Wednesday, May 16, 2012

18ம் தேதி துபாயில் இலவச சட்ட உதவி முகாம்

                                          


துபாய்:  துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் வரும் 18ம் தேதி மாலை 4 ம‌ணி முத‌ல் 6 ம‌ணி வ‌ரை தேராவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த‌ ச‌ட்ட‌ உத‌வி முகாமில் ப‌ங்கேற்று ஆலோச‌னை வழங்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வி. நந்தகுமார்.

அமீரகத்தில் வாழும் தமிழர்கள் த‌மிழ‌க‌த்தில் த‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ச‌ட்ட‌ உத‌விக‌ள் குறித்து ஆலோச‌னை பெற‌லாம். அமீர‌கத்தின் பிற‌ ப‌குதிக‌ளில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் தொலைபேசி வ‌ழியாக‌ ஆலோச‌னை பெற‌லாம்.

அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள் இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உதவி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 1321722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment