Tuesday, July 23, 2013

மோடிக்கு விசா தரவே கூடாது..திமுக, காங் உட்பட 12 கட்சிகளின் 65 எம்.பிக்கள் ஒபாமாவுக்கு கடிதம்!!

                              


வாஷிங்டன்:
 குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எப்படியாவது விசா வாங்கித் தர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 12 கட்சிகளின் 65 எம்.பி.க்களோ மோடிக்கு விசாவை தரவே கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்துவிட்டது. தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கோ, அமெரிக்க எம்.பி.க்களிடம் எப்படியும் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று லாபி செய்தார்.

ஆனால் 12 கட்சிகளைச் சேர்ந்த 65 இந்திய எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மோடிக்கு விசா தரக்கூடாது என்று ஒரு பேக்ஸ் அனுப்பினர். இதில் 25 ராஜ்யசபா எம்.பி.க்களும் 40 லோக்சபா எம்.பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேபோன்ற ஒரு பேக்ஸ் கடந்த ஆண்டு நவம்பர் 26, டிசம்பர் 5-ந் தேதியன்றும் ஒபாமாவுக்கு இதே 65 எம்.பிக்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அந்த கொள்கையை தொடர்ந்தும் அமெரிக்கா கடை பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இக்கடிதத்தில் திமுகவின் கே.பி. ராமலிங்கம், காங்கிரஸின் ராமசுப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், ஐக்கிய ஜனதா தளத்தில் சபீர் அலி, அலி அன்வர் அன்சாரி உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
ராஜ்யசபாவின் சுயேட்சை எம்.பி.யான முகமது ஆதீப்பின் முன் முயற்சியிலேயே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு செக் வைக்கும் வகையில்தான் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

   THANKS TO :- THATSTAMIL NEWS Published: Wednesday, July 24, 2013, 9:01 [IST]

தீவிரவாதத்தின் அடையாளம் பாரதிய ஜனதா கட்சி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீம் அப்சல்!

                             

                               தீவிரவாதத்தின் அடையாளம் பாரதிய ஜனதா கட்சி: காங். செய்தி தொடர்பாளர் மீம் அப்சல்!


டெல்லி
: தீவிரவாதத்தின் அடையாளமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் சாடியுள்ளார்.
குஜராத் இனக்கலவரங்களால்தான் இந்திய முஜாஹிதீன் என்ற தீவிரவாத இயக்கம் உருவானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஷகீல் அகமது கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் இக்கருத்து ஷகீல் அகமதுவின் தனிப்பட்ட கருத்து என்று கூறி காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. ஷகீல் அகமதுவும் தமது தனிப்பட்ட கருத்து எனக் கூறியிருந்தார்.

ஆனால் மற்றொரு சர்ச்சைக்குரிய காங்கிரஸ் தலைவரான திக்விஜய்சிங்கோ, ஷகீல் அகமது கருத்தை ஆதரிப்பதாகக் கூறியதுடன் அத்வானியின் ரத யாத்திரைக்குப் பின்னரே தீவிரவாதம் தலைதூக்கியது என்று ஒரு குண்டைப் போட்டார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் நேற்று சந்தித்தார். அப்போது ஷகீல் அகமது, திக்விஜய்சிங் ஆகியோரது கருத்துகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர், பாரதிய ஜனதா கட்சி தீவிரவாதத்தின் அடையாளமாக இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் அவர்கள் செய்தது தீவிரவாதத்தைவிட சற்றும் குறைந்தது அல்ல.


அப்பாவி மக்களை கொல்வதும், அவர்களுக்கு கேடு செய்வதும்தான் தீவிரவாதம். பாரதிய ஜனதா கட்சி என்ன செய்தது என்பது குறித்து நான் புதிதாக ஒன்றும் சொல்லிவிட வில்லை. ஊடகங்களே அதை சொல்லி வந்திருக்கின்றன என்றார்.

THANKS TO : THATSTAMIL NEWS Published: Wednesday, July 24, 2013, 10:11 [IST]

Saturday, July 20, 2013

ஆப்பிளால் லேப்-டொப்பால் வாழ்க்கை போச்சு



                                

ஆப்பிள் லாப் டொப்பில் செக்ஸ் படங்களைப் பார்த்து அதற்கு அடிமையாகப் போன நபர் ஒருவரின் உண்மைக் கதை இது. பிரித்தானியாவில் மார்க்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் தனது ஆப்பிள் லேப் டொப்பில் தற்செயலாக ஒரு செக்ஸ் வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளாராம். இவர் தேடுபொறியில் தேடும் போதுதான் இந்த செக்ஸ் வீடியோ சிக்கியுள்ளது. அதனைப் பார்த்து பழக்கப்பட்ட இவர், தொடர்ந்தும் வேறு வேறு செக்ஸ் வீடியோக்களைப் பார்த்து ஒரு கால கட்டத்தில் அதற்கு அடிமையாகவே போய்விட்டாராம். 24/7 என்று சொல்லுவார்களே அதே அளவு அவர் அடிமையாகி 24 மணி நேரமும் அதனையே பார்த்து தனது காலத்தை ஓட்டியுள்ளார்
.இதனால் அவர் தனது மனைவியோடு நெருக்கமாக இருக்கவில்லையாம். பார்க்கும் செக்ஸ் படங்களில் வரும் பெண்களை தனது மனைவி என்று தான் நினைத்துவிடுவது வழக்கம் என்கிறார் இன் நபர். இதனால் அவர் குடும்பமே நிம்மதி இழந்தது. இதனையடுத்து தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி சும்மா இருக்கவில்லை. தனது கணவர் மிகவும் நல்லவர். ஆனால் ஆப்பிள் கம்பெனி தான் அவரைக் கெடுத்துவிட்டது என்று சொல்லி ஆப்பிள் கம்பெனி(ஆப்பிள் லேப்-டொப்) மீது வழக்கு பதிவுசெய்துள்ளார். ஆப்பிள் கம்பியூட்டரில் ஒரு பில்ட்டர்(அதாவது வடிகட்டி) இருந்திருந்தால், அது ஆபாசத் தளங்களுக்கு செல்ல அனுமதித்திருக்காது. அப்படி ஏன் அவர்கள் செய்யவில்லை என்று மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்

முஸ்லீம்களும், நோன்புக் கஞ்சி அரசியலும்





புனித ரமழான் மாதம் என்பது முஸ்லீம்களின் மிக முக்கியமான காலமாகும். உலகுக்கான வழிகாட்டி திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமாகும்.

பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மையின் தட்டுக்கள் நிறைக்கப்படும் புனிதமிக்க ஒரு மாதம் ரமழான் ஆகும். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 11 மாதங்கள் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக அமைவது இம்மாதத்தில் செய்யும் நற்செயல்கள் தாம்.

இந்த மாதத்தை பொருத்த வரையில் அனைத்து இஸ்லாமியர்களும் இம்மாதத்தை அடைவதில் அளவிலா மகிழ்ச்சி அடைவார்கள்.
  • காலை மூன்று மணிக்கே எழுந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்.
  • பஜ்ருத் தொழுகைக்கு பள்ளியை நிறைக்கும் மக்கள் கூட்டம்.
  • லுஹர் தொழுகைக்கு தவறாமல் வருபவர்கள்.
  • அசர் தொழுகையுடன் சேர்த்து நோன்புக் கஞ்சி வாங்க வருபவர்கள்.
  • நோன்பைத் திறக்க வேண்டும், சூரியன் எப்போது மறையும் என வைத்த கண் வாங்காமல் காத்திருக்கும் உள்ளங்கள்.
  • தொழுகை தொழப் போக வேண்டும் அனைத்து  வேலைகளையும் இப்போதே முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடும் தாய்மார்கள். என்று அனைவரும் ஆசுவாசமாக போற்றிப் புகழும் மாதம் தான் இந்த ரமழான்.
இஸ்லாமிய ஆன்மீகக் கருத்துக்கள் எப்போதும் பேசப்படும் இம்மாதத்தில் தற்போது அரசியலும் கலக்கப்படுவது ஓர் கவலையான உண்மையாகும். கண்டவற்றுக்கும் பேனர், போஸ்டர் அடிக்கும் அரசியல்வாதிகள் தற்போது ரமழானிலும் தங்கள் அரசியல் அங்கத்துவத்தை பேண நினைப்பதுதான் கவலையான விஷயமாகும்.

அரசியல்வாதிகளும், இப்தாரும்.

அதிகாலையில் இருந்து மாலை வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் மக்கள் சூரியன் மறையும் நேரத்தில் நோன்பைத் திறப்பார்கள். நோன்பைத் திறப்பதற்காக அனைத்து மக்களும் காத்திருக்கும் அத்தருணம் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருனமாக இஸ்லாமியர்களினால் பார்க்கப்படுகின்றது.
அப்படிப்பட்ட நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு அங்கென்ன வேலை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!

ஆம் எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற பாணியில் கொடிகட்டித் திரியும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தங்கள் பச்சோந்தித் தனத்தை காட்டிக் கொள்ளக் கிடைத்த பெரும் சந்தர்ப்பமாக இந்த ரமழான் மாதத்தை நினைக்கிறார்கள்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோன்புக் கஞ்சி அரசியல் மிகவும் பிரபலமானதாகும்.

நோன்பின் மான்புகளைப் பற்றி, திருக்குர்ஆனின் புனிதத்தைப் பற்றி பேனர்கள் வைக்கப்படுகின்றதோ இல்லையோ அம்மா வருகிறார், ஐயா வருகிறார், தமிழினக் காவலர் வருகிறார், முஸ்லீம்களின் இதயம் வருகிறார் என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய “கட்டவுட்களை” நாடு முழுவதும் இம்மாதத்தில் காணக்கிடைக்கும்.

பள்ளிவாயல்களில் நோன்பு திறக்கும் நிகழ்வு என்று கூறி அரசியல் வாதிகள் வரவேற்கப்படுவார்கள்.

தொப்பி அணிந்து, சில நேரங்களில் ஜுப்பாவும் போட்டுக் கொண்டு, வெள்ளையும் சொல்லையுமாக வரும் அரசியல் பிரபலங்கள். ஆன்மீக அரங்கில் தங்கள் அரசியல் தர்பாருக்கான இடத்தைப் பிடிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

ஒரு முஸ்லிம் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் பல இடங்களில் இஸ்லாத்திற்கே தொடர்பில்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் என்ற பெயரில் அரசியல் நாடகம் போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

சூரியன் மறைந்தால் நோன்பு திறக்க வேண்டும் என்ற மார்க்க வரம்பு இருக்கும் போது, அரசியல் நாடக அரங்கில் இப்தார் நிகழ்ச்சி நடத்தும் நபர்கள் அரசியல் தலைவர் நோன்பு திறக்கும் வரை அவர்கள் நோன்பு திறக்கவும் மாட்டார்கள், பொது மக்களை நோன்பு திறக்கவிடவும் மாட்டார்கள்.

இது எந்த விதத்தில் நியாயம் என்பதை நல்லுள்ளங்கள் புரிய வேண்டும். கண்ட அரசியல் வாதிக்காக புனிதமிக்க மார்க்கக் கடமையை புறக்கணிக்கும் செயலில் நாம் ஈடுபட்டால் அந்த நோன்பினால் எவ்வித பிரயோஜனமும் இறைவனிடம் நமக்குக் கிடைக்காது என்பதை விளங்க வேண்டாமா?

நோன்பு திறத்தல் என்ற உண்ணதமான ஒரு நிகழ்வையும் அரசியல் சாக்கடையாக்க முனையும் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பள்ளிவாயல் நிர்வாகிகளே!

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது ஒரு புனிதப் பணி. நோன்பு திறப்பதற்கு உதவி செய்யும் பொது மக்களின் பணத்தை வீண் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்ததாதீர்கள்.

அரசியலை அரசியலுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளுங்கள், ஆன்மீக செயல்பாட்டில் நுழைத்து, புனித செயல்பாடுகளின் புனித தன்மையை கெடுக்காதீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்து, ஆன்மீகத்தைக் கெடுக்கும் அசிங்கமான செயல்பாட்டைத் தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். (அல்குர்ஆன் 18:103-105)

நன்றி
 rasminmisc

Tuesday, July 16, 2013

நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதலை நடத்தியதே ‘மத்திய அரசு’தான்!!!


டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான சட்டங்களைக் கொண்டுவரவே நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதல் சம்பவங்களை மத்திய அரசே திட்டமிட்டு நடத்தியது என்று ஒரு அதிகாரியே 'திருவாய் மலர்ந்து' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் சம்பவத்தில் சிபிஐயும் உளவுத் துறையும் மோதிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தில் அண்டர் செக்ரெட்டரியாக பணியாற்றிய ஆர்.வி.எஸ். மணி என்பவரிடம் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் சம்பவத்தை விசாரித்த சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த சதீஸ் வர்மாதான் இந்தச் செய்தியை கூறியதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதலை நடத்தியதே ‘மத்திய அரசு’தான்!!!


இஷ்ரத் ஜஹான் உள்ளிட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2 பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று லஸ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிற பிரனேஸ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக்கின் தந்தை தாக்கல் செய்தது. மற்றொரு இஷ்ரத் ஜஹானின் தயார் தாக்கல் செய்தது.
இந்த இரண்டு வழக்குகளில் ஜாவேத் தொடர்பான வழக்கில் கர்னைல் சிங் என்பவர் தலைமையில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவையும், இஷ்ரத் தயார் தொடர்ந்த வழக்கில் குஜராத் அரசு மோகன் ஜா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்தன.

மோகன் ஜா சிறப்பு புலனாய்வுக் குழுவில் இஷ்ரத்தின் தயாரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் சதீஸ் வர்மா.

கர்னைல் சிங் மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட ஆர்.ஆர்.வர்மா தலைமையில் அக்குழு செயல்பட்டது. ஆர்.ஆர். வர்மா குழு, என்கவுன்ட்டர் போலியானது என்று அறிக்கை கொடுத்தது. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் சிபிஐக்கு வழக்கை மாற்றியும்
குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதலை நடத்தியதே ‘மத்திய அரசு’தான்!!!

அப்போது சிபிஐ விரும்பினால் சதீஸ் வர்மாவின் உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூற சிபிஐ குழுவில் சதீஸ் வர்மாவும் இடம் பெற்றிருந்தார். அவரது பணிக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் போலி என்கவுன்ட்டரில் ஐபி அதிகாரிகளின் பங்கு பற்றி அதி தீவிரம் காட்டியதால் கடந்த மாதம் சிபிஐ குழுவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது குஜராத்தின் ஜூனாகத் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பணியாற்றி வருகிறார் சதீஸ் வர்மா.
உள்துறை செயலகத்தில் அண்டர் செகரட்டரியாக் இருந்த ஆர்.வி.எஸ். மணி தான், இஷ்ரத் என்கவுன்ட்டர் வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர். குஜராத்தின் காந்தி நகரில் கடந்த மாதம் 22ம் தேதி சதீஸ் வர்மாவிடம் மணி விசாரணை நடத்தியிருந்தார். அப்போதுதான் நாடாளுமன்ற மற்றும் மும்பை தாக்குதல்கள் திட்டமிட்டு மத்திய அரசால் நடத்தப்பட்டது என்று மணியிடம் சதீஸ் வர்மா கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் மீது 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது. 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து யுஏபிஏ என்ற புதிய சட்டம் கொண் டுவரப்பட்டது என்றும் சதீஸ்வர்மா தம்மிடம் கூறியதாக மணி தெரிவித்துள்ளார்.
மேலும் ஐபி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்கள் குறித்தும் சதீஸ் வர்மா சந்தேகம் எழுப்பியதாகவும் கூறியுள்ளார் மணி. சர்ச்சைக்குரிய இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் தொடர்பான விசாரணையின் போது மணியிடம் சதீஸ் வர்மா இந்த தகவல்களை கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதலை நடத்தியதே அமெரிக்க அரசு தான் என்றும், நிலவுக்கு மனிதனை அமெரிக்கா அனுப்பவே இல்லை, ஒரு பாலைவனத்தில் செட் போட்டு ஏமாற்றியது என்றும் புரளி கிளப்புவோர் இருக்கிறார்கள். அதே மாதிரி தான் இதுவும்!

THANKS TO : THATS TAMIL NEWS : Story first published:  Tuesday, July 16, 2013, 6:40 [IST]

Tuesday, July 9, 2013

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்!!!

                    

தற்போது நிறைய மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆனால் இத்தகைய கொலஸ்ட்ராலை வாழ்க்கை முறை மற்றும் உணவின் மூலம் சரிசெய்ய முடியும். மேலும் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு கெட்ட பழக்கங்களும், உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அதிகமானால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். ஏனெனில் கொலஸ்ட்ராலுக்கும் நோய்களுக்கும் நிறைய இணைப்புக்கள் உள்ளன.

அதிலும் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால், அது இதய நோயை உண்டாக்கி, நாளடைவில் மரணத்திற்கும் வழிவகுக்கும். ஆகவே உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நிச்சயம் கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும்.

இப்போது அந்த கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்

                                

இந்த மாதிரியான வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்வதில் முதன்மையானது. எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆரஞ்சுப் பழங்களை சாப்பிடவும்

                          

ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே ஆரஞ்சுப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.

தொடர்ச்சியான பரிசோதனை

                         

உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, தொடர்ச்சியான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலின் அளவை அவ்வப்போது பரிசோதித்தால், அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் எதையும் பின்பற்ற முடியும்.

எடை குறைவு

                          

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு எடையை குறைத்தலும் ஒரு வழி தான். ஆம், பொதுவாக உடல் பருமன் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகமாவதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும்.

புகைப்பிடித்தலை தவிர்க்கவும்

                           

உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது புகைப்பிடித்தவை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிகரெட்டில் உள்ள புகையிலை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரித்துவிடும்.

தினமும் உடற்பயிற்சி

                        

உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.

கலோரி குறைவான உணவுகள்

                        

சில உணவுகள் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், ஆப்பிள், பிஸ்தா போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

க்ரீன் டீ

                            

அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு ஒரு எளிய வழியென்றால், அது க்ரீன் டீ குடிப்பது தான். ஏனெனில் க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இது அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்



“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) 

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

thanks to www.adiraitntj.com

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு

 
குடும்ப அமைப்பையும் உறவையும் சீரழிக்கின்ற காரணங்களில் முதலாவதாக துறவறத்தைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் இரண்டாவது காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும். "நான் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போவேன். தினசரி ஒரு பெண்ணிடம் போய்விட்டு வருவேன், யாரும் அதைத் தடுக்கக் கூடாது' என்று ஓர் ஆண் கூறுவது. அதேபோன்று ஒரு பெண், "நான் எப்படி வேண்டுமானலும் எந்த ஆணோடும் போவேன். இது எங்களுக்குரிய உரிமை, எங்களது சுதந்திரம், எங்களது சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது' என்று கூறி தான்தோன்றித் தனமாகத் திரிவது. இப்படிக் கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில்லாமல் உல்லாசமாக, கட்டுபாடற்று சுற்றித் திரிவதாகும். இவனுக்கு மனைவி யார்? இவளுக்குக் கணவன் யார்? கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பு இல்லாவிட்டால் பிறக்கின்ற குழந்தைக்குப் பொறுப்பு யார்? அந்தக் குழந்தையை யார் வளர்ப்பது? உறவு முறைகள் எப்படி வரும்? இதற்கெல்லாம் எந்த விடையும் கிடைக்காது. 


சமூகத்தில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழலாம் என்கிற சிந்தாந்தமும் இன்றைய நவீன யுகத்தில் விதைக்கப்படுகிறது. அதை ஒரு புரட்சியாகவும் பலர் நினைக்கின்றனர். பெரிய பெரிய அறிஞர்களும் நீதிபதிகளும் கூட, கணவன் மனைவி எனும் குடும்ப அமைப்பு தேவையில்லை என்கிறார்கள். அதாவது கணவன் மனைவி என்பது போன்ற பொறுப்பைச் சுமக்காமல் 3 மாதத்திற்கோ, 6 மாதத்திற்கோ வாழ்ந்து பார்ப்போம். நன்றாக இருந்தால் தொடரலாம். இல்லையெனில் விட்டுவிட்டுச் செல்லலாம் என்கிறார்கள். இதில் புரிய வேண்டிய விஷயம், திருமணம் என்றால் பொறுப்பைச் சுமக்கிறோம் என்பதாகும். ஓர் ஆண் ஒரு பெண்ணோடு சேர்கிறான். அதன் பிறகு அவளுக்கு வருகின்ற நல்லது கெட்டதை இவன் சுமக்கிறான். இவனுக்கு ஏற்படும் நல்லது கெட்டதை அவள் சுமக்கிறாள். அவள் குழந்தையைச் சுமக்கும் போது இவன் அவளையும் சேர்த்துச் சுமக்கிறான். அவளது நலத்திற்காகப் பாடுபடுகிறான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தியாகம் செய்கிற இப்படியொரு அழகிய குடும்பவியலமைப்பை நாசமாக்குகின்ற சித்தாந்தம் தான் "கண்டதே காட்சி; கொண்டதே கோலம்' என்ற கட்டுப்பாடில்லாத சுதந்திரம். ஆண்-பெண் விஷயத்தில் எந்தச் சட்டமும் இருக்கக் கூடாது என்று ஒரு நடிகை பேசி, வழக்கெல்லாம் போடப்பட்டு, அதைத் தடுப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றமும் அதைச் சரி காண்பதைப் பார்க்கிறோம். இப்படியொரு கேடுகெட்ட சட்டம் நமது நாட்டில் இருக்கிறது. ஒரு ஆண் தான் விரும்பிய எந்தப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அது பலாத்காரம், வன்புணர்வு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்தச் சட்டத்தை மக்கள் அனைவரும் புறக்கணிப்பதிலிருந்தே இது கேடுகெட்டது என புரிந்து கொள்ள முடிகிறது. 

சில கேடுகெட்ட இழிந்தவர்கள் தவறு செய்வதை நியாயப்படுத்துவதற்காக நமது நாட்டில் இந்தச் சுதந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள அனைவரும் தவறான கட்டுப்பாடற்ற பாலியல் உறவை ஆரம்பித்தால், குடும்பம் என்கிற கட்டமைப்பு காணாமல் போய்விடும். இந்தக் கட்டுபாடற்ற உடலுறவு முறையில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கொஞ்ச நேரம் தவறான சுகம் அனுபவிப்பதற்காக இதைச் சரி கண்டால், அதன் பிறகு உருவாகிற குழந்தையைச் சுமப்பது பெண் தான். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு எந்த நாதியும் இருக்காது. அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் தங்கள் கையைக் கொண்டு தான் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் பெண்களின் பலவீனத்தைக் கவனித்துத் தான் குடும்ப அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே பெண்கள் இதை விரும்பி ஆதரிப்பது தவறான போக்காகும். உடலில் இளமையும் முறுக்கும் இருக்கும் போது இந்தக் கட்டுப்பாடற்ற உறவின் கேடு தெரியாது. ஆனால் ஒரு நேரம் வரும். அல்லாஹ் ஒரு நரம்பைப் பிடித்து இழுப்பான். முதுமையை அனைவரும் அடைவதைப் போன்று பெண்களும் அடைவார்கள். இரத்த ஓட்டம் சோர்ந்து போய்விடும். பெண்கள் தங்கள் உடல் அழகை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வாழ முடியாது. 40 வயதைக் கடந்து விட்டால் அவள் தன்னுடைய அழகை இழக்கத் தொடங்கி விடுவாள். அந்த நேரத்தில் இதனால் ஏற்பட்ட விளைவுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பாரதூரமான கஷ்டப்படுகிற சூழ்நிலை ஏற்படும். இதில் ஏற்படுகிற இன்னொரு விளைவு, இன்றைய நவீன காலத்தில் பரவலாகப் பேசுகின்ற எய்ட்ஸ் என்னும் ஒரு நோயாகும். ஹெச்.ஐ.வி என்ற வைரஸ் ஒருவரைத் தாக்கினால், இரண்டு அல்லது மூன்று அல்லது பத்து வருடத்தில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கிவிடும். அதாவது இந்த வைரஸ் ஒருவரது உடலில் புகுந்துவிட்டால் அவரது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். அல்லாஹ் மனிதனின் உடலிலேயே எல்லா நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியையும் வைத்திருக்கிறான். ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து சாப்பிடாமல் இருந்தாலும் குணமாகி விடுகிறதெனில், அதற்குக் காரணம் நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி தான். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்கள். மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரம் என்று பழமொழி கூடச் சொல்வார்கள். ஜலதோஷமும் ஒரு வைரஸினால் தான் வருகிறது. அதை எதிர்த்து நமது உடல் போராடுகிறது. ஜலதோஷத்தை உண்டாக்கும் கிருமியை நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி போராடி ஒரு வாரத்தில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. காய்ச்சலுக்கும் அப்படித் தான். காய்ச்சலினால் ஏற்பட்ட வலியைக் குறைப்பதற்குத் தான் மருந்து சாப்பிடுகிறோமே தவிர காய்ச்சலை முழுவதுமாகக் குணப்படுத்துவது நம் உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் என்று சொல்லப்படும் நோய் எதிர்ப்பு சக்திதான். அதனால் தான் எந்த நோய் வந்தாலும் அது நீங்கிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுகிறோம். இது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த ஒரு அருட்கொடை. அதேபோன்று பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசி போடுவார்கள். நலமாக இருக்கிற குழந்தைக்கு எதற்கு மருந்து என்று கேட்டால், மஞ்சள் காமாலை வருகிற வைரஸைத் தான் தடுப்பூசி என்ற பெயரில் போடுவார்கள். ஆனால் உண்மையில் அந்த ஊசியில் மஞ்சள் காமாலையை வரவைக்கிற வைரஸ் தான் இருக்கும். அப்படியெனில் இதில் என்ன மருத்துவ முறை இருக்கிறது என்றால், குழந்தையின் இரத்தத்தில் தேவையான நோய் எதிப்பு சக்தி இருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள் நல்ல நிலையில் இருக்கும். இந்த மஞ்சள் காமாலையை எதிர்த்து போராடி, ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். மீண்டும் நமது வாழ்நாளில் அதுபோன்று வந்தால், குழந்தையாக இருக்கிற போது நம் உடல் எப்படி போராடியதோ அதேபோன்ற முறையில் போராடி மஞ்சள் காமாலையை வென்றுவிடும். இதுவெல்லாம் இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடை தான். ஆனால் இந்த ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ், மனித உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடுகிறது. அப்படியெனில் ஜலதோஷம் பிடித்தால் அது போகாது. ஏனெனில் அதை எதிர்க்கிற சக்தியை ஹெச்.ஐ.வி அழித்துவிடும். இப்படி என்னென்ன நோய்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடுகிற சக்தியை இந்த எய்ட்ஸ் கிருமிகள் அழித்துவிடும். முடிவு மரணம் தான். ஒரு நோய் காலம் முழுவதும் இருந்தால் மனிதன் வாழமுடியுமா? தலைவலியே காலம் முழுவதும் இருந்தால் இறந்துவிடுவோம். எனவே ஒரு நோய் என்றால் வரவேண்டும்; போக வேண்டும். ஆனால் நீங்காமல் போகாமல் இருந்தால் மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத பல்வேறு மாற்று விளைவுகளை உண்டாக்கிவிடும். அப்படியெல்லாம் வராமல் இருக்க வேண்டுமெனில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும். ஆனால் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மனித உடலில் புகுந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கி எய்ட்ஸை உருவாக்கிவிடும் என்று கூறுகின்றன இதுவரை நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகள். எனவே இந்த எய்ட்ஸ் எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், இரண்டு காரணங்களால் தான். எய்ட்ஸ் பல காரணங்களால் தொற்றும். ஆனால் ஏற்படுவது இரண்டு காரணங்களால் தான். தொற்றுவது வேறு,  உருவாவது என்பது வேறு. தகாத பாலியல் உறவு கொள்கிற பெண்கள் பல ஆண்களிடம் செல்வதால் ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் இருக்கின்ற திரவங்களிலிருந்து வெளியாகிற நச்சுக் கிருமிகள் பல ஆண்களின் உயிரணுக்களுடன் கலந்துவிடுகிற போது, இந்தக் கேடுகெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகிறது. விரைவாக பெண்களுக்குத் தான் தொற்றுகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே எய்ட்ஸ் வந்த ஒரு பெண்ணுடன் இன்னொரு ஆண் உடலுறவு கொள்ளும் போது அவனுக்கும் நோய் தொற்றுகிறது. ஆனால் இங்குள்ள மருத்துவர்களும் அரசாங்கமும் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒரு விளம்பரம் செய்கிறது. இந்த விளம்பரம் முற்றிலும் தவறானது. ஒருத்திக்கு ஒருவன் என்றுதான் விளம்பரம் செய்யவேண்டும். அரபு நாட்டில் ஒன்றுக்குப் பதிலாக நான்கு மனைவிமார்கள் வைத்திருக்கிறார்கள். எந்த எய்ட்ஸும் அவர்களுக்கு வரவில்லை. எனவே ஒருவன் நான்கு மனைவியை வைத்திருந்தால் எய்ட்ஸ் வராது. ஆனால் ஒருத்திக்கு நான்கு புருஷன் இருந்தால் எய்ட்ஸ் வந்துவிடும். பெண்கள் ஒரு பாத்திரத்தைப் போன்று இருப்பதினால், அந்தப் பெண்களிடம் பல ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது தான் இந்த கெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக, கட்டுப்பாடற்ற உடலுறவு எனும் சுதந்திரத்தைக் கொடுத்தால் எய்ட்ஸ் என்கிற கிருமி உருவாகி, அது பிறருக்கும் பரவி விடுகிறது என்பதைப் புரியவேண்டும். மேலை நாடுகளில் ஆணுறை போன்ற பாதுகாப்பான உடலுறவு முறையைக் கடைப்பிடித்து எய்ட்ஸைக் குறைத்துக் கொள்கிறார்கள். உலகத்திலேயே எய்ட்ஸுக்கு முதலிடம் ஆப்பரிக்கா தான். அதன் பிறகு இந்தியா. இந்தியாவிலுள்ள மாநிலங்களில் எய்ட்ஸ் அதிகமுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு தான். இதற்குக் காரணம் உடலுறவில் கட்டுப்பாடற்ற முறை தான். இந்த தவறான பாலியல் உறவு முறையின் மூலம் எய்ட்ஸ் உருவாகி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவிக் கொண்டே இருக்கிறது. எனவே இப்படி எய்ட்ஸ் நமக்கும் வந்துவிடக் கூடாது என்றால், நாம் இதைத் தடுப்பதற்குச் சட்டம் போடவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தத் தீமையை ஒழிக்கப் பாடுபட வேண்டும். எய்ட்ஸ் நோயாளியிடமிருந்து சின்னச் சின்ன காரணங்களால் கூட நமக்கும் பரவும். அதற்காக எய்ட்ஸ் நோயாளியைத் தொடுவதாலோ அல்லது பார்ப்பதாலோ அல்லது அவனுடன் பழகுவதாலோ அல்லது அவனுடன் ஒரே தட்டில் சாப்பிடுவதாலோ நமக்கு வராது. அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயாளிக்கு பயன்படுத்திய அதே ஊசியை நமக்கும் பயன்படுத்தினால் அவரது உடலிலுள்ள நச்சுக் கிருமி நமது உடலுக்கும் வந்துவிடும். நமக்கு வேண்டுமானால் தவறான பாலியல் உறவு மூலம் வராமல் இருக்கலாம். எனவே எப்படியிருப்பினும் முதன் முதலில் எய்ட்ஸ் கிருமிகள் உருவாகுவதற்குக் காரணம், பல ஆண்களிடம் கட்டுப்பாடில்லாமல் உறவு வைக்கிற பெண்களின் மூலமாகத் தான் வருகிறது. பிறகு அவளிடம் உடலுறவு கொள்கின்ற அனைத்து ஆண்களுக்கும் பரவுகிறது. எனவே கட்டுப்பாடற்ற உடலுறவு முறை எய்ட்ஸை உருவாக்குவதுடன், குடும்ப அமைப்பையும் சீரழித்துவிடும்; வாரிசு முறையை இல்லாமல் செய்துவிடும். அதிலும் அரசாங்கம், கணவன் மனைவியாக இருந்து இல்லறத்தில் ஈடுபடுங்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு, பாதுகாப்பான ஆணுறை அணிந்து தவறான பாலியல் உறவான விபச்சாரம் செய்யுங்கள் என்று சொல்வது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. இப்படி உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் பாதுகாப்பான முறையில், கணவன் மனைவி என்கிற எந்தக் கட்டுப்பாடும் குடும்ப அமைப்பும் இல்லாமல் உடலுறவு மட்டும் கொண்டால் இந்த மனிதச் சமூகம் தழைக்குமா? சந்ததிகள் உருவாகுமா? எப்படி எல்லோரும் சன்னியாசியாகவும் சாமியாராகவும் துறவறம் சென்றால் மனித சந்ததிகள் உருவாகாதோ, அதேபோன்று தான் இந்தக் கட்டுப்பாடற்ற உறவு முறையின் மூலமும் மனித சந்ததி நின்றுவிடும். நாம்தான் இவ்வுலகில் கடைசி சந்ததிகளாக இருப்போம். இப்படி இவர்கள் சொன்ன இந்த முடிவை, இவர்களது தாய் தந்தையர்கள் எடுத்திருந்தால் இவர்கள் பிறந்திருப்பார்களா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

உரை: பி. ஜைனுல் ஆபிதீன் 
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

Tuesday, July 2, 2013

கேரளா படகு வீடுகளில் விபச்சாரம்… அதிர்ச்சி தகவல்கள்



ஆலப்புழா: கேரள மாநிலத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் அழகான படகு வீடுகளில் கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடவுள் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் அதிகம் உள்ளன. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள படகு வீடுகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் விருப்பமானது. சுற்றுலா பயணிகள் மூலம் மாநிலத்தின் வருமானமும் அதிகரிக்கிறது. ஆனால் அழகான அந்த படகு வீடுகளில் இருண்ட பக்கங்களும் உள்ளதாக

செக்ஸ் டூரிஸம்

மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் முக்கியமான சுற்றுலா ஒரு திடீர் பாய்ச்சலை, அது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உள்ளூர் பெண்கள் பாலியல் சந்திப்புக்களில் அனுபவிக்க பார்த்து சுற்றுலா பயணிகள் சில நேரங்களில் குழந்தைகள் இருவரும் கொண்டு வந்தது. டெக்கான் கிரானிக்கல் இதழ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
படகுவீடுகளை மூலதனமாக வைத்து ஜெஸ்ஸி, ஜீனத், ஸ்நேகா என்ற மூன்று பெண்கள் விபச்சாரத் தொழில் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு விபச்சாரத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனராம். இதன்மூலம் பலஏக்கர் நிலங்கள், சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர்.

ஏஜென்டுகள் மூலம் உளவு

                             
                       
இவர்கள் ஏஜென்டுகளை நியமித்து கல்லூரிப் பெண்களை கவர்ந்து பாலியல் தொழிலுக்கு இழுத்துவிடுகின்றனர். இவர்களின் வலையில் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது பள்ளி மாணவிகளும் சிக்கியுள்ளனர்.

வெளிநாட்டுப் பயணிகள்

                            

இந்த மாணவிகளை அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக்குகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொல்லை தாங்கலை

                             
அரபு நாட்டுப் பயணியிடம் மூன்று நாட்கள் அனுப்பிவைக்கப்பட்ட 20 வயதான இளம்பெண் அந்த பயணியின் தொல்லை தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள். அந்தப் பெண்ணுக்கு 45,000 ரூபாய் கொடுத்துள்ள நிலையில் ஏஜெண்டுகளின் கைக்கு போனது போக அந்த இளம்பெண்ணுக்கு வெறும் 10,000 ரூபாயை மட்டுமே கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இந்த ஒரு பெண் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான பெண்கள் இவ்வாறு ஏமாற்றி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நோய்கள் பரப்பும் பயணிகள்

                            

வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் பயணிகள் மூலம் இந்த இளம் பெண்களுக்கு நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. 50 சதவிகிதம் கமிஷன் கிடைப்பதால் ஏஜென்டுகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

ஆடம்பர வாழ்க்கை


பள்ளி, கல்லூரி மாணவிகளில் பலரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த தொழிலில் சிக்குகின்றனர். ஆழப்புலா மாவட்டத்தில் மட்டும் 1860 பாலியல் தொழிலாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவில் மாணவிகள்தான் உள்ளனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.


THANKS TO
THATS TAMIL NEWS :
 Published: Friday, June 28, 2013, 14:00 [IST]