to adirai news .

Sunday, June 1, 2014

இஸ்லாம் மதத்துக்கு மாறினார்...அழகி மோனிகா இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்!

    


சென்னை:

பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

                           

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மோனிகா, அழகி, சிலந்தி உள்பட ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தார். சிலந்தியில் அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

சந்திப்பு

                         
                              


இடையில் தமிழ்ப் படங்களில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இன்று திடீரென செய்தியாளர்களை ஆர்கேவி ஸ்டுடியோவில் சந்தித்தார் மோனிகா.

பேட்டி


                           

அவர் கூறுகையில், "குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன்.
அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.


பணத்துக்காக அல்ல

                              


பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன்.


திருமணம்


எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன் . எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்


புதிய பெயர்


பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் இப்போது என் பெயர் 'எம் ஜி ரஹீமா'. அதாவது மாருதி ராஜ் கிரேஸி ரஹீமா (அம்மா அப்பா பெயருடன் புதிய பெயர்).


நடிக்க மாட்டேன்


மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.

THANKS TO THATS TAMIL NEWS