Saturday, January 28, 2012

உடலை பொலிவடைய செய்யும் கேரட் : ஆய்வில் தகவல் !


          

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்.

அதுபற்றி விஞ்ஞானி இயான் ஸ்டீபன் கூறியதாவது: பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும். குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என தெரிவித்தார்.
wsc adirai ...

Wednesday, January 25, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) - பொது அறிவிப்பு !


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 14-01-2012 ) அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில்,


நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்ட இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்ஆலோசனைகளுக்குப்பின் சகோதரர்கள் முஹம்மது அன்சர், முஹம்மது அப்சர் மற்றும் முஹம்மது மக்சூத் ஆகியோர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டு தற்சமயம் நமது தக்வா பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்பு கொள்ள இலகுவாக நமதூரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் அறிவிப்பு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

இவர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் :


முஹம்மது அன்சர் : 7418808648, 9750197162இப்படிக்கு,அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF )
அதிராம்பட்டினம்

முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை

 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
                                            
இது ஒரு எச்சரிக்கை செய்தி...
ஒவ்வொரு முஸ்லீமும் மனதில் நினைப்பதை மிக அருமையாக இந்த எச்சரிக்கை செய்தியை நண்பர் ஒருவரிடமிருந்து வந்தது.

இது ஒருமுறை மட்டுமல்ல, பலமுறை பதிவேற்றப்படவேண்டிய அவசியமான பதிவு..ஏனென்றால் ஒருமுறை பதிவிட்டால் பல்வேறு நிகழ்வுகளால் இந்த செய்தியும் மறந்துபோக வாய்ப்பிருக்கிறது...தொடர்ந்து இந்த பதிவை அல்லது இதுபோன்ற பதிவகளை நமது சகோதரர்கள் பதிந்துகொண்டே இருப்பது, இதுபற்றிய விழிப்புணர்வை நமதூர் பெண்கள் மற்றும் ஆண்களிடம் ஏற்படுத்துவது இந்தக்காலத்தில் மிகவும் அவசியமாக உள்ளது...

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில்    பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி  இச்சையைகொண்டு இசுலாமிய எண்ணங்களை அழித்து அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட சதியின் அடிப்படையில் ஒரு கூட்டம் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

முஸ்லீம் பெண்களை எப்படி தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சி அளிக்கப் படுவது மட்டுமல்லாமல் லட்ச ரூபாய் பரிசும் காத்திருப்பாதாக கூறப் படுகிறது.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமதத்திற்கு மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன.  ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

  1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது
  2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது
  3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது
  4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது
  5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது
  6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்.. வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
  7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்டப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது
  8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது..
  9. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)

  1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்
  2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்
  3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்
  4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது
  5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது
  6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்
  7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவுசெய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே
  8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே
  9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
  10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூண்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
  11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன
  12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
  13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்
  14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்
  15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள்.

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட அயோக்கியர்களுடன் ஓடிப்போய்விடுகின்றனர்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
இவள் கொண்டு சென்ற செல்வத்தையும் இழந்து தன் கர்ப்பையும் இழந்து  சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்றவன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு சட்ட பாதுகாப்புவரை அவனை சார்ந்தவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி, உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
.
ஆக பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக  பயிற்றுவிக்கப்பட்டவர்கள் சிலர் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள். ஏமாந்து விட வேண்டாம்!!.
பெற்றோர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரை கடந்த பின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்,
சிந்திப்பீர் செயல்படுவீர்!!
சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!


முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!!
சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தை வீட்டில் போதியுங்கள்....

நன்றி ; சகோ. A.ஹாஜி முஹம்மது

தகவல்:  சகோ. நிஜார் அஹம்து

நல்ல எண்ணத்துடைய எத்தனையோ மாற்றுமத சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் நம்முடன் பழகுபவர் நல்லவரா, நயவஞ்சகரா என்று மனோதத்துவ நிருபரால்கூட கண்டுபிடிக்கமுடியாது என்பதே  ஏற்ற்றுகொள்ளவேண்டிய உண்மை. இந்த ஒரு அலட்சிய எண்ணமே வழிதருவதற்கு காரணம். மொத்தத்தில் குர்ஆன்  கூறும் அந்நியர் என்ற வார்த்தைக்கான அர்த்தம் புரிந்து நடந்தாலே சிறப்பு..

Monday, January 23, 2012

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் !

 
இறைவனின் திருப்பெயரால்... அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.
 
 
Feg-14-Notice
அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக்காகவோ உங்களை அழைக்கவில்லை.

இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும், உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் வாழ்வுரிமைப் போராட்டமாகும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததுதான். எல்லா சமுதாயத்தவரும் உயர் கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்புக்களையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலைவாய்ப்புக்களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே, அது பற்றிச் சிந்தித்தீர்களா? கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுவது ஏன்? ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்? இதை மாற்றி அமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா அல்லது இல்லையா? இந்த அவல நிலைகளை சச்சார் மற்றும் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். முன்னர் பெற்று வந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித ஒதுக்கீடு என்பதை வாபஸ் பெற்று, முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் போதுமானதல்ல என்று திமுக மற்றும் அதிமுக ஆகியன ஒப்புக் கொண்டுள்ளதால், ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்களித்ததை நினைவூட்டும் வகையில் தமிழக ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் எதிர்வரும் பிப்ரவரி 14 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினரை டி.என்.டி.ஜே அழைக்கிறது.

தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னைக் காட்டி விலை பேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய். இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீ வாழ்வதற்காக, உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமால் தடுத்து நிறுத்திட நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட குடும்பத்துடன் புறப்பட்டு வா! அலை அலையாய் திரண்டு வா! புயலெனப் புறப்பட்டு வா! இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்.

அன்புடன் அழைக்கிறது! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம், 30, அரண்மனைக்காரன் தெரு, சென்னை 600001. போன்: 044 25215226.

 
 
 

Thursday, January 19, 2012

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு




                       


இந்தப் பதிவு குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!

அரசுப் பொதுத் தேர்விற்கு இன்னும் 2 ,3 மாதங்கள் தான் உள்ளது.+2 மாணவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதியும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதியும் தேர்வு ஆரம்பமாக உள்ளது.சரியாகப் படிக்காத மாணவர்களும் இந்த தேர்விற்கு பல முயற்சிகளை செய்து படிப்பதற்கு ஆர்வத்துடன் தயாரகுவார்கள்.

இப்படி இருக்கையில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை படி,இன்னும் தேர்விற்கு 2 மாதம் தான் உள்ளது என்று அறிவுரை என்ற பெயரில் நச்சரிக்க தொடங்கி அவர்களை பயமுறுத்துகின்றனர்.இதனால்
மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொஞ்சமாவது சுதந்திரம் கொடுக்க வேண்டும்.ஏன்? என்றால் அப்பொழுது தான் அவர்களின் தேர்வு பயம் நீங்கி இயல்பான மனநிலை கிடைக்கும்.அவர்களுக்கு தானாகவே படிப்பதற்கு ஆர்வம் வரும். ஆனால் பெற்றோர்கள் இப்படியில்லை!

மாணவர்களுக்கு சிறிது நேரம் கூட சுதந்திரம் அளிப்பதில்லை.
ஒரு மாணவன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி அல்லது செய்திகள் போன்றவற்றை பார்ப்பதற்கும் பெற்றோர்கள் தடை விதிக்கின்றனர்.
பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சோர்வாக வீடு திரும்பும் மாணவர்களை ஒரு 2 மணி நேரம் கூட பெற்றோர்கள் விளையாட அனுமதிப்பது இல்லை.மாறாக வீட்டிற்க்கு வந்ததும் புத்தகத்தை எடுத்து படி என்கின்றனர்.

8 மணி நேரம் பள்ளியில் படித்து விட்டு வீட்டிற்கு வந்ததும் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் படி என்றால் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்று நீங்களே நிதானமாக சிந்தியுங்கள்!!

அதற்காக மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க சொல்லவில்லை.அவர்கள் படிக்கும் போது கொஞ்சமாவது அவர்களுக்கு பிடித்த நிலையில் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் பயன்படுத்தும் செல்போன்களையும் பெற்றோர்கள் பிடுங்கி வைத்துகொண்டு படி படி என்று நச்சரிப்பதால் மாணவர்களின் கவனம் எல்லாம் அந்த செல்லின் பால் இருக்குமே தவிர படிப்பில் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

செல்போன் பயன்படுத்தும் மாணவனாக இருந்தால் அவனிடம் அழகான முறையில் பேசி படிப்பின்பால் பணிய வைக்க வேண்டுமே தவிர கடுகடுத்து காரியத்தை கெடுத்து விட கூடாது .என்பதை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும்.

இணையம் வசதியில்லாத செல்போனாக இருந்தால் பள்ளிவிட்டு வரும் மாணவன் ஒரு மணி நேரமாவது செல்போனை உபயோகப்படுத்த அனுமத்திக்லாம்.

பெற்றோர்கள் இப்படி கொஞ்சம்,கொஞ்சம் பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி வழிவகை செய்தால் தான் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.

பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.அதற்க்கு பெற்றோர்களாகிய நீங்கள் ஓரளவாவது உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்தால் (இன்ஷா அல்லாஹ்) வெற்றி நிச்சயம்!!

Sunday, January 15, 2012

மேலத்தெரு வாலிபால் விளையாட்டு மைதானம்

மேலத்தெரு  வாலிபால்   விளையாட்டு மைதானம் 

வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் “ சார்பாக பல வகை விளையாட்டு போட்டிகள் இம்மைதானத்தில் நடத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் மின் ஒளியுடன் நடத்தப்படுகிற “ வாலிபால் போட்டி “ மிகவும் பிரபலம். நமதூர் மற்றும் வெளியூர்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்செல்கிறார்கள்.
                                               

                           
.
                                           
மேலும் இம்மைதானம், நிக்காஹ் நிகழ்ச்சிகளுக்கு விருந்து உபசரிக்கும் இடமாகவும் பயன்தறுவது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகிற வாலிபர்கள், விளையாட்டை ஊக்குவிக்கிற நண்பர்கள் போன்ற இவர்களால் நடத்தக்கூடிய விளையாட்டு போட்டிகளால் இத்தெரு மேலும் சிறப்படைகிறது.


Saturday, January 14, 2012

மேலத்தெருவும் அதன் சிறப்புகளும் !

அதிரையில் உள்ள குறிப்பிடத்தக்க பெரிய தெருக்களில் மேலத்தெருவும் ஓன்று ஏறக்குறைய பத்தாயிரம் நபர்கள் வாழக்கூடிய தெருக்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.......இதன் பரப்பளவில் பெரிய விரிவாக்கத்துடன் கூடிய சானா வயல், சவுக்கு கொல்லை, மொந்தன் கொல்லை, கொசுவான்ங் கொல்லை, ரசூல் நகர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு மக்கள்கள் குடிபெயர்ந்து வருகிறார்கள்.




இப்பகுதிகளில் பிரபல தொழில் அதிபர்கள் வசிக்கக்கூடியவர்களாவும், அவர்களின் தொழிலாக விவசாயம் ( தென்னை, நெல் ) , தேங்காய் வணிகம், வியாபாரங்கள், சிறு விவசாய தொழிற் கூடங்கள், REAL ESTATE, SUPER MARKET கள், போக்குவரத்து வாகனங்கள், மளிகை கடைகள், ஹோட்டல்கள், பேன்சி கடைகள் என்றும் ஏழை எளியோர்களால் நடத்தக்கூடிய சிறிய தொழில்களான டீ கடை, பெட்டிக்கடை, சலூன்கள், சர்பத்-மோர் கடை, இட்லி-தோசை-இடியாப்பம் கடைகள் போன்றவைகளும் தொழிலாக உள்ளன.




குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர்கள் தொழில் செய்யக்கூடியவர்களாகவும், பணிபுரியக்கூடியவர்களாவும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மேலும் இப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பெண்கள் தங்களது வீட்டு பொறுப்புகளையும், தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.




இப்பகுதியை சார்ந்தவர்கள் ஆலிம்கள், ஆலிமாக்கள், சுதந்திர போராட்ட தியாகி, கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்றும், பிரபல அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவைகளின் நிர்வாகிகளாகவும், டாக்டர், அட்வகேட், அரசு ஊழியர்கள், பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள், பட்டதாரிகள் எனவும் மருத்துவம், பொறியியல், கணினி, வணிகம், தொழிற்பயிற்சிகள் போன்ற படிப்புகளை பயிலும் மாணவ மாணவிகள் எனவும், மார்க்க கல்வியை பயிலும் சிறுவர், சிறுமிகள் எனவும் உள்ளனர்.




மேலும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகிற வாலிபர்கள், விளையாட்டை ஊக்குவிக்கிற நண்பர்கள் போன்ற இவர்களால் நடத்தக்கூடிய விளையாட்டு போட்டிகளால் இத்தெரு மேலும் சிறப்படைகிறது.
இத்தெருவின் சார்பாக இரண்டு பேரூராட்சி உறுப்பினர்களும், ஒரு ரேஷன் கடையும் உள்ளது.




முக்கியமான பகுதிகளாக கருதப்படுகிற கீழ்க்கண்ட சிலவற்றை பார்ப்போம்............




மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி





ஏறக்குறைய முப்பது ஆயிரம் சகோதரர்கள் வந்து அமர்ந்து தொழுவதற்கு இட வசதிகளுடன் கூடிய பெரிய ஜும்மா பள்ளியாக ஊருக்கே பெருமை சேர்க்கிறது. நமதூரில் உள்ள அனைத்து சகோதரர்களால் ஒருமுறையாவது வந்து ஜும்மா தொழுகையை தொழுத இப்பள்ளியில் பெரிய கஃபர்ஸ்தானுடன் இணைந்து உள்ளது குறிப்பிடதக்கது. இப்பள்ளியின் நிர்வாகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு சீரும் சிறப்புமாக காட்சி அளிக்கிறது.


செடியன் குளம்


சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச்சேர்க்கிறது. நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒருமுறையாவது இக்குளத்தில் நீராடி சென்றுருப்பார்கள்.


M.M.S. வாடி



நமதூரின் சார்பாக ஒரே ஒரு M. L. A ( மாயாவரம் ) , நகராட்சி தலைவர் ( மாயாவரம் ), பேரூராட்சி தலைவர்கள், அரசியல் கட்சியின் தலைவர், கோட்டை அமீர், வார்டுகளின் பிரதிநிதிகள் என்று உருவாக்கிய இடம். மேலும் பல்வேறு மத்திய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து முஹல்லவைச் சேர்ந்த பெரியோர்கள் என்று வந்து சென்ற இடம்.


அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் மஸ்ஜித்


இம்மஸ்ஜித் தெருவின் மேற்குப்பகுதியில் அமைந்து இதனை சுற்றி வசிக்கக் கூடியவர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கின்றது.


தாஜூல் இஸ்லாம் சங்கம்





இச்சங்கம் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுடன் சிறந்து விளங்குகிறது. இதன் நிர்வாகிகளால் தெருவில் நடக்கக்கூடிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பத்துடன், சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் போன்றவைகளையும் தீர்த்து, நல்ல பல ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும் இளைஞர்களால் நடத்தப்படுகிற தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) மும், இத்தாய் சங்கத்துடன் இணைந்து இருப்பதால் கூடுதல் வலிமையுடன் என்னற்ற சேவைப் பணிகளை தொய்வின்றி செயல்படுத்தப்படுகிறது.




மேலும் இச்சங்கத்தை ஒட்டி அமைந்துள்ள கட்டிடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான “ அல் குரான் “ ஓதுதல் பயிற்சியும் வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும்.


ஹஜ்ரத் சேக் நசுருதீன் – தர்ஹா


ஆன்மிகவாதிகளின் புகழிடமாக விளங்குகிறது. மேலத்தெரு , கீழத்தெரு முஹல்லாக்கள் சார்பாக ஆண்டு தோறும் “ கந்தூரி விழா ” சிறப்பாக எடுக்கப்படுகிறது. மேலும் ” மீலாத் நபி விழா “ ஆண்டு தோறும் இவ்வரங்கில் நடைபெறுகிறது.





பெண்கள் மார்க்கெட்



பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இம்மார்க்கெட்டில் காய்கறிகள், இறால், மீன்கள், ஆடு, கோழி, காடை இறைச்சிகள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பெண்களும் பொருள்களை வாங்கிச் சென்று பயனடைகிறார்கள்.




“ சுலைமாக்கா “ பெட்டிக்கடை


நமதூருக்கு குலசேகரப்பட்டினத்திலிருந்து சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்து ஓர் சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் என்னற்ற நண்பர்களை பெற்றவர். இன்னும் அதே பெட்டிக்கடை........! மார்க்க அறிஞராகவும், பேச்சாளராகவும் சிறந்து விளங்குவது என்பது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.




சூனா வீட்டு பள்ளிக்கூடம்


“சூனா வீட்டு பள்ளிக்கூடம்” என்ற பெயருடன் அழைக்கப்படும் அரசு “ தொடக்கப்பள்ளி “ யில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ளது. ஏராளமான வல்லுனர்களை உருவாக்கிய இப்பள்ளிக்கூடத்தால் இத்தெருவிற்க்கு பெருமையே.


விளையாட்டு மைதானம்



வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் “ சார்பாக பல வகை விளையாட்டு போட்டிகள் இம்மைதானத்தில் நடத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் மின் ஒளியுடன் நடத்தப்படுகிற “ வாலிபால் போட்டி “ மிகவும் பிரபலம். நமதூர் மற்றும் வெளியூர்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்செல்கிறார்கள்.


மேலும் இம்மைதானம், நிக்காஹ் நிகழ்ச்சிகளுக்கு விருந்து உபசரிக்கும் இடமாகவும் பயன்தறுவது கூடுதல் சிறப்பாகும்.



சிறுவர் பூங்கா


தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA ) சார்பாக அதன் நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட இச்சிறுவர் பூங்கா மூலம் இத்தெருவைச் சேர்ந்த ஏராளமான சிறுவர் சிறுமிகள், பெண்கள் என பலரும் பயனடைகிறார்கள்.


ரஹ்மது நூலகம்



M. M. S. அபுல் ஹசன் அவர்கள் நினைவாக இளைஞர்களால் நடத்தப்படுகிற ரஹ்மத் நூலகத்தால் அனைத்து தரப்பினரும் தங்களின் சமூக அரசியல், மார்க்கம், கல்வி, ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வுகளுடன் கூடிய புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களைப் படித்து பயன்பெறுகிறார்கள்.


உடற் பயிற்சிக் கூடம்


ஒரு நேரத்தில் பெரும்பாலான வாலிபர்கள் இங்கே வந்து தங்களின் உடல் வலிமையை ஏற்றிச் செல்வார்கள். தற்பொழுது மிகவும் அடக்கமாக செயல்படுகிறது.



ஹாதியாக்கா டீ கடை



இன்றைய வயோதியர்களுக்கு ஒரு பயனுள்ள கடையாக அமைந்துள்ளது. அதிகாலை சுமார் 3 மணியளவில் திறக்கக் கூடிய இக்கடையில் டீயும், பண்ணும் வந்து சாப்பிட்டுவிட்டு அதிகாலை பசியை ஆற்றி செல்கிறார்கள். இதற்கென்று ஒரு பெரிய வயோதியர் நண்பர்கள் கூட்டமே உள்ளது.


தண்ணீர் தேக்க தொட்டி ( WATER TANK )





தமிழக முன்னாள் முதல்வர் M.G.R அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இத்


முடக்குண்டு குளம்


இக்குளம் பெண்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது


புதுக்குளம்

இதன் பெயர் புதுக்குளம் ஆனால் குப்பைக் கழிவுகளால் பழைய குளம் போல் காட்சியளிக்கிறது.



இறைவன் நாடினால் ! தொடரும்.....................
குறிப்பு : நமதூரில் உள்ள மற்ற தெருக்களின் சிறப்புகளும் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )