Sunday, April 29, 2012

நீரிழிவு நோயாளிகளுக்கு இனி நிம்மதி!: இரிசின் இருக்க பயமேன் !

                                                  


நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது இரிசின் எனப்படும் திரவம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் ஏற்படாமலும் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோ, குறைவதோ நீரிழிவு நோய்க்கு அடிப்படை காரணமாகிறது. நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதனை குறைக்க வகை செய்யும் (ஹார்மோன்) நாளமில்லா சுரப்புத் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம்உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாளமிள்ளா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செயற்கையாகச் செலுத்திப் பார்த்ததில் உடல் பருமனுக்கும் நீரிழிவுக்கும் மருந்தாவது காணப்பட்டது.

மனிதர்களிடத்தும் இச்சோதனை வெற்றியடையும் என்றும் விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை ரத்தத்தில் செலுத்துவதன் மூலம் நீரிழிவு குறைபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்றும் டானா-ஃபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி ப்ரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவு குறித்து அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிற நிலையில்,இக்கண்டுபிடிப்புமுக்கியத்துவம் பெறுகிறது.

மசூதி இடிப்பைக் கண்டித்து இன்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ

                                      
 
சென்னை: இலங்கையில் தம்புள்ளா பகுதியில் இருந்த பள்ளிவாசலை இடித்ததற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டத்தில் மதிமுக கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கைத் தீவில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை சிங்கள இனவாத அரசு தாக்குவதும், நாசப்படுத்துவதும் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு தொடக்கத்தில் இந்துக்களின் கோவில்களையும், பின்பு கிறிஸ்தவ தேவாலயங்களையும் நாசப்படுத்துகின்ற வேலைகளை ஊக்குவித்து வந்த சிங்கள அரசு தற்போது தமிழ் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிகளைத் தாக்க ஆரம்பித்து உள்ளது.

கடந்த 20ம் தேதி கொழும்பில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் உள்ள மசூதியை 2000க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் வெறிக் கூச்சலுடன் முற்றுகை இட்டு, கடப்பாரை, சம்மட்டிகள் கொண்டு உடைத்து நாசம் செய்து உள்ளனர்.

இதனைக் கண்டித்து கடந்த 26ம் தேதி அம்பாறை மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் கடந்த 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மசூதி தாக்கப்பட்ட மாத்தளை மாவட்டப் பகுதி, முன்பு இராஜராஜ சோழன் காலத்திலும், இராஜேந்திர சோழன் காலத்திலும், சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

தமிழ் இன அழிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு அராஜகம் செய்து வருகின்ற சிங்கள இனவாதக் கட்சிகளும், இனவாத அரசும், இலங்கைத் தீவு முழுமையையும், பெளத்தமயமாக்கல், சிங்கள இன ஆதிக்கத்தை நிறுவுதல் என்ற நோக்கத்துடன் நடத்தி வரும் கொடுஞ் செயல்களுக்குக் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்க வரும் 30ம் தேதி (இன்று) மாலை 4.00 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்த உள்ளது. இப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்துகொள்ளும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மசூதி இடிப்பைக் கண்டித்து இன்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்: வைகோ

Friday, April 27, 2012

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு வரவேற்பு


                                      Trichy Jamal Mohamed college secretary
சிங்கப்பூர்:  சிங்கப்பூருக்கு வந்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளரும், நிர்வாகக்குழு செயலாளருமான ஏ. கே. காஜா நஜுமுதீன் சாஹிபிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 25.03.2012 அன்று அளிக்கப்பட்டது.

வரவேற்புரை நிகழ்த்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் முஹிய்யித்தீன் அப்துல் காதர் தனது உரையில் ஏ. கே. காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்களின் அயராத 25 ஆண்டு கால உயர் கல்விச் சேவையையும், சாதனையையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் நிர்வாகத் துறை பேராசிரியர் முஹம்மது பாஜில், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சங்கத்தின் தலைவர் நசீர் கனி, எழுத்தாளர் ஷாநவாஸ் அப்துல் காதர் மற்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951ம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர் கல்விச் சேவையை வழங்கி வருகிறது. தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற ஆண்டு “ஆற்றல் வளத் தனித்தகுதி” (COLLEGE WITH POTENTIAL FOR EXCELLENCE) சான்றிதழ் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறது. பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்கி வரும் இக்கல்லூரியில் சுமார் 11,000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்

உங்களுக்கு நீரிழிவா ? குறைந்த கலோரி உணவு சாப்பிடுங்க !


                                                
நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டால் நான்கு மாதங்களில் அவர்களுக்கு நீரிழிவு கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு என்பது உலகளாவிய ஒரு நோயாக பரவியுள்ளது. நீரிழிவின் தொடர்ச்சியாக கண் பாதிப்பு, நரம்பியல் நோய்கள், மூட்டுவலி போன்றவை ஏற்படுகின்றன. இதனால் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிய தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளனர்.

டைப் 2 நீரிழிவு நோய்

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். மாத்திரை மூலம் குணமாக்குவதை விட எளிதில் நோயை குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவர்கள் குறைந்த கலோரி தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.

இன்சுலின் சுரப்பு குறையும்

இந்த உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். என்றும் ஆய்வாளர்க கூறியுள்ளனர். குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகள். தர்பூசணி, ஓட்ஸ், குகும்பர், முட்டைகோஸ், ஆப்பிள், காரட், பீன்ஸ் போன்றவையாகும். இவற்றை தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவில் உப்பு குறைக்கிறீர்களா ? இதயம் கவனம் !


                                        Salt

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்புநோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை கேட்பதும்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

"உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் தெரிவித்துள்ளார்.

6 கிராம் உப்பு
"நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்" என்று இருதய நிபுணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்துள்ளார். இந்த கருத்து மேற்படி ஆய்வு முடிவிற்குச் சாதகமானதாகவே உள்ளது.

உணவில் தொடர்ச்சியாக உப்பின் அளவினைக் குறைத்துக் கொண்டு வருவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதில்லை. அவரவர் உடல் எடைக்கேற்ப, தினசரி ஒரு குறிப்பிட்ட அளவாவது உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதே சமயம், "உணவில் உப்பைக் குறைப்பதால் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை" என்று பேராசிரியர் கிரஹாம் மெக்கிரிகோர் தெரிவித்துள்ளார்.

உப்போ, சர்க்கரையோ எதையுமே உணவில் அளவாக சேர்த்துக்கொண்டால் ஆபத்தில்லை.

Monday, April 23, 2012

குடும்பக்”கொல்லி”யை ஊரைவிட்டு(த்) துரத்த....

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாய சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்.........”மதுக்கடைகள்” !
 
இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில் கொண்டுசென்றுவிடும்.
 
 

இடம் : பட்டுக்கோட்டை ரோடு ( பாத்திமா நகர் அருகே )
மதுக்கடை + கூடம்” ஜருராகத் தயாராகிறது நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனை எனும் சிறப்பைப் பெறுகிற “ஷிஃபா” அருகே............
மேலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிற சாலைப்பகுதி, அதிரை மின்சார வாரியம், இன்டேன் காஸ் நிறுவனம் போன்றவை அமைந்துள்ளப் பரபரப்பானப் பகுதியின் அருகே...........
 
 
 
இடம் : E.C.R சாலை ( பெரிய ஏரி அருகில் )
 
ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 60 வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. இச்சாலையில் நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சிலர் அதிகாலைப்பொழுதிலும் வேறுசிலரோ மாலை நேரங்களிலும் “வாக்கிங்” “சைக்கிளிங்”,”ஜாக்கிங்” போன்றவற்றை செய்வதுண்டு.
 
மேலும் இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் இவ்வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய “மதுக்கடை”
 
 

 

சமீபத்தில்தான் மதுவின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி “குடிக்காதே” எனும் தலைப்பிட்டு விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகக் கட்டுரை ஓன்றைப் பதிந்த எனக்கே இக்கூடங்களைக் கண்டதும் மிகவும் மன வேதனையடையச் செய்ததே...............!
 
அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் ?
 
 
நமதூர் பிரபல அரசியல் கட்சிகளே !
சமுதாய அமைப்புகளே !!
இயக்கவாதிகளே !!!
தொண்டு நிறுவனங்களே !!!!
சமூக ஆர்வலர்களே !!!!!
மாணவ, மாணவிகளே !!!!!!
பொதுமக்களே !!!!!!!

எழுந்துருங்கள் ! தயாராகுங்கள் !! புறப்படுங்கள் !!! இதுபோன்ற குடும்பக்கொல்லியை ஊரைவிட்டு துரத்துவதற்கென்றே.................
 

Monday, April 16, 2012

மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது !




அபார்ட்மென்ட் வீடுகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை. இதற்கு காரணம் அனைத்து இடங்களிலும் லிப்ட் வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு லிப்ட் உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

மாடி ஏற படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணமல் போகின்றன.

கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் எக்ஸலேட்டர், லிப்ட் போன்றவைகளை உபயோகப்படுத்துவதை விட மாடிப்படிகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதயத்திற்கு பலம்

மாடிப்படி ஏறுவதனால் இதயநோய்கள் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இதய தசைகள் பலமடைகின்றன. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது.

வாரத்திற்கு மூன்று முறை அதாவது 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே போதும். இதயநோய்கள் எதுவும் ஏற்படவாய்ப்பில்லை. உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.

உடல் எடை குறையும்
மாடிப்படி ஏறி இறங்கினால் எக்கச்சக்க கலோரிகள் எரிக்கப்படுகின்றன.உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக குண்டு உடல்காரர்கள் மாடிப்படி ஏறி, இறங்கினால் உடல் சிக் என்று ஆகிவிடும்.

பிஸியானவர்களுக்கு ஏற்றது

வேலைப்பளுவினால் ஜிம், உடற்பயிற்சி என தனியாக நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள் மாடிப்படி ஏறி இறங்குவதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உடல் பிட்டாவதோடு, கான்சன்ட்ரேசன் பவர் அதிகரிக்கிறது. இது பிற உடற்பயிற்சிகளை விட ஆபத்தில்லாத உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது.

அதேசமயம், மூட்டுவலி உடையவர்கள் பின்னங்கழுத்து வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள் .

Sunday, April 15, 2012

கோடை கால பயிற்சி முகாம்

இன்ஷா அல்லாஹ், கோடை கால விடுமுறையை மாணவ மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக எதிர்வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
 
இடம்:
மஸ்ஜிதுத் தவ்ஹீத், காதிர் முகைதீன் கல்லூரி எதிரில், ECR ரோடு, அதிராம்பட்டிணம்

நாள்:
மே 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை

நேரம்:
 
காலையில் ஆண்களுக்கு,
பெண்களுக்கு மதியம்

சகோதரர் அப்துல் ஜப்பார் (+91 96295 33887) அவர்களை தொடர்பு கொண்டு
முன்பதிவு செய்யுங்கள்.--
                                                                            
                         
 

Saturday, April 7, 2012

பன்றிக் காய்ச்சல் வராமல் எப்படி தடுக்கலாம் ?




                                  
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் ( swine flu ) தீவிரமடைந்து வருவதை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரியில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்த பன்றிக் காய்ச்சல், கடந்த வாரம் தீவிரமடைந்தது. ஒரு வாரத்தில் சென்னை, திருப்பூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில், ஒரு சிறுமி உட்பட 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 11 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி( 75) பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்குதலை உணர குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாததால் சளி, இருமல் இருந்தாலே பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என அச்சப்படும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது...

காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விஷயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.

நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் ஏ/ எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு(swine flu / swine influenza) வேகமாக பரவி வருகின்றது.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி உயிரிழந்தார். அதே ஆண்டு ஜூன் 11ம் தேதி அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்தது.

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது ஏ இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா பறவைகளிலும், முலையூட்டிகளிலும் காணப்படும் ஒருவகைத் தொற்று நோய் ஆகும். இது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ வைரஸினால் (virus) உண்டாகிறது. நோயுற்ற முலையூட்டிகள் இருமும் போதும் தும்மும் போதும் காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் பிற முலையூட்டிகளில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறே இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவக்குத் தொற்றுகிறது. நோயுற்ற பறவைகளின் எச்சங்களில் இருந்தும் தொற்று ஏற்படும். எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றூடாகவும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏ/ எச்1.என்1 இன்புளுயன்சா சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பதும் ஒரு ஆபத்தான நோயாகும். இந்நோய் இன்புளுயன்சா ஏ, இன்புளுயன்சா பி மற்றும் இன்புளுயன்சா சி என்னும் மூன்று வகையான வைரஸ்களினால் ஏற்படுகிறது. இதில் இன்புளுயன்சா ஏவால் மிக அதிகமான அளவிலும், இன்புளுயன்சா சி ஆல் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.

இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்றக் கூடியவை. ஒரு மனிதரை தாக்கியபின் மனிதரின் உடலுக்குள் இவ்வைரஸ் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.

பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகை வைரஸானது 1918ல் உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிய 'எசுப்பானிய ஃப்ளூ" எனும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. 1918ம் ஆண்டில் ஏற்பட்ட 'எசுப்பானிய ஃப்ளூ" காரணமாக ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய ஏ/ எச்1என்1 வைரஸ் ஆகும். இது இன்ஃப்ளுயன்சா ஏ வகை வைரஸின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுருக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது.

பன்றிகளுக்கு வருகின்ற மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதருக்கு தொற்றத் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில், இந்நோய்க்கு ஆளான மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு இது தொற்றவில்லை. எனவே நோய் பரவும் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மெக்ஸிகோவில் பரவிய எச்1என்1 வைரஸ் மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு தொற்றி மிகவிரைவாக நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை 'மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

நோயின் அறிகுறிகள்:

பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் பொதுவான சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அதாவது,

* தொடர்ந்த தலை வலி, குளிருதல், நடுங்குதல், விறைப்பு, தசைநார் வலி, இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் / தொண்டை அழற்சி/ தும்மல் / பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
* தலை சுற்றல் / மயக்கம்
* உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
* இடைவிடாத காய்ச்சல் (100 F க்கு மேல்),
* வயிற்று போக்கு, குமட்டல் வாந்தி எடுத்தல்

குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றியிருந்தால் தொடர்ந்த காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படல், உடல் தோல் ஒரு வித நீல நிறமாக மாறுதல் (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்), தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது வழமைப்போல் இல்லாமல் சோர்ந்து இருத்தல், தூக்கிக் கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல், தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படல் போன்ற காரணிகளை வைத்து இனங்காணலாம்.

நோய் தடுப்பு முறை

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும்போது நுகர்மூடி (மாஸ்க்) அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்வது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது முக்கியமாக இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றிக் காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் அருகாமையில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்நிலையில் சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி என கனடா நலத்துறை விபர மடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும் அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மென்தாள் (டிசு), அல்லது கைக்குட்டை கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.

சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது. நோயுற்ற ஒருவர் தும்மும்போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் மேசை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பழம்- கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல், நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தவிர்க்கலாம். நன்கு ஓய்வெடுக்கவும், உடற் பயிற்சி செய்யவும், பானங்கள், நிறையப் பருகவும், சத்துணவு வகைகளை உண்ணவும். இந்த நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அவதானங்கள்:

பன்றிக் காய்ச்சல் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏனைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல் எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை. அதேவேளை, வயிற்றோட்டம் ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது.

நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் சளிகோர்த்துக் கொள்வதால் மூச்சுத்திணறல் உண்டாகும். உச்ச நிலையில் சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயவங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகலாம்.

இது மட்டுமன்றி ஆஸ்துமா போன்ற சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி(HIV) மற்றும் நீரிழிவு முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

உலக சுகாதார நிறுவன அறிக்கைகளை விரிவாக ஆராயும்போது பன்றிக் காய்ச்சல் எனும் கொள்ளை நோய் ஒருசில நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்சினையில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை. தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும். மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய மருத்துவமனைகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது.

நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ நிறுவனங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும். பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை வைத்திய நிலையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமி ஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறை:

பன்றிக் காய்ச்சல் சிகிச்சை குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

பன்றிக் காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்' / "oselitamivir (Tamiflu (r)" 'ஜானமிவிர்' "zanamivir (Reienza (r) ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம். இந்த மருந்துகள் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக் கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்படுவதும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) ஆகிய மருந்து வகைகள் சிகிச்சைக்கு உதவுகின்றன. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாகவும் கூறப்படுகின்றது. நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்யக்கூடாது.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

oselitamivir (Tamiflu (r))" டா‌மிபுளு மாத்திரைகளை முறையின்றி பயன்படுத்துவது ஆபத்தானதாகும். பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ளின் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்திவிடுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்துக்கு முறைப்பாடுகள் வந்ததையடுத்து மேற்குறிப்பிட்ட கருத்தினை வெளியிட்டிருந்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். எனவே பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் உட்கொள்ள வேண்டாம் எனவும் உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌ப்படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம் ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள் பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம். ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவுவதை பழக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். தன்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

POSTED BY : THATS TAMIL NEWS