Saturday, June 22, 2013

மாற்று மதத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்ட பூமி பூஜையை, பாத்திஹா ஓதி நடத்தி வைக்கும் முஹம்மது குட்டி ஹலரத் (?)



மாற்று மதத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்ட பூமி பூஜையை,
பாத்திஹா ஓதி நடத்தி வைக்கும் முஹம்மது குட்டி ஹலரத் (?)
அஸ்ஸலாமு அலைக்கும் 

உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது. ஆனால் இந்த மார்க்கம் எப்படிச் சிறந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் திகழ்கிறது என்பதை முஸ்லிமல்லாதவர்களூம் முஸ்லிம்களில் பலரும் அறியாமல் உள்ளனர். 

சமீபத்தில் நமது ஊரில் நிகழ்ந்த மரணத்தில் தனது தாய்க்கு ஜனாஸா தொழுகை நடத்த வந்த சகோதரனை தடுத்து நிறுத்த முயன்ற லப்பை உனக்கு அல்ஹம்து சூரா ஓத தெரியுமா என்று கேட்டு தலைக்கு தொப்பி போடாமல் தொழ வைக்க கூடாது என்று சொல்லி முரண்டு பிடித்ததும் அதை கேட்டு சுன்னத்தானா தாடியை வைக்காமல் வழித்து சிறைத்த கூட்டம் தொப்பி போடு ,தொப்பி போடு என்று ஜனாஸாவை வைத்து கொண்டு காச், மூச் என்று கத்தி ஓலமிட்டது .

அந்த நேரத்தில் சச்சரவை விரும்பாத சகோதரன் தொப்பி போட்டு தொழ வைத்தான் .தொழுகை முடிந்த உடனேயே அதை தொடர்ந்து அவர்கள் நடத்தும் துவா, தல்கீன் என்று இஸ்லாத்தில் இல்லாத அனைத்து அனாச்சாரங்களும் நடந்து முடிந்தது .அதை தடுக்க முடியாமல் தொழுகையை மட்டும் நடத்திய திருப்தியுடன் அந்த சகோதரன் பார்த்து கொண்டு நின்றான் .

நமது ஊர் ஆலீம்கள் நிறைந்த ஊர் என்று சொல்கிறார்கள் அப்படி இருக்க இந்த ஆலீம்கள் மார்க்கத்தை சொல்லாமல் இருப்பதால் தானே இந்த லப்பைமார்கள் ஓநாய்களை போல ஓலமிடுகிறார்கள். மார்க்கத்தை சொல்ல விடாமல் அவர்களை தடுப்பது எது ?

'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.(புகாரி 79)

நபி (ஸல் ) அவர்கள் மார்க்க அறிவை ஒரு பெரிய மழையுடன் ஒப்பிட்டு அது சென்றடைகிற இடங்களை,மார்க்க அறிவை தேடி அதை பிறர்க்கு கற்று கொடுப்பவர் மார்க்க அறிவை அறிந்து கொள்ள முடியாதவர் இவர்களின் நிலைகளை உதாரணம் காட்டி மார்க்க அறிவின் அவசியத்தை பற்றி வலியுறுத்தினார்கள் 

மார்க்க அறிவை தானும் கற்று பிறர்க்கும் பயன்பெறும் வகையில் நடப்பவர்களை நீரை உறிஞ்சி அதன் மூலமாக புற்பூண்டுகள் முளைக்க கூடிய நிலங்களுக்கும் தண்ணீரை தேக்கி வைத்து மக்கள் பருகி விவசாயத்திற்கு நீர் பாய்ச்சி பயன் பெறக் கூடிய கிணறுகள் ,குளம் குட்டைகள் இருக்கும் நிலங்களுக்கும் ஒப்பிட்டு கூறுவதிலிருந்து மார்க்க அறிவை அறிந்து அதை பிறர்க்கு பயன்பெற செய்பவர்கள் சிறப்பு பற்றி விளங்குகிறது 

இதை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்(58:11)

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன். (35:28)

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.(2:269)

இவ்வாறு பல்வேறு சிறப்புக்களையும் உலகம் முழுவதும் பரவி மக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கின்ற நீர்நிலைகளை போல இருக்க வேண்டிய ஆலீம்கள் அறிவை கற்று அதனை மக்களுக்கும் போதிக்கின்றார்களா ?என்று பார்த்தால் மார்க்கம் என்ற பெயரில் மத்ஹப் குப்பைகளையும் ,மவ்லீதுகளையும் ,பிதத்களையும் அதனையே வணக்க வழிபாடுகளாக மக்களுக்கும் போதிக்கிறார்கள் .மக்களுக்கு அறிவுரை கூற கூடிய இவர்களின் சொற்பொழிவுகளில் இந்த அடிப்படையில் கட்டுகதைகளும் ,நகைச்சுவைகளும் நிறைந்து இருக்கும் .இதற்கு காரணம் சரியான மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாததும் அல்லது தெரிந்து கொண்டு மார்க்கத்தை தன் வயிற்று பிழைப்புக்காக மறைப்பதும் தான்.

இது போன்றவர்களை அல்லாஹ் சபிக்கின்றான் 


வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்(2:159)

இப்போது அடிக்கல் நாட்டு விழா என்று மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நடத்தி காட்டி இருக்கிறது ஊருக்குள் வந்த சாப கேடு ஒன்று. மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று கூறி இவருடைய மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு கற்று கொடுக்க வந்து இருக்கிறது 

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ் வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! (Al-Hujuraat: 16)

இந்த குள்ளநரி சாயம் பூசி வந்ததை அறிந்தோ அறியாமலோ நமது ஊர் ஆலீம்? என்று சொல்லி கொள்ளும் சிங்கங்கள் கண் மூடி மவுனம் சாதிக்கின்றார்கள் .

மாற்று மத கலாசாரத்தை பின்பற்றுபவன் என்னை சேர்ந்தவன் இல்லை என்று ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்களே அது இந்த குள்ளநரிக்கு தெரியாதா?

நமது ஊர் மார்கத்தை கற்ற ஆலீம்களுக்கு(?) தெரியாதா ?

இவர்கள் மவுனமாக இருக்க வெளியூரில் இருந்து வந்து ஓரளவு அரசல்புரசலாக மார்க்கத்தை சொல்லும் ஹைதர் அலி ஆலிமுக்கு தெரியாதா ?

ஆலீம்மார்களே சனிக்கிழமை மீன் பிடித்த சமுதாயம் பற்றி உங்களுக்கு தெரியும் அப்போது நமக்கென்ன வம்பு என்று அதை தடுக்காமலும் தடுத்தவர்களை தடுத்தும் வந்தவர்களையும் தான் அல்லாஹ் அழித்தான்,என்பதை ஞாபக படுத்தி இந்த அனாச்சாரங்களை வெளியே சொல்ல வாருங்கள் 

அதிரையின் ஜமாஅத் தலைவர்களே நமது ஊருக்கு வந்து ஆட்டிபடைக்கும் சாயம் பூசிய குள்ளநரியிடம் ஏமாந்து போகாமல் மார்க்கத்தை கற்று அறிந்த நமது ஊர் ஆலிம்களின் கருத்துகளை கேட்க முயற்சியுங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரி லும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (Al-Maaida: 57) 

அவர்கள் தமது மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டனர். இவ்வுலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. இந்த நாளைச்சந்திக்க வேண்டிவரும் என்பதை அவர்கள் மறந்து, நமது வசனங்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தது போல் இன்று அவர்களை நாமும் மறந்து விட்டோம்6. (Al-A'raaf: 51)


தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (Al-An'aam: 159)

 நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் தன் அடியார்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக ஓரேயடியாக மார்க்க அறிவை இல்லாமல் ஆக்கிவிடமாட்டான்.ஆனால் மார்க்கம் தெரிந்தவர்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக எந்த மார்க்க அறிஞரும் இல்லாத அளவுக்கு மார்க்கறிவை இல்லாமல் ஆக்குகிறான். இறுதியில் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்குவார்கள். அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்படும்போது மார்க்கத்தில் இல்லாததைத் தீர்ப்பாக வழங்கி தாங்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள்.
 அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்
 நூல்: புகாரி 100

மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கும் வரை முஹம்மது குட்டி போன்ற மார்க்க வியாபாரிகளின்  அட்டகாசம் அடங்காது.

இவ்வாறு பூமி பூஜை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது  என்று  தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள் முன்வர வேண்டும். விவாதத்திற்கு வந்தால் தலைப்பாகை கழன்று விடும். இன்ஷா அல்லாஹ்.

News From ADIRAI TNTJ .COM

Tuesday, June 18, 2013

சூப்பர் மார்க்கெட் தந்திரங்கள் !!!!!!!!!!!

       



இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.

20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் பாவனையாளர்களின் தேவைகளை முழுமையாக கவர் செய்தவை சிறிய மளிகைக் கடைகள்தான். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன சூப்பர் மார்க்கெட்கள். சிறிய நகரங்களில்கூட வந்துவிட்டன.

உலகின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்குகின்றன. அல்லது, ஒரு இந்தியப் பார்ட்னருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் செயின்களை அமைத்திருக்கின்றன. இதைத்தவிர இந்திய வர்த்தகர்களும் அச்சு அசலாக மேலைநாட்டுப் பாணியில் சூப்பர் மார்க்கெட்களைத் திறந்திருக்கிறார்கள்.


அட்லான்டாவிலுள்ள (அமெரிக்கா) ஒரு சூப்பர் மார்க்கெட்

மொத்தத்தில் நீங்கள் வசிப்பது ஐரோப்பாவோ, வட அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றோ, சூப்பர் மார்க்கெட்கள் உங்கள் வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகி விட்டது.

வட அமெரிக்காவில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் குடும்ப வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை நீங்கள் செலவு செய்வது சூப்பர் மார்க்கெட்களில் என்கிறது கனேடிய பாவனையாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரம். இது ஒரு ஆவரேஜ் சதவீதம். ஐரோப்பாவிலும் மற்றய மேலை நாடுகளிலும் இருப்பதும் கிட்டத்தட்ட இதே ஆவரேஜ்தான். ஆசியாவில் வசித்தால் நீங்கள் செலவு செய்வது இதைவிடச் சற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

இந்தக் கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவராக நீங்கள் இருந்தால், ஒரு காரியம் செய்யுங்கள். – அடுத்துவரும் 1 மாத காலத்திற்கு ஒவ்வொரு தடவையும் நீங்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், ரசீதுகளை ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். 1 மாதம் முடிந்ததும் அவற்றிலுள்ள டாலர், யூரோ, அல்லது ரூபா பெறுமதியைக் கூட்டி வரும் தொகையை 12 ஆல் பெருக்குங்கள்.

வரும் விடை அல்லது நீங்கள் செலவு செய்யும் பணத்தின் தொகை ஆயிரக் கணக்கில் இருக்கும். உங்களுக்குத் தலைசுற்றும்.

இந்தத் தொகைதான் நீங்கள் வருடமொன்றுக்கு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்களுக்கு செலவு செய்யப்போகும் ஆவரேஜ் தொகை.

நான் ஏற்கனவே கூறியதுபோல இந்தத் தொகை ஆளாளுக்கு அல்லது வேறு வேறு குடும்பங்களுக்கு வேறுபடும். சிலருக்கு வருட வருமானத்தில் 30 சதவீதமாக இருக்கலாம். வேறு சிலருக்கு வருட வருமானத்தில் 20 சதவீதமாக இருக்கலாம். புள்ளிவிபரப்படி கனேடிய ஆவரேஜ் 25 சதவீதம்.


பிரான்சிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வைன் பிரிவு

“சரி. இதற்கு என்ன செய்வது? வாழ்க்கைச் செலவு அப்படி” என்று வழமைபோல செலவு செய்துகொண்டு இருப்பதானால், நீங்கள் இதைப் படிக்க வேண்டியது அவசியமல்ல. அவசியம் எங்கே வருகிறது என்றால், கனேடியப் புள்ளிவிபரம் கொடுக்கும் மற்றொரு தரவில்!

அந்தத் தரவு என்ன? மொத்த வருமானத்தின் 25 சதவிகித தொகையை சூப்பர் மார்க்கெட்டில் செலவு செய்யும் ஒரு குடும்பத்தில் செலவு செய்யும் முழுத்தொகையின் 80 சதவீதம்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி வேஸ்ட் ஆகப் போய்விடுகிறது. அடடா!

அதாவது நீங்கள் 5000 டாலருக்கு ஷாப்பிங் செய்திருந்தால் 4000 டாலருக்கு வாங்கும் பொருட்களைத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மிகுதி 1000 டாலர் பெறுமதியான பொருட்களை வீணடிக்கிறீர்கள் அல்லது உபயோகிக்காமல் எறிகிறீர்கள். இதில் பத்து நாட்களுக்குமேல் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு அழுகி எறியும் தக்காளி முதல், 2 வாரம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருந்த பாதிப் பாக்கட் பால் எக்ஸ்பயரி தேதி முடிந்து எறிவது வரை அடங்கும்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில¢லை. கனேடியப் புள்ளிவிபரத்தில் மேலும் ஒரு தரவு இருக்கிறது. அதன்படி, நீங்கள் செலவு செய்யும் தொகையின் 10 சதவீதம், நீங்கள் தேவையில்லாமல் வாங்கும் பொருட்களில் செலவாகின்றது. அதாவது வருடத்திற்கு 5000 டாலர் செலவு செய்தால், சுமார் 500 டாலர் பெறுமதியான பொருட்களை நீங்கள் தேவையில்லாமல் அல்லது அவசியமில்லாமல் வாங்குகிறீர்கள்.


ஜப்பானிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் டிஸ்பிளே ஸ்டைல்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தக் கணிப்பு சரி என்பது புரியும்.

மலிவாகப் போட்டிருக்கிறார்கள், அல்லது இந்த வாரம் மாத்திரம் இந்தப் பொருள் தள்ளுபடி விலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கப்படும் பொருட்கள் இந்த வகை. அதே நேரத்தில், புதிதாக அறிமுகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களின் விளம்பரத்தால் கவரப்பட்டு வாங்கப்படும் பொருட்களும் இந்த வகையில் வரும்.

இந்த 10 சதவீத பொருட்களின் தள்ளுபடி விலை விளம்பரங்கள் உங்கள் கண்ணில் தட்டுப்படாதிருந்திருந்தால், சூப்பர்மார்க்கெட்டில் இவை உங்களின் கைகளில் தட்டுப்பட்டிருக்காது. உங்கள் வீடுவரை வந்துமிருக்காது.

மேலேயுள்ள தரவுகள் இரண்டையும் கூட்டினால், சூப்பர் மார்க்கெட்களில் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் சுமார் 30 சதவீதத்தை வேஸ்ட் செய்கிறீர்கள். இது ஒருபுறம் இருக்க, மிகுதி 70 சதவீதம் செலவு செய்து நீங்கள் வாங்கிவரும் பொருட்களின் நிஜமான பெறுமதி அதுதானா? – அதை வேறுவிதமாகக் கேட்டால், நீங்கள் வாங்கிய பொருட்களை அதைவிட மலிவாக வாங்கியிருக்க முடியாதா?

நீங்கள் எந்தளவுக்கு ஷாப்பிங் புலி என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு சராசாரி வட அமொரிக்கப் பாவனையாளர் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக வாங்கும் அதே பொருட்களை 15 சதவீதம் குறைவான விலையில் வாங்குவது சாத்தியம் என்கிறது அதே கனேடியப் புள்ளிவிபரம்.


கனடாவிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்புறத் தோற்றம்.

இதைச் சொல்வது ஃபிளெக்ஸ் ப்ரைசிங் என்று. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் இங்கு சொல்லப் போகின்றோம்.

நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்? இன்று? நேற்று? கடந்த வாரம்? அது எப்போதாக இருந்தாலும், அந்த சூப்பர் மார்க்கெட்டின் உட்புறத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள்.

வழமையாக சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும், அது எந்த நகரத்தில் இருந்தாலும், பொதுவான சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? கவனித்திராவிட்டால் நாங்கள் இப்போது சொல்லப்போகும் சில அம்சங்கள் நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும் இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

1) சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் ஆட்களில் அனேகமானவர்கள் வைத்திருக்கும் ஷாப்பிங் லிஸ்டில் இருக்கும் ஒரு அவசியப் பொருள் பால். இது நீங்கள் பயன்படுத்தும் பாலாகவோ, அல்லது குழந்தைகளுக்கான பாலாகவோ இருக்கலாம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தமது வருகையின் 70 சதவீதமான ட்ரிப்களில் பால் வாங்குகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

அதை வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் 10 தடவைகள் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அதில் 7 தடவைகள் உங்களது ஷாப்பிங் லிஸ்ட்டில் பால் இருக்கிறது. சரி. கேள்வி என்னவென்றால், இப்படி அதிகமானவர்களால் வாங்கப்படும் பால், ஏன் சூப்பர் மார்க்கெட்டின் வாயிலருகேயோ காஷியருக்கு அருகேயோ வைக்கப்பட்டிருப்பதில்லை?

2) அநேக சூப்பர் மார்க்கெட்களின் உள்ளே வாத்திய இசை ஒலிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி ஒலிக்கும் இசை எந்த வகையான இசை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா. கவனித்திருந்தால் அதை இப்போது ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

3) நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட், சிப்ஸ், பாப்கார்ன் சூயிங்கம் போன்றவை உள்ளே ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதே பொருட்கள் நீங்கள் பணம் செலுத்தும் கேஷியருக்கு அருகிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்திருப்பீர்கள். ஒரே பொருட்கள் ஏன் இரண்டு வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


பிரிட்டனிலுள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் செயின்.

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ஏதோ தற்செயலாக சூப்பர் மார்க்கெட்களில் அமைந்து விடுவதல்ல. இவை காரணமாக அமைக்கப்பட்டடிருப்பவை. காரணம் -சைக்காலஜி. மனோத்ததுவம். மனோதத்துவ ரீதியாக உங்களை மடக்குவதுதான் திட்டம்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்த மனோத்துவ தந்திரங்கள். Consumer psychological Tricks.

முதலாவதாகக் கூறப்பட்ட பால் விவகாரத்தையே பாருங்கள். சூப்பர் மார்க்கெட்கள் பாவனையாளர்களின் வசதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதானால், கடைக்குள் நீங்கள் நுழைந்தவுடன் கையில் எடுக்கும் விதத்தில் அவை வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சூப்பர் மார்க்கெட்டுக்கு நீங்கள் 10 தடவைகள் சென்றால், 7 தடவைகள் பால் வாங்கச் செல்கிறீர்கள்.

ஆனால் பால் வைக்கப்பட்டிருப்பது சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெகுதொலைவில் வைக்கப்பட்டிருப்பதன் காரணம், உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே அதிகதூரம் நடக்கவைப்பது.

ஏன் நடக்க வைக்கிறார்கள்? ஏதாவது பாதயாத்திரை பயிற்சியா?

இல்லை. அதிக நேரம் உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்குள் தங்க வைக்க விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால்தான் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகநேரம் உங்கள் கண்களில் படும். அதிகநேரம் கண்களில் படும்போது, அந்தப் பொருட்கள் உங்கள் மனதில் பதியும். இதுதான் இலவச விளம்பரம்.

ஒரு புத்திசாலித்தனமான சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் வாயிலில் இருந்து பால் இருக்கும் இடத்துக்கு நடந்து செய்லும் பாதையின் இருபுறமும் பரொமோஷனல் ஐட்டம்கள், உங்களின் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.


சூப்பர் மார்க்கெட்டில் பால் வைக்கப்பட்டிருப்பது எங்கே?

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த புரொமோஷனல் ஐட்டம்கள் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கின்றன என்று பாவனையாளருக்குத் தெரியப்படுத்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? விளம்பரம் செய்ய வேண்டும்.

பத்திரிகையிலோ, டிவியிலோ, ரேடியோவிலோ, இணையத்தளத்திலோ அதை விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுத்து விளம்பரம் செய்தாலும், அந்த விளம்பரத்தை உங்களைப் பார்க்க வைத்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு வரவைக்கவும் வேண்டும். ஒருவேளை விளம்பரத்தைப் பார்த்து 3 நாட்களின்பின் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும்போது, அந்த விளம்பரம் உங்களது மனதிலிருந்து மறைந்தும் விட்டிருக்கலாம்.

ஆனால், இதோ நீங்கள் பால் எடுக்கச் செல்லும் பாதையில் அவர்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய பொருட்களையே கவர்ச்சிகரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். விளம்பரச் செலவு கிடையாது. பத்திரிகை விளம்பரத்தை நீங்கள் பார்த்துவிட்டு 3 நாட்களில் அதை மறந்து விடுவது போல இல்லாமல், விளம்பரப்படுத்தப்படும் பொருள் உங்கள் கைக்கெட்டிய தொலைவிலேயே இருக்கிறது.

இலவச விளம்பரம்! உடனடி விற்பனை!!

இரண்டாவது பாலை மாத்திரம் வாங்கும் உத்தேசத்துடன் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தால், அவை வாயிலுக்கு அருகே வைக்கப்பட்டடிருந்தால் அவற்றை எடுத்து, காசைக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்து விடுவீர்கள். சூப்பர் மார்க்கெட்டில் டிஸ்பிளே செய்யப்பட்டிருக்கும் மற்ற எந்தப் பொருளும் உங்கள் கண்களில் பட்டிருக்காது.


தாய்லாந்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்

அதனால்தான் பாவனையாளர் அதிக தடவைகள் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்றிருக்கும் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தொலைவில் வைக்கிறார்கள். அதை எடுக்கப் போகும்போது நீங்கள் மற்றைய பொருட்களையும் பார்க்கப் போகின்றீர்கள். அப்போது உங்கள் மனதில் சில எண்ணங்கள் தோன்றுப் போகின்றன.

“அட இந்தப் பொருளைத்தானே வீட்டில் மறக்காமல் வாங்கிவரச் சொன்னார்கள். நல்லவேளை இப்போது கண்களில் பட்டதே”

“இந்தப் பொருள் பார்க்க நன்றாக இருக்கிறதே. சும்மா ஒரு தடவை வாங்கிப் பார்க்கலாமா?”

“ஓகோ இந்தப் பொருளும் இங்கே விற்பனையாகிறதா? எங்கே வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”

“வாவ். இந்தப் பொருளின் விலை இவ்வளவுதானா, மலிவாக இருக்கிறதே. வாங்கிப் பார்க்கலாமா?”

பால் பாக்கட்டை எடுப்பதற்கு சூப்பர் மார்க்கெட்டின் கடைசி ஷெல்ஃப்வரை நடக்கும் பத்துக்கு இரண்டு பேருக்காவது மேற்கண்ட யோசனைகளில் ஏதாவது தோன்றினால் சூப்பர் மார்க்கெட்காரருக்கு வெற்றி. பத்துக்கு நான்கு பேருக்கு தோன்றினால் அதிஷ்டம். அதற்குமேல் தோன்றினால் தீபாவளி!!

பார்த்தீர்களா? எல்லாமே மனோத்துவ ரீதியான தந்திரம்தான்.

அடுத்ததாக சூப்பர் மார்க்கெட்டில் ஒலிக்கும் இசை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது யோசித்துப் பாருங்கள். அந்த இதை மிகவும் மென்மையான, ஸ்லோ மியூசிக்காக இருந்திருக்கும்.

அதற்குக் காரணம் என்ன? எல்லா சூப்பர் மார்க்கெட்காரர்களுக்கும் வேகமான தடாங் படாங் இசை பிடிப்பதில்லையா? அப்படியல்ல.

விஷயம் என்னவென்றால், மனோதத்துவ அடிப்படையில் மென்மையான ஸ்லோவான இசை உங்களின் மனசை இலோசாக்குவதுடன், உங்களது இயங்கு திறனையும் குறைக்கின்றது.

நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் கார்ட் ஒன்றைத் தள்ளியபடி ஒவ்வொரு ஷெஃப்பாகப் போய் உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வகை ஸ்லோவான இசை உங்களது நடையையும் ஸ்லோவாக்கிவிடும்.


ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளியபடி அங்கு ஒலிக்கும் இசையைக் கேட்டபடி நடந்து பாருங்களேன்!

சாதாரணமாக நீங்கள் நடக்கும் வேகத்தில் சூப்பர் மார்க்கெட்டின் ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃப்பை நீங்கள் கடக்க எடுக்கும் நேரத்தைவிட, அதிக நேரம் எடுக்கப்போகின்றீர்கள். உங்களையறியாமல் அதிக நேரம் ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் போகின்றீர்கள். அதிக நேரம் பார்க்கும்போது, அவை அதிகநேரம் உங்கள் மனதில் பதியப் போகின்றன.

இந்த வேகக் குறைவால், வழக்கத்தைவிட ஓரிரு பொருட்களை நீங்கள் அதிகமாக வாங்குவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகின்றது. இல்லையா.


பிரிட்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்.

அதேபோல சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே சொக்லட், சூயிங்கம் போன்ற பொருட்கள் உள்ளே ஒரு இடத்தில் இருக்கும். அதே போருட்கள் நீங்கள் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு பணம்செலுத்த தயாராக கேஷியருக்கு முன்னால் நிற்கும்போதும் வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவா.



அதிலும் ஒரு சிறிய மனோதத்துவ தந்திரம் இருக்கின்றது.

அது என்னவென்றால், கேஷியரிடம் பணம் செலுத்த வருமுன்னர் நீங்கள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். எல்லாம் முடிந்து கேஷியருக்கு முன்னே வரும்போது அங்கே வரிசையாக ஆட்கள் பணம் செலுத்த நிற்பார்கள். நீங்களும் அந்த வரிசையில் போய் இணைந்து கொள்வீர்கள்.

ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் இருந்து எப்போதாவது தாவி இறங்கியிருக்கிறீர்களா? அப்படி இறங்கியிருந்தால், நீங்களும் பஸ் செல்லும் திசையில் சிறிது தூரம் ஓடித்தான் நிற்க முடியும் என்பது தெரிந்திருக்கும். இங்கு நடப்பதும் கிட்டத்தட்ட அதே ரிஃப்ளெக்ஷன்தான்.

கடந்த பல நிமிடங்களாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்கைள எடுத்து ஷாப்பிங் கார்ட்டுக்குள் போட்ட உங்கள் கைகள் கேஷியருக்கு முன்பு ஓரே இடத்தில் காத்திருக்கும்போது துறுதுறுக்கும். அப்போது நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து எட்டக்கூடிய தொலைவில் எதையாவது எடுக்கும்படி உங்கள் மனம் தூண்டும்.


கேஷியருக்கு அருகேயுள்ள ஷெல்ஃபில் இருக்கிறது உங்களுக்கான இரண்டாவது வலைவிரிப்பு!

ஆனால் எட்டக்கூடிய தொலைவில் இருக்கும் பொருள் விலையுயர்ந்த பொருளாக இருந்தால் நீங்கள் கைவைக்க மாட்டீர்கள். விலை அதிகமில்லாத நொறுக்குத்தீனி அருகே இருந்தால் அதிலும் ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள்.

அதைத் தவிர நீங்கள் குழந்தைகளுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தால், அவர்களை கேஷியருக்கு முன்னாலுள்ள வரிசையில் சில நிமிடங்கள் காத்திருக்க வைத்தபடி நிற்கையில், குழந்தைகளின் கண்களில் படும்படி சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தால் என்னாகும்?

அடுத்த தடவை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் கேஷியருக்கு முன்னால் நிற்கும்போது, அங்கே உங்களுக்கு முன்னால் நிற்பவர்களில் எத்தனைபேர் அருகிலிருக்கும் சிறு பொருட்களை வாங்குகிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். பத்தில் இரண்டு பேராவது வாங்குவார்கள்.

இவர்களில் யாரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தின்பண்டங்கள் விற்கும் பிரிவில் இதே பொருட்கள் இருந்தும், அங்கே எடுக்காமல் தவிர்த்துவிட்டு, கேஷியர்வரை வந்தவர்கள். கடைசிக் கிளைமாக்ஸில் மாட்டிக் கொண்டார்கள்.

சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்களில் இவை ஒரு சிறு துளிதான்.



நல்ல கல்லூரி எது? எவ்வாறு தேர்வு செய்வது?

                      


மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில……….

நிர்வாகம்

கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள்

சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது M.Phil, M.Tech, Phd, போன்ற கல்வித்தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகாரம்

தேர்ந்தெடுக்கும் கல்லூரி, மத்திய, மாநில அரசுகளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.

உள்கட்டமைப்பு வசதிகள்

தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

கல்லூரியின் பிரபலம்

புகழ் பெற்ற கல்லூரியில் படிப்பது, சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும். கடந்த ஆண்டு கல்லூரியின் மொத்த தேர்ச்சி விகிதத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு

தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறதா? என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். அதிலும் குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.

பாடத்திட்டங்கள்

ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அம்சங்கள்தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல்.
இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வசந்தமாக்கவும்.

கட்டணம்

கட்டணங்களை பொறுத்தவரை சிலர் அட்மிஷனின் போதே முழு செமஸ்டருக்கான பணம் மற்றும் ஹாஸ்டல் கட்டணம் போன்ற மற்றக்கட்டணங்களையும் சில்ர் செலுத்தி விடுகின்றனர். ஆனால் கல்லூரி எதிர் பார்த்த அளவில் இல்லாவிட்டாலோ, அல்லது அதைவிட நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டாலோ நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தியிருந்தாலும் அதனை திரும்ப பெற முடியாது ஆகவே பகுதி பணம் மட்டும் ஆரம்பத்தில் செலுத்தினால் வீண்விரயத்தை தவிர்க்கலாம்.

பிற வசதிகள்

விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்


Monday, June 10, 2013

முஸ்லிம்களுக்கு பகிரங்க வேண்டுகோள் !

  •                 இதுதான் நாம் காத்திருந்த தருணம் !

இந்த மதவெறி பிடித்த நாட்டில் நமக்கு இருப்பது இது ஒன்றுதான் !

அதையும் மதவெறி பிடித்த கூமுட்டை அடிவாங்கிய சு ப சாமி - முஸ்லிம்களிடம் இருந்து ஓட்டை பறிக்கவேண்டும் என்று சொன்னான் பரதேசி - சைக்கோ சாமி !

முஸ்லிம்களுக்கு பகிரங்க வேண்டுகோள் !
ஒரு முஸ்லிமின் ஒட்டு பிஜேபி க்கு விழக்கூடாது ! 

ஒழிப்போம் மதவெறி பிஜேபியை ! காப்போம் இந்தியாவை !
 
மதவெறியை ஒழித்து ! மதசார்பின்மை நிலைநாட்டு !
 

பிராச்சாரத்தை தீவிரபடுத்துவோம் !

மதவெறியை ஒழிப்போம் - இந்திய தேசத்தை விட்டு !

வேண்டுமா - குஜாரத் இந்தியாவில் அணைத்து மாநிலத்திலும் 
வேண்டுமா - பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் 

முஸ்லிம்களே ! 1 லட்சம் முஸ்லிம் படுகொலைகள் இந்திய முழுவதும் - பிஜேபி அரசியில் வந்த நாள் முதல் !

3500 முஸ்லிம் படுகொலைகள் குஜராத்தில் 
5 லட்சம் முஸ்லிம் மக்கள் - சில நூறு - முதல் ஆயிரம் வரை கிறிஸ்தவ மக்கள் குஜாரத்தை விட்டு விரட்டி அடிப்பு !

தன வாழ்நாள் முழுவதும் அடிமாட உழைத்து சேர்த்து வைத்த சொத்து சொகம் மோடியால்  சோகமாகி மத வெறி கொண்டு சூறையாடப்பட்டது.

5000 ஆயிரம் கோடி மதிப்புள்ள  முஸ்லிம்கள் சொத்து சூறை ! கேட்க நாதி இல்லை..!!! 

2500 முஸ்லிம்கள் கொன்று குவிப்பு - பம்பாயில் 
5000 முஸ்லிம்கள் கொன்று குவித்து - அல்லாஹுவின் வீட்டை இடித்து (பாப்ரி மஸ்ஜித் ) - இந்திய முழுதும் ரத்த  ஆறு

நிறைமாத கரிப்பிணி வைய்ரை கிழித்து சிசுவை கொன்ற 
மதவெறியர்களுக்கு இந்தியனே நீ ஒட்டு போடாதே ..

நீ ஒரு முஸ்லிம் என்றால் வெறுத்து ஒதுங்கு !


காஷ்மீரில் வடியும் ரத்தம் !

அசாமில் வடிந்த ரத்தம் !

மறக்காதே ! மறக்காதே !

மதம் பிடித்த கூடட்தை  மறக்காதே !
மதம் பிடித்த கூடட்தை  மறக்காதே !

இன் ஷா அல்லாஹ் ….!!!

Special Note :

இட ஒதிக்கீடு வேண்டும் - இந்த அரசாங்கம்  தராவிட்டாலும் பரவாஇல்லை  அல்லாஹுவின் எதிரிகளுக்கு ஒட்டு போட்டு விட கூடாது .

படைத்த இறைவனுக்கு - காப்பது கஷ்டமில்லை காக்கும் அல்லாஹுவிர்க்கு - மீண்டும் உய்ரிபிப்பது ஒரு சிரமும் இல்லை !!!
---------------



அல்லாஹுவின் இறை இல்லத்தை வீழ்த்திய அணிநியாயக்கரர்கள் !





மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் !
மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் !
 
இந்த நாட்டில் கடைசி முஸ்லிம் உயிருடன் இருக்கும் வரை ...!!!
 

கியாமத் நாள் வரும் வரை மறக்க மாட்டோம் 
மறக்கமாட்டோம்..!!! 

மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் ! 

மறக்கமுடியுமா இந்தியாவின் பாசிச நாளை ?
 மறக்க முடியுமா இந்தியாவின் நாசிச நாளை ?
 மறக்க முடியுமா இந்தியாவின் காவிச நாளை ?
 
மறக்க முடியுமா இந்தியாவின் மதவெறி நாளை?
 
மறக்க முடியுமா இந்தியாவின் இனவெறி நாளை ?
 
மறக்க முடியுமா இந்தியாவின் சட்டம் தூக்கில் 
தொங்கிய நாளை ?
 
மறக்க முடியுமா இந்தியாவின் நீதி என்ற பேனா முள் ஒடிந்த நாளை ?
 
மறக்க முடியுமா இந்தியாவின் குடியரசு தகொலை செய்த நாளை ?
 
மறக்க முடியமா இந்தியாவின் சுதந்திர மறைவு நாளை ?
 
மறக்க முடியுமா ரதயாத்திரையின் ரத்த யாத்திரை அரங்கேறிய நாளை ?
 
மறக்க முடியுமா அநீதியின் சிறகு முளைத்த நாளை ?
 
மறக்க முடியமா இந்தியாவை உலக அரங்கில் தலை குனிந்த நாளை ?
 
மறக்க முடியமா இந்தியாவின் நீதியின் சூரியன் அஸ்தமித்த நாளை ?
 
மறக்க முடியுமா இந்து முஸ்லிம் ஒருமைப்பாடு செத்த நாளை ?
 
மறக்க முடியுமா ஜனநாயகம் மரணித்த நாளை ?
 
மறக்க முடியாமா இந்தியாவின் கருப்பு நாளை ?
 
மறக்க முடியுமா ஒரு முஸ்லிமின் இதய வேதனை நாளை ?
 
மறக்க முடியுமா அல்லாஹுவின் இறை இல்லம் வீழ்ந்த நாளை ?
 
மறக்க முடியுமா டிசம்பர் 6 ஐ ?
No Muslim in this country to vote for BJP (a communal based political party outfit) ....


 If not interested to vote any one, please boycott indian election..!!!
 
If you want same gujaarth incident in every states of India, vote for BJP..

If you want same BABRI MASJID incident in every states of India, vote for BJP..

If you are true indian and true Hindu who follwos upnihshads, puraanas, geethas, and ect. he must boycott BJP if he is true to his Mind honestly.

In sha ALLAH..!!



    இதுதான் நாம் காத்திருந்த தருணம் !

    இந்த மதவெறி பிடித்த நாட்டில் நமக்கு இருப்பது இது ஒன்றுதான் !

    அதையும் மதவெறி பிடித்த கூமுட்டை அடிவாங்கிய சு ப சாமி - முஸ்லிம்...களிடம் இருந்து ஓட்டை பறிக்கவேண்டும் என்று சொன்னான் பரதேசி - சைக்கோ சாமி !

    முஸ்லிம்களுக்கு பகிரங்க வேண்டுகோள் !
    ஒரு முஸ்லிமின் ஒட்டு பிஜேபி க்கு விழக்கூடாது !

    ஒழிப்போம் மதவெறி பிஜேபியை ! காப்போம் இந்தியாவை !

    மதவெறியை ஒழித்து ! மதசார்பின்மை நிலைநாட்டு !


    பிராச்சாரத்தை தீவிரபடுத்துவோம் !

    மதவெறியை ஒழிப்போம் - இந்திய தேசத்தை விட்டு !

    வேண்டுமா - குஜாரத் இந்தியாவில் அணைத்து மாநிலத்திலும்
    வேண்டுமா - பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும்

    முஸ்லிம்களே ! 1 லட்சம் முஸ்லிம் படுகொலைகள் இந்திய முழுவதும் - பிஜேபி அரசியில் வந்த நாள் முதல் !

    3500 முஸ்லிம் படுகொலைகள் குஜராத்தில்
    5 லட்சம் முஸ்லிம் மக்கள் - சில நூறு - முதல் ஆயிரம் வரை கிறிஸ்தவ மக்கள் குஜாரத்தை விட்டு விரட்டி அடிப்பு !

    தன வாழ்நாள் முழுவதும் அடிமாட உழைத்து சேர்த்து வைத்த சொத்து சொகம் மோடியால் சோகமாகி மத வெறி கொண்டு சூறையாடப்பட்டது.

    5000 ஆயிரம் கோடி மதிப்புள்ள முஸ்லிம்கள் சொத்து சூறை ! கேட்க நாதி இல்லை..!!!

    2500 முஸ்லிம்கள் கொன்று குவிப்பு - பம்பாயில்
    5000 முஸ்லிம்கள் கொன்று குவித்து - அல்லாஹுவின் வீட்டை இடித்து (பாப்ரி மஸ்ஜித் ) - இந்திய முழுதும் ரத்த ஆறு

    நிறைமாத கரிப்பிணி வைய்ரை கிழித்து சிசுவை கொன்ற
    மதவெறியர்களுக்கு இந்தியனே நீ ஒட்டு போடாதே ..

    நீ ஒரு முஸ்லிம் என்றால் வெறுத்து ஒதுங்கு !


    காஷ்மீரில் வடியும் ரத்தம் !

    அசாமில் வடிந்த ரத்தம் !

    மறக்காதே ! மறக்காதே !

    மதம் பிடித்த கூடட்தை மறக்காதே !
    மதம் பிடித்த கூடட்தை மறக்காதே !

    இன் ஷா அல்லாஹ் ….!!!

    Special Note :

    இட ஒதிக்கீடு வேண்டும் - இந்த அரசாங்கம் தராவிட்டாலும் பரவாஇல்லை அல்லாஹுவின் எதிரிகளுக்கு ஒட்டு போட்டு விட கூடாது .

    படைத்த இறைவனுக்கு - காப்பது கஷ்டமில்லை காக்கும் அல்லாஹுவிர்க்கு - மீண்டும் உய்ரிபிப்பது ஒரு சிரமும் இல்லை !!!
    ---------------



    அல்லாஹுவின் இறை இல்லத்தை வீழ்த்திய அணிநியாயக்கரர்கள் !





    மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் !
    மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் !

    இந்த நாட்டில் கடைசி முஸ்லிம் உயிருடன் இருக்கும் வரை ...!!!


    கியாமத் நாள் வரும் வரை மறக்க மாட்டோம்
    மறக்கமாட்டோம்..!!!

    மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் ! மறக்கமாட்டோம் !

    மறக்கமுடியுமா இந்தியாவின் பாசிச நாளை ?
    மறக்க முடியுமா இந்தியாவின் நாசிச நாளை ?
    மறக்க முடியுமா இந்தியாவின் காவிச நாளை ?

    மறக்க முடியுமா இந்தியாவின் மதவெறி நாளை?

    மறக்க முடியுமா இந்தியாவின் இனவெறி நாளை ?

    மறக்க முடியுமா இந்தியாவின் சட்டம் தூக்கில்
    தொங்கிய நாளை ?

    மறக்க முடியுமா இந்தியாவின் நீதி என்ற பேனா முள் ஒடிந்த நாளை ?

    மறக்க முடியுமா இந்தியாவின் குடியரசு தகொலை செய்த நாளை ?

    மறக்க முடியமா இந்தியாவின் சுதந்திர மறைவு நாளை ?

    மறக்க முடியுமா ரதயாத்திரையின் ரத்த யாத்திரை அரங்கேறிய நாளை ?

    மறக்க முடியுமா அநீதியின் சிறகு முளைத்த நாளை ?

    மறக்க முடியமா இந்தியாவை உலக அரங்கில் தலை குனிந்த நாளை ?

    மறக்க முடியமா இந்தியாவின் நீதியின் சூரியன் அஸ்தமித்த நாளை ?

    மறக்க முடியுமா இந்து முஸ்லிம் ஒருமைப்பாடு செத்த நாளை ?

    மறக்க முடியுமா ஜனநாயகம் மரணித்த நாளை ?

    மறக்க முடியாமா இந்தியாவின் கருப்பு நாளை ?

    மறக்க முடியுமா ஒரு முஸ்லிமின் இதய வேதனை நாளை ?

    மறக்க முடியுமா அல்லாஹுவின் இறை இல்லம் வீழ்ந்த நாளை ?

    மறக்க முடியுமா டிசம்பர் 6 ஐ ?
    No Muslim in this country to vote for BJP (a communal based political party outfit) ....


    If not interested to vote any one, please boycott indian election..!!!

    If you want same gujaarth incident in every states of India, vote for BJP..

    If you want same BABRI MASJID incident in every states of India, vote for BJP..

    If you are true indian and true Hindu who follwos upnihshads, puraanas, geethas, and ect. he must boycott BJP if he is true to his Mind honestly.

    In sha ALLAH..!!

Saturday, June 8, 2013

சேதுக்கால்வாய் சர்ச்சை: பாலத்தை ராமர் கட்டினாரா? இடித்தாரா?

                            
சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட பாஜக, அதிமுக முதலான கட்சிகள் ராமர் பாலம் கடலுக்குள் இருப்பதால், அதை இடிக்கக் கூடாது என கூக்குரலிடுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூச்சலிடக் காரணம், குரங்குகள் உதவியோடு, அணிலின் ஒத்துழைப்போடு, 'கடத்திச் செல்லப்பட்டத் தனது மனைவி சீதையை' மீட்க, ராமன் கடல் மீது பாலம் போட்ட தாக ராமாயணக் கதையில் வருகிறது.

சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறி னால் அந்தப் பாலத்திற்கு பாதிப்பு வரும்? ஆகவே சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

வெளிநாட்டுக்காரர்கள் இந்த கதை களையும் காரணங்களையும் கேட்டால், வாயால் சிரிக்க மாட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க, மக்கள் பணம் 2,500 கோடியை இத்திட்டத்திற்காக கடலில் போட்டுள்ளது மத்திய அரசு.

அது முதலில் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ''ராமாயணம் என்பது நடந்த ஒரு வரலாறு அல்ல. கற்பனைக் கதை'' என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.

ராமரை முதலீடாக வைத்துக் கட்சி நடத்தி வரும் பாஜக சும்மா விடுமா? நாட்டை ரணகளமாக்க போவதாக மிரட்டி, மத்திய அரசை, பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வைத்தது.

மறுபடி, இப்போது ஒரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு, சேதுக்கால்வாய் தொடர்பாக தாக்கல் செய்துள்ளது. அதில் கம்பராமாயணப்படி, ராமர் கட்டிய பாலத்தை ராமரே இடித்து விட்டதாகவும், இப்போது அங்கே பாலம் ஏதும் இல்லையென்றும் கூறியுள்ளது.

உடனே, ஆன்மீக தமிழறிஞர்கள் சில பேர் இது தவறான வாதம். ராமர், பாலத்தை இடிக்கவில்லை, மத்திய அரசு குறிப்பிடும் கருத்து ''மிகைப் பாடல்கள்'' என்ற பகுதியில் தான் உள்ளன. அவை ஆதாரப் பூர்வமான (ஸஹீஹான) செய்தி (?) இல்லை என்று கூறியுள்ளனர். அவர் களின் கருத்தை ஆங்கில ஏடுகள் சில பெரிதுபடுத்திக்காட்டின.

சேதுக்கால்வாய் திட்ட எதிர்ப்பாளர் களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ் பவரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளரும் மிகச் சிறந்த தமிழ் மேதையுமான சுபவீயிடம் நாம் இது பற்றிக்கேட்டோம். அவர் கூறியதாவது.

'கம்பராமாயணம், யுத்த காண்டம், மீட்சிப் படலத்தின் 117வது பாடலில், ராமன், 'படகுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால், தான் கட்டிய பாலத்தின் ஒரு பகுதியை கீறி, அதாவது உடைத்து, படகுப் போக்குவரத்துக்கு உதவிய செய்தி இடம் பெறுகிறது.

ராமர்பாலம் ஒன்று இருக்கிறது என நாம் வாதத்துக்காக வைத்துக் கொண்டா லும், படகுப் போக்குவரத்துக்காக, ராமர் கொஞ்சம் இடித்தது போல, கப்பல் போக்குவரத்துக்காக இன்னும் கொஞ்சம் இடித்தால் என்ன தவறு? இது ராமன் தொடங்கி வைத்த செயல்தானே?

கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளுக்கெதிராக பாலத்தை இடிக்கக் கூடாது? என ஜெயலலிதா கொந்தளிக்கிறார்.

அவருக்கு ஏன் இந்த கொதிப்பு? அவர் தன்னை சரியாக அடையாளம் காட்டுகிறார்.

வைகை நீர்த்தேக்கம் கட்டும் போது, நூற்றுக்கணக்கான சிறு தெய்வக் கோவில் கள், மதுரை வீரன், சுடலை மாடன், மாரியாத்தா கோவில்கள் இடிபட்டனவே, அப்போது இவர்கள் கூக்குரலிட்டார்களா?

அவை இந்துக் கோவில்கள் இல்லையா? சாதாரணத் தமிழ் மக்கள் வழிபடும் கோவில்களுக்கு அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள். ராமன் அவாள்களின் தெய்வம். ஆகவே, கோடிக்கணக்கான இந்துக்கள் என்று கூட்டம் சேர்ப்பார்கள்'. என்று தனக்கே உரிய பாணியில் நெத்தியடி பதில் கூறினார் சுபவீ.

பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்றவற்றிற்காகக் கடலை ஆழப்படுத் தும் போது, அங்கும் மணற்திட்டுகள் இருந்தன. அங்கும் ராமர்தான் போய் பாலம் கட்டினாரா என்று அறிவார்ந்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ராமர் பாலத்தை இடிக்க முயன்றால் அதை அதிமுக சகிக்காது, எல்லா வகையிலும் (?) அதை எதிர்க்கும் என்று முழங்குகிறார். ஆரிய நாரிமணி ஜெயலலிதா அம்மையார்.

அண்ணா திமுக என்பது அண்ணா வின் கனவுத் திட்டம் சேதுக்கால்வாய் திட்டம், அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டு அண்ணாவின் திட்டத்தை எதிர்ப்பது துரோகமில்லையா?

ராமாயணம் பற்றி அண்ணாவின் கருத்து என்ன? ஜெயலலிதாவிற்கு விளக்கம் தேவையானால் அண்ணா எழுதிய 'கம்பரசம்' என்ற புத்தகத்தை அவர் படிக்கட்டும்.

அண்ணாவின் கொள்கைகளை அடியோடு எதிர்ப்பவர் தனது கட்சிப் பெயரை இனியும் அண்ணா திமுக என்று வைக்காமல் அத்வானி திமுக என்று மாற்றிக் கொள்ளட்டும்.

ராமர் பாலத்தை ராமரே இடித்து விட்டார் என்று கம்ப ராமாயணத்தில் இருப்பதால், அதை ஓர் உண்மை வரலாறு போல, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருப்பது, மடமைக்கு மகுடம் சூட்டுவது போன்றது.

கம்ப ராமாயணம் ஒரு கட்டுக்கதை ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் நாட்டில் உள்ளன. ஒரு ராமாயணத்தில் ராமனுக்கு சீதை சகோதரி.

வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையின் கூந்தலை பிடித்திழுத்து மடியில் அமர்த்திக் கடத்திச் சென்றதாக உள்ளது. கம்பராமாயணத்தில் வீட்டோடு நிலத்தைப் பெயர்த்து சீதையைக் கடத்திச் சென்றதாக உள்ளது.

ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று ராஜாஜி போன்றவர்களே அடித்துச் சொல்லியுள்ளனர்.

இந்தப் புராண புளுகுகளை அரசின் பிரமாணத்தில் ஆதாரம் காட்டுவது அபத்தமானது.

மாற்றுப் பாதையைப் பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியிருப்பதும் கடமை தவறும் மடமைச் செயலே.

சேதுக்கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவில்லையெனில் இந்நாட்டு மக்களுக்கு இந்த அரசு செய்த துரோகமாகவே அது அமையும்.

இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்.

                    


ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை சற்று விளக்கமாகபார்ப்போம்.

ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான "இஞ்சீல்" எனப்படும் "பைபிள்" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக

1) முஹம்மது நபி சொன்னார் என்று யூதர்களின் வேதத்தில் உள்ள (இஸ்லாத்திற்கு எதிரான) கருத்துக்களை இஸ்லாத்தில் திணிப்பது.

2) குர்ஆன் சுன்னாவின் மீது களங்கத்தை ஏற்படுத்த இட்டுகட்டிய செய்திகளை நபியவர்களின் செய்திகளோடு இணைப்பது. இதனால் முஹம்மது நபியின் மீது களங்கம் ஏற்படுத்தி இஸ்லாத்தை வீரியமற்றதாக ஆக்கலாம் என்று செயல்படலானார்கள்.

இவ்வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளூவு" வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளூவு" என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத- அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

x] திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாக அமைந்தவை.
x] புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
x] அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
x] இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

இன்னும் இதுபோன்றவை இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

ஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு உண்மையை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அன்றைக்கும், என்றைக்கும் இருந்தார்கள். இன்றைக்கு எப்படி குர்ஆனை திரித்தும் அழித்தும் எழுதி மேலை நாடுகளில் வெட்கமில்லாமல் பிரசுரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைக்கும் இருந்தார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!

x] யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

x] 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.

அடுத்து, இஸ்லாத்தில் வந்த பிரிவுகள், அந்த அந்த பிரிவுக்கு தகுந்தார் போல் அவர்களின் பிரிவை நியாயப்படுத்தி நபி அவர்கள் சொன்னதாக பொய் சொன்னார்கள். இதில் ஷியா பிரிவினர் முதலிடம் வகிக்கிறார்கள்.

x] ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்து வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் தலைவராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார்.

அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.

இன்னொரு பக்கம், சில வியாபாரிகள் தங்களின் சரக்கை விற்பதற்க்காக நபி அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள்.

x] கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).
x] பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).

இவ்வாறான செயல்பாடுகள் இனம் கண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சில அறிஞர் பெருமக்கள் முன்வந்தார்கள். இன்னும் சிலர் நபி அவர்களின் வாழ்க்கை முறையை நபியவர்களின் தோழர்களால் அவர்கள் தோழர்களால் சொன்ன செய்தியை(ஹதிஸை) புத்தகமாக தொகுக்க வில்லை என்றால், இஸ்லாம் சிதைந்து விடும் என்பதை உணர்ந்து அவர்கள் அதை புத்தகமாக் தொகுத்தார்கள்.

அன்றைய காலத்தில் நபி அவர்களை பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா? என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.

இவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்.

சில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.

சில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்.

இப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூற்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றதாகவும் ஆகிவிட்டது.

இப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.

கெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்க படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.

அறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்து வைத்து இருக்கின்றோம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.

ஆதாரப்பூர்வமானவை
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.தமிழாக்க ஹதீஸகளில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.

உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். "தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.

1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ

2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ

1) -> அபூ அவானா -> குதைபா ->
2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் ->
ஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.

இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.

1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.

அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம். அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று யார் சொன்னாலும் இங்கே அப்படிப் பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கே ஒரு கேள்வி எழலாம், தப்ஸீருகளில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிவில் குறைந்தவர்களா நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்கலாம்.

இல்லை அவர்களைவிட நான் அறிவாளியல்ல. அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இதைத்தான் அவ்வப்போது சிலர் பிடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக கதைகள் எழுதுவது வழக்கம்.

நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.

திர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.

இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.

தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.

இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் நிராகரிக்கப்படும்.

இந்த மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய விவாதங்களும், ஆதாரங்களும் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்ளப்படும்.


கிரிக்கெட்டும் மனித சூதாட்டமும்


                                 
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை, பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
அல்குர்ஆன் 6:32
விளையாட்டைக்குறிக்கும் SPORT என்ற ஆங்கிலச் சொல்லிற்கு OXFORD அகராதியில் NOT SERIOUSLY (முக்கியத்துவ மில்லாமல்)என்று பொருள் காணப்படுகிறது ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடும் வீரர்களும் பார்க்கும் ரசிகர்களும் வெறி கொண்ட வர்களாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது இன்று உலகமெங்கும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.
இங்கிலாந்தில் குளிர் காலத்தில் குளிரைப்போக்கி உடலை சூடேற்றுவதற்காக ஒருவர் ஒரு பொருளைப் போடுவார் அதை மற்றொருவர் தட்டி விளையாடுவார் இது தான் காலப்போக்கில் கிரக்கெட் என்று சொல்லப்படுகிறது. குளிரைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு தற்போது முட்டாள் தனமாக சுட்டெரிக்கும் வெயிலில் மட்டை தட்டுகின்ற விளையாட்டாக மாறியிருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மூதறிஞர் ஒருவர் (ஜார்ஜ் பெர்னாட்ஷா) இவ்வாறு சொன்னார் “11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று. அந்த அளவிற்கு எவ்வித பயனற்ற ஒரு விளையாட்டு தான் கிரக்கெட் என்பது.
பெர்னாட்ஷா கூறியது என்னவோ இன்று நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது பார்வையாளர் வீதம் 11 ஆயிரம் என்பது இன்று இலட்சம் மடங்காவது அதிகமாகி இருக்கும் அதாவது கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றவர்கள் குறைவுதான். ஆனால் இதை ஒரு சூதாட்டம்போல் வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கூட்டத்திற்கு அளவே இல்லை எனலாம் இவ்விளையாட்டை பார்ப்போருக்கு உடல் ஆரோக்கியமோ, பண வரவோ, வேறு எந்தப்பலனுமோ கிடைப்பதில்லை.
ஆடக்கூடியவர்களுக்கும், அவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடியவர்களுக்கும் தான் எல்லாவித பலனும், இலாபமும் ஏற்படுகிறதே தவிர நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ, அரசாங்கத்திற்கோ எவ்வித பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.
மாறாக வெறியுணர்வு கிரிக்கெட் விளையாட்டின் ரசிகர்களிடத்தில் மிகைத்துக் காணப்படுகிறது இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடினால் சொல்லவேண்டிய அவசியமேயில்லை இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடப்பது போலவே சித்தரிக்கப்படுகிறது ஏதாவது ஒரு நாட்டு வீரர்கள் தோற்றுவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அவர்களை கேவலப்படுத்துவதும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும் அவர்களின் இல்லங்களை சேதப்படுத்துவதும் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.
இங்குள்ள சிலர் பாகிஸ்தான் ஜெயித்துவிட்டால்; பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் அது போன்று இந்தியா ஜெயித்து விட்டால்; இந்து மத வெறியர்கள் பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் வெறித்தனத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.
மேலும் தங்கள் நாடு தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பிரிவினர் கோவில்களில் பேட், ஸ்டம்பு, பந்து இவைகளை வைத்து பூஜைகள் செய்வதும் மற்றொரு பிரிவினர் தர்ஹாக்களில் பிரார்த்தனை செய்து ஃபாத்திஹா ஓதுவதும் மடத்தனத்தின் எல்லை என்று சொல்லலாம்.
ஓவ்வொரு வருடமும் IPL லில் கிரிக்கெட் வீரர்கள் மனித சூதாட்டத்திற்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வீரரையும் பல கோடிக்கணக்கில் பல விளம்பர நிறுவனங்களும், பல தொழிலதிபர்களும் ஏலம் எடுப்பதை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
கடந்த IPL லில் லலித் மோடி மகா ஊழலில் சிக்கி தற்போது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என்பது வேதனைக்குறிய விஷயம் கிரிக்கெட்ரசிகர்கள் தான் ஐயோ பாவம்.
உலகக்கோப்பை போட்டிகளில் கூட பல நாடுகளைச் சார்ந்த பல வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்று சொல்லப்படக்கூடிய சூதாட்டத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டு விளையாட்டிலிருந்தே தூக்கி எறியப்பட்ட தகவல்களை நாம் கேள்விப்படுகிறோம் அதற்கென்று பல சூதாட்டத்தரகர்களும் வேலை செய்வதை நாம் பார்க்கின்றோம்
தற்போது உள்ள HOT NEWS IPL சூதாட்டம் 
நடந்து கொண்டிருக்கும் IPL லில் கூட சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கையும் களவுமாக பிடிபட்டதை கண்கூடாகக் கண்டுவருகிறோம் இன்னும் பல வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதை பத்திரிக்கைள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன தங்கள் அணி தான் ஜெயிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கும் ரசிகர்களுக்கு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ரசிகர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது எவ்விதத்தில் நியாயம் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும் தங்களின் பணங்களை வீணடித்து ஏமாந்து போகிறார்கள் ரசிகர்கள் என்பது தான் உண்மை.
சூதாட்டத்தில் ஈடுபட்ட விரர்களுக்கு கடுமையான தண்டனையும் விளையாட்டிலிருந்தே அப்புறப்படுத்தவேண்டும் எனவும் கண்டனக்கனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இது தெரியாத அப்பாவி ரசிகர்கள் தங்களின் பொண்ணான நேரங்களை வீணடித்து தங்களின் அலுவல்களை விட்டு விட்டு அவர்கள் ஃபோர் சிக்ஸர் அடிக்கும் போது கரங்களைத் தட்டுவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர் அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்பதை சிந்தித்துப் பார்த்தார்களா?
சூதாட்டத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது 
சூதாட்டத்தின் மூலம் ஷைத்தான் மக்களுக்கு மத்தியில் பகைமைத் தீயையும் வெறுப்புணர்வையும் தான் உண்டாக்குகிறான் என்பதை சமீபத்திய சூதாட்ட நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஈமான் கொண்டோரே! மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும், ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்;லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்,எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?
அல்குர்ஆன் 5: 90, 91.
ஆபாசத்தின் உச்சகட்டம் 
பொதுவாகவே இஸ்லாம் ஆபாசத்தை கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. ஆபாசம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேராக இருக்கின்றது அது விளையாட்டிலும் புகுந்து விட்டது என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக ஐ பி எல் கிரிக்கெட்டிலும் (சியர்ஸ் கேர்ள்ஸ்) நடன மங்கைகளின் அரை குறை ஆடையோடு ஆடும் நடனங்கள் பார்வையாளர்களை உள்ளம் கூச வைக்கிறது. ஆடை என்பது மானத்தை மறைப்பதாக இருக்கவேண்டும் ஆனால் இன்று மானம் காற்றில் பறக்கிற அளவிற்கு ஆடைகள் இருக்கின்றன .
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதை விட) மேலானது. இது அல்;லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவீர்களாக. அல்குர்ஆன் 7:26.
பெண்களிடத்தில் இயல்பாகவே இருக்கின்ற வெட்கம், நாணம் அகன்று விட்டது அதனால் தான் இது போன்ற அசிங்கங்கள் ஒழுக்கக் கேடுகள் விளையாட்டிலும் அரங்கேறுகின்றன.
நாணம் என்பது இறைநம்பிக்கையில் ஓரம்சம் 
நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். “நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய் (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்” என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்” என்றார்கள்.
புகாரி 6118.
நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 6119
மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். “உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2484,6120.
நேர,கால விரயம் 
காலம் பொன் போன்றது என்பார்கள் அது வீணாகக் கழிவது கிரிக்கெட்போன்ற விளையாட்டுக்களில் தான் நேரத்தையும் காலத்தையும் வீணாகக் கழிப்பது இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. இறைவனிடத்தில் அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்
உன் ஆயுள், இளமை, ஈட்டிய சம்பாத்தியம், அதை செலவழித்தது, கொடுக்கப்பட்ட அறிவு இவைகளுக்கு நாளை மறுமையில் பதில் சொல்லாத வரை தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது என நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் (திர்மிதீ)
ஆக நேர காலங்களை நல்ல ஆரோக்கிமான பல பயனுள்ள விளையாட்டுக்களிலும் பல பயனுள்ள வழிகளிலும் கழிக்க முன்வரவேண்டும்.
விளையாட்டு என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு வரையறுத்துத் தருகிறது
ஓட்டப்பந்தயம், அம்பு எறிதல், மல்யுத்தம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பல தற்காப்புப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள வலியுறுத்துகிற அதே நேரத்தில் சோம்பேறிகளாக கோழைகளாக இருப்பதை வெறுக்கிறது வீரர்களாக இருக்க வலியுறுத்துகிறது இஸ்லாம்.
விளையாட்டிற்கு முக்கியத்துவமில்லாமல் என்ற பொருள் இருந்தாலும் இஸ்லாம் விளையாட்டை முக்கியத்துவமாகத் தான் பார்க்கிறது.
பலவீனமான மூஃமினை விட பலம் வாய்ந்த மூஃமின் தான் அல்லாஹ்விற்கு பிரியத்திற்குறியவனாகவும் அல்லாஹ்விடத்தில் சிறந்தவனாகவும் இருக்கிறான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).
அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும் அல்லது அவர்களே என்னிடம், “நீ இவர்களுடைய (வீர விiளாயட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். நான், “ஆம்” என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, “போதுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம், போதும்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போ!” என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
புகாரி 2901, 2907, 3530, 5236.
ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ “நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்கவைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’”
என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
புகாரி 950.
பந்தயம் நடத்தப்பட்டிருக்கிறது நபியவர்கள் காலத்தில் 
ஒருமுறை நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஓட்டப்பந்தயம் நடக்க முதல் முறை அன்னை ஆயிஷா அவர்கள் ஜெயிக்க இரண்டாவது முறை ஆயிஷா அவர்கள் சற்று குண்டானதால் நபியவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் (ஹதீஸின் கருத்து)
நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவித்தார்.
புகாரி 2872, 6501.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் ‘சனிய்யத்துல் வதா’ விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2869.
மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது”என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், “ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து” என்று பதிலளித்தார் என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
புகாரி 2870.
விளையாட்டில் நோக்கம் இருக்கவேண்டும். எதிரியை வீழ்த்த வேண்டும் வேட்டைப் பிராணியை கொல்லவும் வேண்டும் அதல்லாத உடலுக்கு தீங்கு தருகின்ற பார்வையை பறிக்கின்ற பல்லை உடைக்கின்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் தடை செய்கிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களும் அதுபோன்றதுதான்; அது எதிரியை வீழ்த்தாது வேட்டைப் பிராணியைக் கொல்லாது.
தடைசெய்யப்பட்ட விளையாட்டுக்களைப்பற்றி நபியவர்கள் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்
கல்சுண்டு விளையாட்டிற்கு (‘கத்ஃப்’) நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், “அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும் பல்லை உடைத்துவிடும்” என்றார்கள்.
புகாரி 6220, 255.
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன்.அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்” அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்”. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம் கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’என்று கூறினார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்” அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்” என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்.
புகாரி 5479.
தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற எதிரிகளைத் தாக்குகின்ற எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது
அல்லாஹ் கூறுகிறான்:
மேலும், அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் முடிந்த அளவு வலிமையையும் தயார் நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள். அவற்றின் வாயிலாக, நீங்கள் அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்கள் பகைவர்களையும் பீதிக்குள்ளாக்கலாம். அல்குர்ஆன் 8:60
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி(ஸல்)அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், “அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
புகாரி 2899.
இப்படி ஆபாசம், சூதாட்டம், நேர கால விரயம், போன்றவற்றின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற வணக்கவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற கிரிக்கெட் செஸ் போன்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது மாறாக அவற்றை தடை செய்கிறது.
இதுபோன்ற விளையாட்டுக்களில் காலத்தை வீணடிக்காமல் பல பயனுள்ள ஆரேக்கியமான மனதுக்கு இதமளிக்கிற மார்க்கத்திற்கு வணக்கவழிபாடுகளுக்கு ஊறுவிளைவிக்காத வீரவிளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தவேண்டும்.