Monday, February 27, 2012

11வது காஜாமியான் கோப்பை ஹாக்கி போட்டி - திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் துவக்கம்

          

திருச்சி: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இன்று காலை 7 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையிலான காஜாமியான் கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஓப்புதலுடன் இயங்கி வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இன்று காலை 7 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையிலான காஜாமியான் கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

கல்லூரியின் முன்னாள் தாளாளர் எம்.ஜே. எம்.அப்துல் கபூஃர் சாஹிப், துணைச் செயலாளர் எம்.ஜே.ஜமால் முஹம்மது சாஹிப் ஆகியோர் சேர்ந்து போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இன்று மாலை 4.45 மணிக்கு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.காதர் முஹைதீன் தலைமை தாங்க உள்ளார். கல்லூரி செயலாளர் ஏ.கே.காஜா நஜீமுதீன் சாஹிப், கே.ஏ. கலீல் அஹமது சாஹிப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இறுதியாக திருச்சி நகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஜெயபாண்டியன் பரிசுக்கோப்பையை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்துவார்.

Saturday, February 25, 2012

அதிரை அல் அமீன் பள்ளி : நீண்ட விவாதத்தில் சுமூக முடிவு !


                                           

அதிரை "அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு " சார்பாக இன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்

                                          

இக்கூட்டத்திற்குப் அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF )சார்பாக அதன் நிர்வாகிகள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா போன்ற அதிரையைச் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.



                                                          

நிகழ்ச்சியின் நிரலாக....................1.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான விவாதம் சுமார் 4 மணி நேரங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

                                  
2.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமாக இதுவரையில் கூட்டப்பட்ட ஆறு கூட்டங்களும் தோல்வியில் முடிந்தது என்றும் இந்த ஏழாவது கூட்டம் கண்டிப்பாக வெற்றியாக அமையவேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


                                  

3.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி அவர்களின் வழக்குகள் சம்மந்தமான விளக்கங்களுடன் கூடிய உரை சுமார் 1.30மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

                                 

4.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகம் சார்பாக வழக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய நகல்கள் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் கொடுக்கப்பட்டது.

                                

5.       இப்பள்ளி அமைய மர்ஹூம் M.M.S. அப்துல் வஹாப் சாச்சா அவர்கள் எவ்வாறு உதவி புரிந்தார்கள் என்பதை அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி , அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF )  தலைவர் M.M.S. சேக் நசுருதீன் போன்றோர்கள் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
 
                               

   6.       அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) செயலாளர்  பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லாம் மற்றும் உறுப்பினர்கள் சகோ. இப்ராகிம், சகோ. செய்யது, சகோ.காதர், ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொருளாளர் சகோ. செய்யது, சகோ. சாகுல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி சகோ.அன்வர் அலி ஆகியோர்கள் உரைகள் நிகழ்த்தி அல் அமீன் ஜாமிஆ பள்ளி கட்டவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டப்பட்டது


7.       நிகழ்ச்சிகளை தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.


கூட்டத்தின் தீர்மானம் :
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகியோர்கள் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர்M.M.S. சேக் நசுருதீன்,  செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ.பரகத் அலி மற்றும் அதிரை இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.



நிகழ்ச்சியின் இறுதியாக துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

Thanks : Adirai.in

Tuesday, February 21, 2012

கள்ளக்காதல் ஓர் உளவியல் பார்வை

 
                                 
 
திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும்.

இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூடா உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி விட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன. இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்பு இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர். இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே! அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால். எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன. மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது.

பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார். படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர். இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.

படிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியலாம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம்.

வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.

தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.

அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவிலக்குப் பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன.

திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு/ ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது.மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்குவீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய் இல்லை. ஆர்குட்டில் ஆரம்பித்து, பேஸ்புக்,டிவிட்டர்- என நீளும் இணைய தளத் தொடர்புகள் ஏழுகடல்,ஏழுவானம் தாண்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் இராஜகுமாரியைக்கூட எளிதில் வசப்படுத்தும் நவீன சிலந்தி வலையாக அமைந்துள்ளது இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்

ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ,அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.

வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.

அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு வழிவகுக்கும் செயல்காளகும்.

அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர் அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.


வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர்.இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர். சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர்.

தீர்வுகள்


குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிட்டாது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம்.“ ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணத்தை விடச் சிறந்த உறவு எதுமில்லை” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணம் என்பது புனிதமானது. அது ஒரு அறச் செயல்,வழிபாடு. அதனை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக் கொள்வது விபரீதத்தில்தான் முடியும்.


முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள் 
“திருமணம் இறைநம்பிக்கையில் ஒரு பகுதி”(நூல் பைஹகி)
“ திருமணம் என்பது எனது வழிமுறை”(இப்னு மாஜா)
“தாம்பத்திய உறவும் ஒரு அறமே” (முஸ்லிம்)


وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ۚ ذَٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَِ
 “....அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான். மேலும் , தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றினான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு தானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்!” (குர்ஆன் 7:176)


எனவே நாயைபோல் அலையாமல் தீய இச்சைகளிலிருந்து மனதைத் தடுத்து கள்ள உறவுகளிலிருந்து தப்புவதற்கான தீர்வுகளை அடுத்த பதிவில் (இறைநாடினால்) விரிவாக பார்போம். தொடரும்

Monday, February 20, 2012

எடை குறைய எதை செய்யக்கூடாது ?

 
                               
 
எடை குறைய எதை செய்யக்கூடாது ?

உடல் பருமன் என்பது இன்றைக்கு அதிகம் பேசப்படக்கூட...ிய விசயமாக உள்ளது. எடை குறைப்பு விளம்பரங்கள் ஒரு பக்கம் காசை கறக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் தாங்களாகவே எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் பலர். உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம் என்பதை விட எதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.

காலை உணவுக்கு கட் கூடாது

எடை குறைப்பு முயற்சிக்கு முதலில் செய்வது உணவை தவிர்ப்பது. அதுவும் பெரும்பாலோனோர் காலை உணவை கட் செய்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர். இது தவறான பழக்கம் என்கின்றனர் உணவியலாளர்கள்.

இரவில் உண்ட உணவு ஜீரணமாகி உடலானது சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான ஆகாரத்தை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலை நேரத்தில் அதிக அளவில் உணவுகளை உண்ணாமல் ஜூஸ், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.

மாவுச்சத்து உணவுகள்

உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள்தான் எதிரி என்று நினைத்துக் கொண்டு அனைத்துவகையான கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்த்து விடுவர். இது தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது. அதேசமயம் உடலுக்கு தீங்கு விளைக்கு விளைக்கும் சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம். அதேசமயம் புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள், மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

நொறுக்குத்தீனி

உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கிலோ, திரைப்படம் பார்க்கும் போதோ கிலோ கணக்கில் சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதமாக உட்கொள்ள முடியாதவர்கள் காய்கறி சாலட்ஸ், பழங்கள் போன்றவைகளை உட்கொள்ளலாம் இது உடல் எடையை குறைக்கும்.

சரிவிகித கலோரி

அதிக கலோரி தரும் உணவுகளை தவிர்க்கிறேன் பேர்வலி என்று எதையாவது உண்ணக்கூடாது. பாதாம் பருப்பு, மூன்று ஆப்பிள் பழங்களை உண்ணும் போது கிடைக்கும் கலோரி சீஸ்பர்கரும், கோக் குடிப்பதன் மூலமும் ஏற்படும். எனவே எந்த விகிதத்தில் கலோரி உணவுகளை உட்கொள்கிறோம் என்பது முக்கியம் என்கின்றனர் உணவியலாளர்கள்.

எடைக் குறைப்பு சாதனங்கள்

உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள், மாத்திரைகள் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த பொருட்கள் உடல் எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது என்கின்றனர் உணவியலாளர்கள். நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நாம் சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்பதே அவர்களின் அறிவுரை.

நன்றி தட்ஸ்தமிழ்

Sunday, February 19, 2012

குழந்தைகளை பலாத்காரம் செய்யும் கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம்தான் சரியான தண்டனை

                                                         

புது டெல்லி : டெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. தீர்ப்பில் அவர் கூறியதாவது:

குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை. ஆனால், இந்தியாவில் அதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுபோன்ற மிருகங்கள், சமூகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை இதுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அரசு சார்பில் அந்த குழந்தைக்கு உடனடியாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள், வாழ்நாள் முழுவதையும் சிறையில் தான் கழிக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக அமையும் என்று நம்புகிறேன்.இவ்வாறு நீதிபதி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் இந்தியா வில் அதிகரித் துக் கொண்டே போகிறது. இந்நிலையில், குழந்தை களை பாலியல் கொடுமை செய்யும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுவாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களால்தான் பாலியல் தொந்தரவுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதும், குறிப்பாக 5 முதல் 12 வயதுள்ள சிறுவர் சிறுமிகளே இதுபோன்ற கொடுமைக்கு பெரிதும் ஆளாக்கப்படுகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் வெளிச்சத்துக்கு வராத இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை எத்தனையோ?

எப்போ வரும் இதுபோன்ற சட்டம்

குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் கொடூரன்களுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்ய சட்டபூர்வமாக அனுமதிக்கும் நாடுகள்:

ணி அமெரிக்காவில் கலிபோர்னியா, புளோரிடா, ஜியார்ஜியா, லூசியானா, மோன்டேனா, ஓரிகான், டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சின் போன்ற 8 மாகாணங்களில் இதுபோன்ற தண்டனைக்கு சட்டத்தில் இடம் உள்ளது.
ணி தெற்கு கொரியாவில், கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அதில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்க அனுதிக்கப்பட்டு உள்ளது.
ணி போலந்து நாட்டில், குழந்தைகள், குடும்பத்தினரிடம் தகாத முறையில் நடந்து பாலியல் கொடுமை செய்பவர்களு க்கு கடந்த 2010ம் ஆண்டு ஆண்மை நீக்கம் செய்ய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
ணி செக் குடியரசு நாடுகளில் இதுபோன்ற குற்றம் செய்பர்வளுக்கு, இந்த கடுமையான தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு வரை 394 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
எப்போது வரும் இந்தியாவில் இதுபோன்ற சட்டம்? அப்போது தான் தீரும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் கஷ்டம்.

Saturday, February 18, 2012

அதிரையில் தொடர்கிறது வாகன சோதனை

DSC00372

அதிரையில் ECR ரோட்டில் RDO முருகன் தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்றது இதில் பல வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன இதில் ஓட்டுனர் உரிமம்,வாகன காப்பிடு, மற்றும் வாகன உரிமம் பரிசோதித்தனர். RDO கூறுகையிள் ECR ரோட்டில் அதிகபடியான வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.வாகனம்  வைத்திருப்பவர்கள் பார்த்து கவனமாக செல்லும்படி RDO முருகன் அறிவுறுத்தினார் ,மேலும் முக்கியம்மாக தலை கவசம் அனியும்படி கேட்டுக்கொண்டார்.


நன்றி : AdiraiPlus

Thursday, February 16, 2012

The Tamil Nadu team which won the senior National volleyball championship .

                                             Tamil Nadu's future looks bright
Tamil Nadu's volleyball team looks formidable. The State will dominate the game, at the national-level, for quite sometime. By K. Keerthivasan.
                                           
The Tamil Nadu team which won the senior National volleyball championship.

Five of the 12 players, who donned the National colours in the Guangzhou Games, played for Tamil Nadu in the senior National volleyball championship. And this turned out to be the major factor in the host clinching the men's title in the Velammal's Silver Jubilee National championship held in Chennai.
While blocker G. Pradeep, setters M. Ukkrapandian and Balwinder Singh, libero S. Kanagaraj and attacker Naveen Raja Jacob were part of the Indian team's campaign in China, John Christopher and Selvaprabhu played for India at the junior level.
Of course, not all the Indian players made it to the Tamil Nadu team automatically. They were made to play the State championship at Jolarpet, (Vellore District) to be considered for selection. The axing of P. S. Srikanth, who played in Guanzghou, due to poor fitness and form was debated.
But once the tournament began, attention shifted to Tamil Nadu's wonderful performance. G. E. Sridharan, Tamil Nadu's chief coach, did a good job. He shuffled the combination according to the demands of the situation.
Every player rose to the occasion, and the opponents found it tough against Tamil Nadu. Barring the final against Kerala, which went to five sets, Tamil Nadu was hardly challenged.
Is this the best Tamil Nadu team we have had in the last decade?
Sridharan, who coached Tamil Nadu that won the men's title way back in 1994, said it's unfair to compare teams of different eras. “Each team was good at that particular time. The good thing is that volleyball in Tamil Nadu is getting better as new players keep knocking at the doors every year.”
Sridharan attributed the vast talent pool to the tireless work of the coaches. Institutions such as IOB, Chennai Customs, Police, Tamil Nadu Electricity Board and SDAT Sports Hostel provide jobs to volleyball players, which is one of the major reasons the sport is alive and kicking in rural and urban areas. “At my level, I only polish them (the players),” Sridharan said.


John Christopher (left) and S. Kanagaraj (yellow shirt) of Tamil Nadu in action against Kerala in the senior National in Chennai.

Sridharan said John Christopher, Ukkrapandian, Pradeep, Shelton Moses and Kanagaraj played above their expectations in the Nationals while Shaheem has scope to improve further. The Dronacharya Awardee said that there was no need to disturb the winning combination. “If you ask me, the same Tamil Nadu team can continue for another five years, of course with minor changes,” he said.
There were phases in Tamil Nadu's campaign when its performance dipped. The attack didn't fire on all cylinders against Kerala in the league, the block was not effective in the early stages of the final and the first pass was below par. But Tamil Nadu overcame all that with self-confidence and team-work.
P. Sundaram, the team's trainer, who has seen the State volleyball scene for the last three years, agreed with Sridharan that the same team could continue for another five years. “The main reason why I say this is because the average age is 24,” he said.
Sundaram, who was part of a successful Tamil Nadu team which won the Nationals for five consecutive years from 1990 to 1994 (he didn't play in 1994), said the similarity between this team and the team in which he played, was the balance in all departments and the camaraderie among players. “Balance is the key,” he said.
Naveen Raja Jacob, who played a stellar-role in the last edition in Gwalior, didn't rise to expectations in Chennai. But Sundaram disagrees. “He is our main attacker. I think he played extremely well in the final.”
Pradeep, Shelton Moses, John Christopher and Selvaprabhu were the heroes in Tamil Nadu's triumph, according to Sundaram. “Throughout the tournament, they were in peak form,” he said.
Tamil Nadu should maintain the momentum it has gathered with more constructive plans. “We were able to win the Nationals because of our good bench strength and the team has the right mix of youth and experience,” said A. Venkatesan, the team's assistant coach. He said for Tamil Nadu to remain a top team, the Clubs and Institutions should continue to recruit volleyball players. There is little doubt that Tamil Nadu's future is bright.

 POSTED BY ADIRAI WSC : TO READ MORE NEWS PLEASE VIST ADIRAI WSC http://wscadirai.blogspot.com/

Wednesday, February 15, 2012

உடல் ஆரோக்கியம் அதிகரிக்க அக்ரூட் ! ஆய்வில்

                                                                                             
 
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
  உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு !


                                

சதாம் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது.


இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !
லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.
இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தப் பொருளாதாரத் தடையுத்தரவுகள், எதிர்த்தரப்பினரைத் தூண்டிவிடுதல், இரகசியக் குழுக்களைக் கட்டி அந்நாட்டினுள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் எனப் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இப்பொழுது அந்நாட்டின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளைக் குவித்து வருகிறது.  இராக்கிலிருந்து தனது கடைசித் துருப்புகளையும் விலக்கிக் கொண்டுவிட்டதாக அறிவித்துள்ள ஒபாமா, அத்துருப்புகளை இரானை அச்சுறுத்தும் நோக்கத்தோடு குவைத்தில் இறக்கிவிட்டுள்ளார். இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.
இரான் இரகசியமாக அணுகுண்டைத் தயாரித்து வருகிறது என்ற தமது புளித்துப்போன குற்றச்சாட்டை நிரூபிக்கவும், இரானை ஓர் பயங்கரவாத நாடென முத்திரை குத்தவும் முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி, அதற்காக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் வழமை போல சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா. மன்றமும் அடியாளாகச் செயல்பட்டு வருகின்றன.
சர்வதேச அணுசக்தி முகமை, “இரான் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடத்தி வந்த பரிசோதனைகளை இன்னமும் கைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக’’க் குறிப்பிட்டு கடந்த நவம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காக இரானைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆக்கப் பணிகளுக்காகத்தான் அணுசக்தி பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக இரான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத சர்வதேச அணுசக்தி முகமை, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரிக்க முயன்று வருகிறது என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தவொரு புதிய சான்றையும் தனது அறிக்கையிலோ தீர்மானத்திலோ சுட்டிக் காட்டவில்லை. மாறாக, இது பற்றிய ஆதாரங்கள் பின்னர் தரப்படும் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தப் புளுகுணி அறிக்கையும் கூட, அதனின் சொந்தசரக்கு கிடையாது. இரானின் அணுசக்திப் பரிசோதனைகள் குறித்து மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் அளித்த விவரங்கள் அடங்கிய ஒரு கணினிக் கோப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சர்வதேச அணுசக்தி முகமை தனது அறிக்கையைத் தயாரித்துள்ள உண்மையும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரும், அமெரிக்காவின் அணுஆயுதத் துறையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவருமான ராபர்ட் கெல்லி, இந்த மோசடியை ஸெய்மோர் ஹெர்ஷ் என்ற பத்திரிக்கையாளரிடம் அம்பலப்படுத்தி பேட்டியளித்திருக்கிறார்.    இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி முகமை ‘தயாரித்த’ அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் முன்பே, அது ‘கடத்தி’ச் செல்லப்பட்டு, மேற்குலகப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் “பிரேகிங் நியூஸாக” வெளியிடப்பட்டது.
இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !இப்படி அறிக்கையைத் தயாரித்ததிலும், அது வெளியானதிலும் நடந்த பல உள்ளடி வேலைகளும் சதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த போதிலும், அமெரிக்க ஆளும் கும்பலும், மேற்குலக ஊடகங்களும் அது பற்றியெல்லாம் கூச்சப்படவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அமெரிக்காவில் இரானுக்கு எதிரான போர்வெறிக் கூச்சல் நாலாந்திர பாணியில் காதுகூசும் அளவிற்கு நடந்து வருகிறது.
‘‘இரானுடன் ஏற்றுமதி  இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அமெரிக்க டாலரைச் செலாவணியாகப் பயன்படுத்தக்கூடாது; யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தினால், பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் யூரோவைப் பயன்படுத்தவில்லை என்று இறக்குமதி செய்யும் நாடுகளின் மத்திய வங்கிகள் சான்றளிக்க வேண்டும்” என மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளை ஏற்கெனவே போட்டுள்ளன. தற்பொழுது, அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையைக் காட்டி, “இரானின் மத்திய வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்களோடு வணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது” என்ற புதிய பொருளாதாரத் தடையுத்தரவை விதித்திருக்கிறார்.
அமெரிக்காவின் இப்புதிய பொருளாதார தடையுத்தரவு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். இரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நாடுகள் அனைத்தும் இரானின் மத்திய வங்கியோடு தொடர்பு வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது.  இந்த நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம், இரானின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலுமாக முடக்கிவிட நரித்தனமாக முயலுகிறது, அமெரிக்கா.
இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும்;  இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் இரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் முக்கியமானவை. ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஜூலை 1 முதல் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக அறிவித்து, அமெரிக்காவின் மனதைக் குளிரவைத்துவிட்டது. ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவின் விருப்பப்படி தங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரானிலிருந்து சவூதி அரேபியாவிற்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டன.
அமெரிக்கா தனது புதிய பொருளாதார தடையுத்தரவை அமல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது. இந்தியா, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைக் குறைக்கப் போ்வதில்லை என வீறாப்பாக அறிவித்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் பொருளாதார தடையுத்தரவை வாயளவில் கண்டித்தாலும், மறுபுறம் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, தான் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிகக் கட்டணச் சலுகை தர வேண்டும் எனப் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது திணித்துள்ள இப்பொருளாதார தடையுத்தரவு, அந்நாட்டின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்துள்ள இம்மறைமுகமான போரை எதிர்கொள்வது என்ற அடிப்படையில், தனது நாட்டின் கடற்பரப்புக்குட்பட்ட ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தடைசெய்வதன் மூலம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்போம் என இரான் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகளுக்கு, இரானின் இந்தத் தடையை எதிர்ப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. மேலும்,  தன்னைவிட மிகப் பெரும் இராணுவ வலிமையும், அணு ஆயுத பலமும் மிக்க அமெரிக்காவின் அச்சுறுத்தலை  இப்படிபட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம்தான் இரான் போன்ற ஏழை நாடுகள் எதிர்கொள்ள முடியும்.
இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !மேற்காசிய நாடுகளில் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெய் ஹொர்முஸ் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிறு இடையூறுகூட, உலக நாடுகள் எங்கும் பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட அலறத் தொடங்கியுள்ளனர்.  இரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையுத்தரவுகளை விலக்கிக் கொள்வது மட்டும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே, எளிமையான தீர்வு. ஆனால், அமெரிக்காவோ, இரானை ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் துருப்புகளையும் கொண்டுவந்து இறக்கி, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு, இரானின் இசுலாமியக் குடியரசுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சியை நடத்த முயன்று தோற்றுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்பொழுது இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போரையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும்தான் நம்பியிருக்கிறது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளை இறக்கிய அதேவேளையில், இரானைச் சேர்ந்த இளம் அணு விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, அவரது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்துபோனார். 20 சதவீத அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் முயற்சியில் தான் வெற்றி அடைந்துவிட்டதாக இரான் அறிவித்த இரண்டாவது நாளே இப்படுகொலை நடந்துள்ளது.
இரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இப்படிக் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஷன் உள்ளிட்டு ஆறு அணுவிஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார தடையுத்தரவுகள் மூலம் முடக்கவியலாத இரானின் அணுசக்தி பரிசோதனைகளை, அந்நாட்டின் அணு விஞ்ஞானிகளைக் கொல்வதன் மூலம் சாதிக்கப் பார்க்கிறது, அமெரிக்கா.
இப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, இரானின் அணுசக்தி பரிசோதனைக் கூடங்கள், இராணுவ  ஏவுகணைத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை இரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் தவறுதலாக இரானின் வான்பரப்புக்குள் சென்றுவிட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க முயன்று தோற்றுப் போனது அமெரிக்கா. இரானின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னே இசுரேலின் உளவு நிறுவனமான மொசாத் இருப்பதை லீ ஃபிகாரோ என்ற பிரெஞ்சு நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
இப்படி இரான் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க  இசுரேல் கூட்டணியைத்தான், பயங்கரவாத நாடுகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும்.  ஆனால், அமெரிக்கவோ சர்வதேச அரங்கில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கான சவூதி அரேபியத் தூதரைக் கொல்ல இரான் முயன்றதாகவும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் இரானுக்கும் தொடர்பிருப்பதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி, இரானைப் பயங்கரவாத நாடென முத்திரை குத்திவிடக் கீழ்த்தரமாக முயன்று வருகிறது.
இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால், யுரேனியத்தை 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இரானோ மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் யுரேனியத்தை 20 சதவீதம் அளவிற்கே செறிவூட்டும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஏராளமான அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் இசுரேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னும் அணு ஆயுத ஆற்றலைப் பெறாத இரானை அமெரிக்காவும் அதனின் கூட்டாளிகளும் தண்டிக்கத் துடிப்பது அநீதியானது. தம்மிடம் குவிந்து கிடக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவோ, கைவிடவோ விரும்பாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளான இசுரேலும், இந்தியாவும், “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலக் கூடாது என உபதேசிப்பதும், அதற்காக அதனைத் தண்டிக்க முயலுவதும்” கேலிக்கூத்தானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே நியாயமற்றது.
இராக் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கும் முன்பாக, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தோடு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைப் போலவே, இரான் மீதும் அடுக்கடுக்காகப் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்துவருகிறது, அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் இன்னும் ஓராண்டிற்குள் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் திறனைப் பெற்றுவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இப்பீதியூட்டும் புளுகுணிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி, இரானைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இரானின் அணுசக்தி பரிசோதனை முயற்சிகள் தொடர்பாக நடைபெற்று வந்த சர்வதேச பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தது, அமெரிக்கா.  இவையனைத்தும் 1970களில் தான் இழந்த சொர்க்கத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு சாத்தானின் பேரரசு அலைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.


POSTED BY ADIRAI WSC

Tuesday, February 14, 2012

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு


அன்பார்ந்த பொதுமக்களின் கவனத்திற்கு அடிக்கடி மின்சாரம்  தடை ஏற்படுவதின் காரணமாக நாள் தோறும் வழங்கப்படுகின்ற குடிதண்ணீர் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம். ஆகவே வருகின்ற குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாய் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இப்படிக்கு
பேரூராட்சி அலுவலக நிர்வாக அதிகாரி
அதிராம்பட்டினம்.

Saturday, February 11, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) – மூன்றாவது கூட்டம் !

 

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக மூன்றாவது கூட்டமாக இன்று (10-02-2012 ) அஸர் தொழுகைப்பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர் M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்கள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
AAMF ’ன் முதல் கூட்டமாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் AAMF ன் வளர்ச்சிகள் மற்றும் ஹஜ்ரத் பிலால் நகர் மற்றும் ஆதம் நகர் ( M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் உள்ளடக்கிய )ஆகிய இரு முஹல்லாக்களையும் இணைத்து ஒன்பது முஹல்லாவாக செயல்படுவது என்பது தீர்மானம் செய்யப்பட்டது.
AAMF ’ன் இரண்டாவது கூட்டமாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் சகோ. K. சலீம் ( தாஜுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களின் தலைமையில் தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அவசரக்கூட்டமாக நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்று மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்றக் கூட்டத்தில் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த அதன் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிரலாக.......................


1. அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF), ஊர் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒழுங்கு முறையை பின்பற்றுவது போன்ற நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டப்பட்டது.

2. அதிரையில் உள்ள இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு குறிப்பாக அதிரை பைத்துல்மால் மற்றும் எந்த ஒரு அமைப்பிற்கும் போட்டியாகவோ அல்லது அவர்களின் செயல் திட்டங்களில் குறுக்கீடுகள் செய்வதையோ விரும்ப மாட்டோம். மேலும் எங்களின் ஒத்துழைப்புகள் AAMF ’ன் பங்களிப்பாக அனைத்து அமைப்புகளுக்கும் இருக்கும் ( இன்ஷா அல்லாஹ் ! ) என்பது சுட்டிக்காட்டப்பட்டது.


3. நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி செய்வது தொடர்பாக பேசப்பட்டது. மேலும் இவ்வழக்குகளை கையாள்வதற்கு சகோ. மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிகபட்டது குறிப்பிடத்தக்கது.

4. பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களின் சுகாதார விழிப்புணர்வு அறிவிப்பு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


5. அனைத்து முஹல்லவை சார்ந்த பள்ளிகளிலும் “மக்தப்” களை ஏற்படுத்தி இதன் மூலம் நமது சமுதாயம் சார்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க கல்வியை குறிப்பாக குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொது அறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்பட வேண்டியது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.


6. நமதூரில் கந்து வட்டியின் கொடுமையில் சிக்கி தவிக்கும் அப்பாவி சகோதர, சகோதரிகளை இனங்கண்டு அக்கொடுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


7. அமீரக கிளையின் சார்பாக சகோ. V.T. அஜ்மல்கான் ( செயலாளர் - AAMF அமீரக கிளை )அவர்கள் மூலம் கொடுத்தனுப்பிய வேண்டுகோள்கள் வாசிக்கப்பட்டது. குறிப்பாக 'உலமாக்கள் குழு' என்ற ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அமீரக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக வைக்கப்பட்ட வேண்டுகோளில்......

உலமாக்கள் குழு ஏன் வேண்டும் ?
பொதுவாக ஒரு சமூகத்தில் வாழ்கிற மக்களுக்கு, நன்மையை ஏவுவதற்கும், தீமையைத் தடுப்பதற்கும், ஒரு குழு இருக்க அல்லாஹ்வும், முஹம்மது(ஸல்) அவர்களும் நமக்கு பின்வருமாறு வலியுருத்துகிறார்கள்:

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்: ஞானமிக்கவன். (அத்தவ்பா 9:71)
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (ஆலு இம்ரான் 3:104)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால்(சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும். 
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் 78
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும், கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது, ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சோர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது. அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல்: முஸ்லிம் 5044, புகாரி 6011

இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும், முறையாக வழிகாட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கிணங்க சமுதாயச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட ஒரு குழு நமது சமூகத்தில் இருப்பது மார்க்க கடமையாகும். எனவே, அல்குர்ஆன் மற்றும் நபிவிழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடைய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர் நமதூருக்கு பொதுவாக 'உலமாக்கள் குழு' ஒன்றை துவங்க வேண்டியது அவசியம் என அமீரகம் AAMF-னர் கருதுகிறோம்.

'இவ்வுலமாக்கள் குழு' சார்பாக நமதூரில் அவசியம் செய்ய வேண்டிய பணிகளில் சில வருமாறு:

1. நமதூரில் நடைபெற்று வருகிற மார்க்க விரோத சீர்கேடுகளையும், அனாச்சாரங்களையும் களைவதற்கு தொடர்ச்சியான மார்க்க உபதேச வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இன்று நமதூரில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் வாரந்தேரும் வியாழக் கிழமைகளில் இஷா தொழுகைக்கு பிறகு அந்தந்த காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மார்க்க சொற்பொழிவுகள் நிகழ்த்த ஏற்பாடு செய்ய வேண்டும். இச்சொற்பொழிவு நிகழ்ச்சிகள் குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் பொது அறிவிப்பு செய்து, அம்முஹல்லாவில் உள்ள ஆண்களும், பெண்களும் பங்கேற்கும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். 
இன்ஷாஅல்லாஹ் இதன் மூலம் நமது சமூகத்தில் நடைபெற்று வரும் சீர்கேடுகளையும், அனாச்சாரங்களையும் (வரதட்சனை, வட்டி, ஒழுக்கக்கேடான காரியங்கள்) களைவதுடன், நமதூர் மக்களுக்கு நல்லமுறையில் மார்க்க அறிவும், வழிகாட்டல்களும் கிடைக்க செய்ய முடியும் என அமீரக AAMF நம்புகிறோம்.

2. நமதூர் அனைத்து முஹல்லாவிலுள்ள வளரும் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதுவதற்கும், மார்க்க அறிவை பயிற்றுவிப்பதற்கும் 'உலமாக்கள் குழு' சார்பாக ஒரு சிறந்த பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்பாடதிட்டத்தின்படி நமதூரில் இயங்குகிற ஆண்கள் மற்றும் பெண்கள் மதரஸாவில் படித்து வருகிற மாணவர்களைக் கொண்டு அனைத்து முஹல்லாவிலும் உள்ள பள்ளிவாசல்களில் காலையிலும், மாலையிலும் ஆரம்ப குர்ஆன் மக்தப் வகுப்புகள் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தனித்தனியாக நடத்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்த தீவிரமாக செயல்பட வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது.

3. நமதூர் அனைத்து முஹல்லாவிலுள்ள பருவ வயதை அடைந்த ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களிலேயே அல்லது ஒவ்வொரு முஹல்லாவிலோ கண்டிப்பாக - தீனியாத் வகுப்புகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தப்படுகிற தீன்யாத் வகுப்புகளில் தாய்-தந்தைகளுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய மார்க்கம் கடமைகள், கணவன் - மனைவிகளின் பொறுப்புகள் குறித்த மார்க்க கடமைகள், குழந்தைகள் வளர்ப்பு முறைகள், முதுயோர்களை பேணி நடத்துவது போன்ற காரியங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் எதிர்காலத்தில் நமது சமூகத்தில் தாய்-தந்தையர்களை கவனிக்காத பிள்ளைகள், கணவன்-மனைவி சச்சரவுகள் போன்ற எண்னெற்ற கேடுகள் இல்லாத சமுதாய மலர பயனளிக்கும் என் அமீரக AAMF நம்புகிறது.

4. நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா சங்கங்களுக்கும் வருகிற தலாக், சொத்து பாகப்பிரிவு போன்ற விவகாரங்களுக்கு 'உலமாக்கள் குழு' மூலம் மார்க்க வழிகாட்டு முறைகளை பெற்று அவ்விவகாரங்களை ஒவ்வொரு முஹல்லா சங்க நிர்வாகமும் அனுகி தீர்த்துக் கொள்ளும் முறை ஏற்படுத்த வேண்டும் என அமீரக AAMF கேட்டுக் கொள்கிறது.

5. நமதூரில் எத்துனை பள்ளிவாசல்கள் உள்ளன. அந்தந்த பள்ளிகளின் நிர்வாகம் எவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த பள்ளி நிர்வாகம் நலிந்த நிலையில் உள்ளன போன்ற விவரங்களை 'உலமாக்கள் குழு' மூலம் நமது தாயக AAMF தகவல்களை பெற வேண்டும் என வேண்டுகிறோம். அத்துடன் நமதூரில் ஜும்ஆக்கள் நடைபெற்று வருகிற அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் நிகழ்த்தப்படுகிற குத்பாக்கள் ஒரே செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக அமைத்துக் கொள்ள நமது 'உலமாக்கள் குழு' ஏற்பாடு செய்ய வேண்டும் என அமீரக AAMF விரும்புகிறது.
இன்ஷாஅல்லாஹ் 'உலமாக்கள் குழு' தேவைக்கு ஏற்ப இன்னும் பல பணிகளை காலோட்டத்தில் சேர்த்து கொள்ளலாம்.

இவ்வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்து விவாதங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்திற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் என முடிவு செய்யப்பட்டு அடுத்த கூட்டமாக “ கீழத்தெரு முஹல்லாவில் “ வருகிற 23-03-2012 அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
THANKS FOR  ADIRAI TIYA

10 Fruit Juices Good for Health

 
 
 
ASSALAMU ALAIKUM TO ALL

 

Not many people know that soursop fruit (also part of the soursop tree, ie leaves) keep hidden strength to fight cancer effectively than with treatment using medicines and chemo therapy. Unfortunately, the good news is covered up by one of world company who conduct research and wants research funding plus generous benefits go to the company, before the pharmaceutical raw materials from soursop fruit thrown into the world market. Apart from soursop fruit, there are many other fruits that have a great benefits for health. All fruits are also consumed it easier and more comfortable with processed into healthy fruit juice. 10 Fruit Juices for Beneficial to Health
10. Avocado juice

Avocado juice for health benefits include:
  • elps formation of red blood cells
  • Preventing anemia
  • For pregnant women, folic acid content of avocados can stimulate brain development and the formation of the spinal cord.
  • Controlling the bad fats (LDL cholesterol) and raise the good fats (HDL cholesterol)
  • Prevent stroke. 
  • Anti-wrinkle and ageless. etc.
09. Tomato juice


Tomato juice for health benefits are:
  • High antioxidant useful to defend the body from free radicals. 
  • Content of lyopene in tomatoes could prevent prostate cancer.
  • To maintain ideal body weight for those who are dieting to lose weight and may increase appetite for those who are raising the weight as well as in the recovery phase after illness.
  • Preventing constipation.
  • Glycogen levels can stabilize liver function, etc.

08. Apple juice

One apple a day could save your life, this phrase seems to be true, the content of apples is very useful for health, including:
  • Content of quercetin in apples may as anticancer and anti-inflammatory. 
  • Content of pectin can help remove dirt buildup in the gut for so long.
  • Can lower cholesterol levels, blood pressure and blood sugar levels.
  • Can reduce appetite.
  • Can treat headaches, etc.
 07. Strawberry juice

Strawberry juice for health benefits are:
  • Contain ellagic acid, which act as antioxidants to counteract free radicals that enter the body.
  • Can inhibit tumor cell growth in lung, breast, cervix.
  • Can cleanse the body’s digestive system.
  • Controlling cholesterol levels.
  • Can reduce pain in joints, etc.
06. Guava juice

Benefits contained in guava juice include:
  • Can reduce cholesterol in the blood and lowers blood pressure.
  • Can prevent thrush.
  • Able to lose weight.
  • Content of vitamin C in guava juice can relieve colds and coughs.
  • Content astrigent can cure diarrhea.
  • Can prevent bone loss in,  etc.
05. Kiwi fruit juice

Kiwi juice for health benefits include:
  • Rich in vitamin C is useful for protecting the body from cancer cells.
  • Rich in fiber can reduce constipation.
  • Content of potassium helps regulate blood pressure.
  • To prevent infection, premature aging.
  • Very good for those who suffer from heart disease.
  • Relieve cold and flu, etc.
04. Mango juice

Mango juice for health benefits include:
  • Can be as a disinfectant to cleanse the body and blood in the body.
  • Rich in caretenoid that can mencegahh colon cancer and cervical cancer bone.
  • Can rejuvenate the body’s cells.
  • Can prevent body odor caused by bacteria, etc.

03. Noni juice

Although it tastes pretty bad, but noni juice or noni fruit dutch is very beneficial to health, including:
  • Can boost the immune system.
  • Can normalize / reduce blood pressure.
  • Be able to fight tumors and cancer cells.
  • Contains scopoletin which functions as an anti-inflammatory and anti-allergic.
  • Very useful for the disease: hypertension, stroke, diabetes, migraine, vertigo, vaginal discharge, painful joints, etc.
02. Pomegranate juice

Pomegranate juice for health benefits:
  • Substances tannins can anesthetize roundworms, pinworms and tapeworms in the intestines and release it with feces. 
  • Rich in vitamins A, C, E and folic acid good for pregnancy.
  • Rich in antioxidants that help prevent blockages in the arteries caused by cholesterol.
  • Prevent the occurrence of prostate cancer, etc. 
01. Soursop juice

A study published by The Journal of Natural Products mentioned that the soursop fruit as the “miracle fruit” that is very nutritious for health, including:
  • Can effectively pick and choose the target bad cells from 12 different types of cancer, namely breast cancer, prostate, lung, colon, pancreas.
  • Working 10 thousand times more powerful to postpone cell growth cancer than drug (andriamicin) or chemo therapy.
  • Soursop juice selectively hunt down and kill the bad cells and not harm / kill healthy cells, in contrast with a deadly chemo therapy evil and gels healthy cells (ie causing hair loss).
  • Increase energy, immune system, preventing it from infection, etc

Wednesday, February 8, 2012

காதலர்தினம்: ஒரு இஸ்லாமியபார்வை !

              


பிப்ரவரி 14 அன்று காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. 'லவ்' என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொண்டு, இந்த தினம் பற்...றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மத "வேலண் டைன்' என்னும் பெயர் கொண்ட ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ரோம் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி ஏராளமான காதலர்களுக்கு ரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்து காதலை அங்கீகரித்த காரணத்தினால் அவர் பெயரால் """காதலர் தினம்""' என கொண்டாடப்படுகிறது.
இதுதான் காதலர்தின வரலாறு.
முதலாவது இது கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாம் காட்டித்தராத பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுவதை பற்றி நபி[ஸல்] கூறினார்கள்;
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
"உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3456
சுப்ஹானல்லாஹ்! இன்றைய முஸ்லிம்களில் சிலர், சமாதானம் என்ற பெயரிலும், விழாக்கள் என்ற பெயரிலும் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி அன்றே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அறிவித்துள்ளதை காண்கிறோம். மேலும் இவ்வாறு பிற மதகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி நபி[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்து,

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள்.[அஹ்மத்]
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காதலர்தினம் கொண்டாடும் முஸ்லிம்கள் இந்த பொன்மொழியை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாத்தில் ஈகைத்திருநாள், தியாகத்திருநாள் என்ற இரு பெருநாட்களைத்தவிர, வேறு கொண்டாடப்படக்கூடிய நாட்களை யார் உருவாக்கினாலும் அவைகளை முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும். மாறாக அவைகளை கொண்டாடினால் அவர்கள் அந்தவிசயத்தில் அவர்களை சார்ந்தவர்களே!
மேலும் காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்கள் சொல்லிமாளாது. காதல் என்ற பெயரில் காமம் மட்டும் விஞ்சி நிற்கிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் கூடும் இடம் என்று கூட பார்க்காமல் இவர்கள் அடிக்கும் காமக்கூத்துக்கள், கலாச்சார சீரழிவின் அடையாளமாக உள்ளது. எனவே இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் கொண்டாட்டங்களை தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும். மேலும் முஸ்லிம்கள் நாகரீகம் என்ற பெயரில் இந்த நாசகார சகதியில் விழுந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர்.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பரிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிளக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி,
''அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட்'' என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்டி எஸ்.எம் எஎஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
பிப்ரவரி 14-ம் டிசம்பர் 1-ம் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்காக்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).
அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்ட வேண்டும்.

AAMF - இன் அறிவிப்பும் வேண்டுகோளும் !!!

 
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த 14-01-2012   அன்று நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமித்த செய்தி அனைவரும் அறிந்ததே.

இவர்களின் சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் செலுத்துவதற்கு ஏதுவாக லண்டன் வாழ் சம்சுல் இஸ்லாம் சங்கதிற்குட்பட்ட சகோதரர் லண்டனில் இருக்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் ரூ.2 ,௦௦௦/- தருவதாக பொறுப்பேற்றுள்ளார்கள் (Jazakallah Khair ).

இதுபோல், வெளிநாடு வாழ் அதிரை சகோதர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களால் இயன்ற நன்கொடையை தந்து உதவி இந்த நல்ல காரியத்தில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.


தொடர்புக்கு,சகோ.A .தமீம் -தலைவர், அமீரக கிளை.அலைப்பேசி  No :00971 -50 -7480023மின்னஞ்சல் : adiraiallmuhallah@gmail.com

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it