Sunday, March 31, 2013

மரண அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்.

 நமதூர் மேலத்தெருவைச் சார்ந்த நாகூர் பிச்சை (அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் அலுவலக ஊழியர்) அவர்களின் மகனும். முஹம்மது ஆரிஃப். அலி அக்பர் மற்றும் நவாஸ்கான் ஆகியோரின் சகோதரருமான முகைதீன் (31.03.2013) ஞாயிறு  மாலை 04:00 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் வஃபாத் ஆகி விட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா (நல்லடக்கம்) குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.

சகோ.முகைதீன் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

HE IS ONE OF W S C SENIOR VOLLEYBALL PLAYER.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
  அவருடைய மறுமைக்காக துவா செய்வோம்.............

Thursday, March 28, 2013

ஆரோக்கியத்தின் அவசியம்.

அல்லாஹ் இந்த மனித சமுதாயத்திற்கு என்னற்ற அருட்கொடைகளை செய்திருக்கிறான். அல்லாஹ்வின் அருட்கொடைகளில் உள்ளதுதான் ஆரோக்கியம். 
இஸ்லாமும் ஆரோக்கியமும்.
இஸ்லாம் இந்த ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர­ரி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ''அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ''இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வரிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!'' அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். 'தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். ''வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள்.
''அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர­ரி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் 'நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: புகாரி (1975)

அதிகமாக தொழுதுவரை கூப்பிட்டு நபி ஸல் அவர்கள் பாராட்டவில்லை. மாறாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணகத்தின் பெயரால் தன்னுடைய ஆரோக்கியத்தை கெடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு நிகழச்சியும் ஆரோக்கியத்தின் அவசியத்தை வ­யுறுத்துகிறது.
கைஸ் என்பவர் கூறுகிறார்கள். என்னுடைய தந்தை நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தி கொண்டுருக்கும் வேலையில் வந்து வெயி­ல் நின்று கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை நிழ­ல் ஒதுங்கும் படி கட்டளையிட்டார்கள்.
நூல்: அதபுல் முப்ரத் (பாகம் 1 பக்கம் 401)
1174 லி قال حدثني قيس عن أبيه أنه : جاء ورسول الله صلى الله عليه وسلم يخطب فقام في الشمس فأمره فتحول إلى الظل قال الشيخ الألباني : صحيح  الأدب المفرد    ள جزء 1 லி  صفحة 401 ன 
2664 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ رواه مسلم
உடலைப்பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும்.
ஒருவர் தனக்கு கொடுத்த ஆரோக்கியத்தை சரியாக பஸ்ன்படுத்தாமல், அதை நாசமாக்கினால் மறுமையில் அதற்கும் விசாரனை உண்டு என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
ஒரு மனிதர் கியாம நாளில் தன்னுடைய ஆயுளை எப்படி கழித்தார் என்றும், அவருக்கு கொடுக்கப்பட்ட கல்வியை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை எவ்வாறு செலவு செய்தார் என்பதை பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்ட உடலை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை பற்றியும் கேட்கப்படாத வரை ஒருவரின் பாதம் நகழாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி (2341)
ஆரோக்கியத்தை கேட்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் ஒருவர் தன்னுடைய ஆரோக்கியதிற்காக அல்லாஹ்விடம் பிரார்ததனையும் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை நோய் விசாரிக்கச்சென்றார்கள். அவர் நோயினால் மிகவும் சிரமப்பட்டு கொண்டுருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இறைவனிடம் ஆரோக்கியத்தை கேட்டு பிரார்த்தனை செய்யக்கூடாதா? என்று கேட்டார்கள். அவர் யா அல்லாஹ் மறுமையில் என்னை நீ தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகத்திலேயே அதற்காக தண்டனையை வழங்கிவிடு என்று பிரார்த்தனை செய்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் உமக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிட்டால்) நீர் தாங்கி கொள்ள முடியாது எனவே யா அல்லாஹ் இவ்வுலத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக மறு உலகத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக என்று கேளும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி (3409)
இதை ஏதோ ஒரு தடவை இரண்டு தடவை இப்படி வ­யுறுத்திப்பார்கள் என்று நினைத்து விடக்கூடாது நபி ஸல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இதை வ­யுறுத்திச்சென்றுள்ளார்கள்.
நீங்கள் லாயிலாஹா இல்லல்லாஹீ என்ற வார்த்தைக்குப்பிறகு ஆரோக்கியத்தைத்தவிர வேறு எதனையும் உங்களுக்கு வக்ஷ்ங்கப்பட வில்லை. எனவே நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று நபி ஸல் அவர்கள்  சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று அபூபக்கர் சித்தீக் ர­ அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (10)
மக்களுக்கு கட்டளையிட்டது மட்மில்லாமல நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்டுள்ளார்கள்.
யா அல்லாஹ் உன்னுடைய அருள் என்னை விட்டும், நீ எனக்கு கொடுத்த ஆரோக்கியம் விலகுவதை விட்டும், உன்னுடைய தண்டனை திடீரென்று வருவதையும், உன்னுடைய அனைத்து கோபத்தை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்வார்கள். இது அவர்களின் (வழமையான) பிரார்த்தனைகளில் ஒன்றாகும் அப்துல்லாஹ் பின் உமர் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லம் (4922)
இதன் முலம் இஸ்லாம் எந்த அளவிற்கு இஸ்லாம் ஆரோக்கியத்தை வழங்கியிருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியத்தை வ­யுறுத்தியது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தை பேண வழிமுறைகளையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு சொல்­ தந்துள்ளார்கள்.
நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நாமும் நம்மை சுற்றி இருப்பவைகளும் சுத்தமாகவும். சுகதாரமாகவும் இருக்க வேண்டும்.
நம்மை சுற்றி இúப்பவைகளில் மிக முக்கியமானது நமது ஆடையாகும். நமது ஆடையையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தலை வாராதவராக, முடிகள் குழைந்த நிலையில் ஒரு மனிதரைப்பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்  இவர் தன்னுடைய முடியை வாரிக்கொள்தற்கு எதையும் பெற்றுக்கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள். மற்றொருவரின் ஆடை அழுக்கானதாக பார்த்தார்கள். உடனே இவர் தன்னுடைய ஆடையை கழுவிக்கொள்வதற்கு தன்னீரை பெற்றுக்கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.
நூல்: அபூதாவூத் (3540)
அடுத்து நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவைகளில் நம்முடைய வீடும் நம்மை சுற்றி இருக்கும் தெருக்களும்தான்.
சிலர்களுடைய வீடுகளைப்பார்க்கிறோம். அவர்களுடைய வீடுகளில் குப்பைகளும் தூசிகளும் நிறைந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே ஆýக்கு மூட்டைகளும் ஒற்றடைகளும் நிறைந்து காணப்படுகின்றன. வீட்டின் பெண்களிடம் கேட்டால் எங்களுக்கு நேரம் சரியாக கிடைப்பதில்லை என்ற காரணத்தை சொல்­விடுகிறார்கள். யார் நேரம் கிடைக்க வில்லை சொல்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் வழமையாக செய்யும் சோர் பொங்குவதும் அதற்காக கரிகளை செய்வதும் தான் மற்ற நேரங்களில் டீவி சினிமாக்களில் நாடகங்களில் பிஸியாகி விடுஹ்ôர்கள். அதுன்ட்டுமில்லாமல் அடுத்வரைப்பற்றி புறம் பேசுவதற்கும் கோள் சொல்வதற்கும் நேரத்தை ஒõக்குவார்கள். சுத்தத்திற்காக சிறிது நேரத்தை ஒதுக்கமாட்டார்கள்.
இவர்கள் தங்கள் இடத்தை மட்டுமில்லாமல் தங்களைச்சுற்றியிருக்கும் தெருக்களையும் சுத்தமாக வைக்கமாட்டார்கள். 
தன்னுடைய வாசி­லே கழிவு நீரை ஊற்றுதல். தன்னுடைய வீட்டு வாச­லே தன்னுடைய சிறு குழந்தைகளை மலம் ஜலம் கழிக்கச்செய்தல் இõவெல்லாம் சர்வ சாதரணமாக இன்று நம் மக்களிடம் காணப்படுகிறது. இது வெல்லாம் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுத்து நாசமாக்க கூடியதாகும்.
பாதைகளில் மலம் ஜலம் கழிப்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வன்மையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
பழிப்பிற்குரிய இரண்டு காரியங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறும் போது பழிப்பிற்குரிய இரண்டு செயல்கள் யாவை ? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு யார் பாதைகளில் மலம் கழிப்பதும். அல்லது  அவர்களின் நிழல்களில் கழிக்கிறார்களோ அவர்கள்தான் என்று நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல்: முஸ்­ம் (397)
பல் துலக்குவது 
அடுத்து நாம் சுத்தமாக வைத்திருப்பவைகளில் மிகவும் முக்கியமானது நம்முடைய பல்லாகும். இன்று நம்மில்  சிலர் பல்லை சரி வர துஷ்க்குவதில்லை. சிலர் பீடி சிகரெட் போன்றவைகளை குடித்து விட்டு கல்லை கழுவாத பாத்ரூமை பார்த்தால் எப்படி இúக்குமோ அது போன்று தன்னுடைய பல்லை வைத்திருப்பார்கள். 
நபி ஸல் அவர்கள் பல் துலக்குவதை மிக மிக வ­யுறுத்தியுளள்ôர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் சமுதாயத்திற்கு' அல்லது 'மக்களுக்கு' நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன்.
நூல்: புகாரி 887)
அடுத்து நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியகைளில் நமது கைகளாகும். குறிப்பாக நாம் சாப்பிட்ட பின்பும் முன்பும் கையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
யார் தன்னுடைய கையில் அதிகமான துர்வாசனையுடன் இரவு தூங்குகி அதனால் அவருக்கு ஏதும் ஏற்பட்டால் அவர் தன்னையே பழித்துக்கொள்ளட்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: அதபுல் முப்ரத் (பாகம் 2 பக்கம் 251)
2168 லி ( صحيح ) وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من بات وفي يده ريح غمر فأصابه شيء فلا يلومن إلا نفسه رواه البزار والطبراني بأسانيد رجال أحدها رجال الصحيح إلا الزبير بن بكار وقد تفرد به كما قال الطبراني ولا يضر تفرده فإنه ثقة إمام صحيح الترغيب والترهيب    ள جزء 2 லி  صفحة 251 ன  
ஏனென்றால் நம்முடைய கைகளில் தான் அதிகமான நோய்கள் பரவுதாக மúத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக நமது உள்ளங்கைகளில்தான் அஸ்டெபிலோகாக ஆரியஸ் என்ற பாக்டிரியா அசுத்தமான கைளி­ருந்து கொண்டு நோயை பரப்புகிறது. நமது உட­ன் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடும் சக்தி இந்த பாக்டீரியாவக்கு இருக்கிறது. 
அடுத்து குளிக்கும் இடங்கள், குளிக்கும் தன்னீர் இவைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்கüல் எவரும் சிறு நீர் கழிக்கவும் வேண்டாம்; பின்னர் அதில் குüக்கவும் வேண்டாம். 
நூல்: புகாரி (239)
இன்று இந்த காரியங்கள் குளங்களிலும், கினறுகளிலும் பகீரங்கமாக மீறப்படுகிறது. ஏழ்ôவது ஒரு இடத்தில் மலம் ஜலம் கழித்து விட்டு கினறுகளில் வந்து சுத்தம் செய்கிறார்கள்.
சிலர் கினற்றுக்குள்ளேயே மலம் ஜலம் கழித்துவிடுகிறார்கள். இந்த செயல்கள் இஹ்ர்களுக்கு மட்டுமில்ல மற்றவர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
அடுத்து நாம் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைக்க வேண்டியவைகளில் நமது பாத்திரங்களாகும். நமது பாத்திரத்தின் மூலமாகவும் நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை
(வெüயே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலா விட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நூல்: புகாரி (3280)
பொதுவாக இரவு நேரங்களில் பூச்சிகள் நடமாட்டம் இருக்கும். அந்த நேரத்தில் தன்னீர் தொட்டியில் விழுந்து விடக்கூடாது. இப்படி பல காரணங்கள் இருக்கிறது.  அடுத்து பாத்திரங்கள் மூலமாக நோய் பரவுவத்கு வாய்புள்ளதாக கருதப்படுவைகள். நமது பாத்திரத்தில் ஊதி  குடிப்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (எதையும்) பருகும்போது பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறவிஉறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக்கரத்தால் சுத்தம்செய்ய வேண்டாம். இதை அபூகத்தாதா (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (153)
நமது ஆரோக்கியத்தை கெடுத்து நாசமாக்ககூடிய காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். 
மதுபானம், புகை.
அடுத்து நமது ஆரோக்கியத்தை கெடுத்து நாசம் செய்யக்கூடிய காரியங்களில் மதுபானமும் புகையுமாகும்.
இன்று பல சகோதரர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து நாம் வருந்துகிறோம். ஆனால் அவர்களோ கொஞ்சமும் கலலையில்லாமல் பொது இடங்களில் இருந்து கொண்டு பாட்டு படித்துக்கொண்டும், புகைவிடும் போது தன்னுடைய புகையை வட்ட வட்டமாக வானில் பறக்க விட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.
சில தந்தையர்கள் தான் மட்டும் புகைப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். தன்னுடைய மப்ன் முன்னால் புகைப்பதும், மகனையே பீடி, சிகரெட் வாங்கச்சொல்வதும் அவனை புகை பிடிக்க தூண்டக்கூடிய காரியங்களாகும்.
பன்றி இறைச்சியின் தீமைகள்.
இஸ்லாம் வ­யுறுத்துகின்ற ஆரோக்கியத்தை எடுத்து நடக்கும் போது இன்று உலகில் வருகின்ற எந்த நோயை விட்டும் தன்னை பாதுகாத்துக்கொள்ளலாம். இன்று நாம் வாழும் காலத்தில் எத்தனையோ நோய்கள் உருவாகின்றன. சமீபத்தில் வந்து நம்மை ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் ஒன்றாகும். இந்த காய்ச்சல் எதன்காரணமாக வெளிப்படுகின்றது மúத்துவர்கள் சொல்வதை கவனிக்கும் போது சுத்தமின்மையின் காரணமாகத்தான் என்பதை விளங்கி கொள்ளலாம்.
இஸ்லாம் பன்றியை அசுத்தமான பிரானியாக கருதுகிறது. ஆனால் இதை அறியாதோர் பன்றியை வளர்ப்பதும் அதைக்கொஞ்வதுமாக இருக்கிறார்கள்.
பன்றிக்காய்ச்சல் எதனால் ஏற்பட்டது என்பதை ஒரு மருத்துவர் சொல்லும் போது..
புளூ என்ற லைரஸ் பன்றியில் போய் நுழைந்து அது ஹெச் 1 என் 1 நோயாக மாறிவிட்டது. பிறகு ஒரு பன்றியில் ஏற்பட்ட ஒரு காயத்தை தொட அந்த நோய் மனிதனுக்கு பிடித்துக்கொண்டு பிறகு எல்லோறுக்கும் பரவி விட்டது.
இதனால் ஏற்படக்கூடிய பஸ்ங்கரத்தை விளக்கும் போது...‚
பன்றி இறைச்சி உன்பதால் ஹ‚க்  வார்ம் (கொக்கி புழு) இது மனித குட­ல் தங்கி குட­ன் சுவற்றை தாக்கி இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும். 
ரவுண்ட் வார்ம் என்னும் வட்டப்புழுக்கள், இன் வார்ம் ஊசிப்புழு. உண்டாகின்றன. இது மனித இரத்த நானங்களில் அனைத்திலும் சென்று மனித உறுப்புகளை பாதிக்கச் செய்கின்றன.
டேப் வார்ம் நாடாபுழு என்பது நமது உட­ல் 80 அடிவரை வளரக்கூடியது. 
ஏன் எதற்கு எப்படி (பாகம் 1 பக்கம் 70)
ஆக இஸ்லாம் சொல்­யிருக்கின்ற சுத்தத்தை எடுத்து நடந்தால் உலகத்தில் எந்த நோயும் தோன்றாது. தோன்றினாலும் அதை நம்மை தீண்டாது. இன்ஷா அல்லாஹ்

Wednesday, March 27, 2013

தனி ஈழம் சாத்தியமா?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனிஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை. 

அமெரிக்கா  கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.
இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்தநாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள ஒப்புக் கொள்ளாது.
தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாகராணுவமும் காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறுவழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள்.
அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும்விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒருநாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறுவழியில்லாமலும்எஞ்சிய பகுதியையாவது தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தனிநாடு கோரிக்கையை அந்தநாடு ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் பிரபாகரன் உயிருடன் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துவந்த போதும்வடக்குப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை ராணுவம் நுழையவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தபோதும்வடக்குப் பகுதியைக் கடந்து கொழும்பு நகருக்குள் ஊடுருவி இலங்கைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கிய போதும்வேறுநாடாக இருந்தால் தொலைந்து போகட்டும் என்று தனிநாடாக ஆக்கி இருப்பார்கள்.
ஆனால் விடுதலைப்புலிகளின் கடுமையான அனைத்து தாக்குதல்களுக்குப் பின்னரும்,இலங்கையானது தனிநாடு கோரிக்கையை ஏற்கமறுத்து விட்டது. சில ராணுவவீரர்கள் ராணுவத்தைவிட்டு ஓட்டம்பிடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தும்அந்தநாடு தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இன்று அங்கு விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த புலிகள்கூட பெரும்பாலும் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் இருந்த பெண்களும் சிறுவர்களும்கூட அழிக்கப்பட்டுவிட்டனர். தனிநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஒருவர் கூட இல்லாத அளவுக்கு துடைத்து எறியப்பட்ட பின்னர்தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது இலங்கை அரசால் கோமாளித்தனமாகத்தான் பார்க்கப்படும். வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.
விடுதலைப்புலிகளின் கடுமையான போராட்டத்தின்போது இலங்கைக்கு உலகநாடுகள் நெருக்கடி கொடுத்து இருந்தால்தனிஈழம் கிடைத்துவிடும் என்றநிலை ஒருகாலத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த ஐந்துகோடிக்கும் மேலான தமிழர்கள் மொழிஉணர்வின் காரணமாக ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அரசியல் கட்சியினர் பெருமளவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.
தமிழக ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகள் தங்கிட இங்கு அடைக்கலம் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு ஆதரிக்கிறது என்ற நிலைமை காரணமாகமத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப்படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது. இலங்கையின்மீது அத்துமீறிப் பறந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப்பொட்டலங்கள் போட்டுஇலங்கை அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையும் விட்டது.
அந்தநிலை நீடித்து இருந்தால்உலகநாடுகளின் ஆதரவுடன் தனிநாடு அமைய இந்திய அரசும் உதவுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விடுதலைப் புலிகள் தங்களது செயல்களால் நாசமாக்கி விட்டனர்.
இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாதவடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் வாய்திறக்க முடியாதநிலை அப்போது தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா போன்ற சிலதலைவர்கள் விடுதலைப்புலிகளின் செயல்களை துணிவுடன் கண்டித்தனர். விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் உள்ளார் என்ற உளவுத்துறையின் தகவலால்அவருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மன்னிக்க முடியாத பாதகத்தைச் செய்த புலிகளை ஒழித்துக் கட்ட மத்தியஅரசு முழுவீச்சில் களமிறங்கியது.
ராஜிவ்காந்தியின் மனைவியிடமும்அவரது மகனிடமும் முழுஅதிகாரமும் குவிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் கணக்கைத் தீர்க்க அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே புலிகளை ஒழித்துக்கட்ட அனைத்து விதமான உதவிகளையும் இலங்கை அரசுக்கு மத்தியஅரசு செய்து கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை.
ஆயுத சப்ளை வழங்கி இந்திய ராணுவத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்தும்தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்தும்புலிகளை முற்றிலுமாக ஒழிக்க எல்லா உதவிகளையும் மத்திய அரசுசெய்து கொடுத்ததால்தான் இலங்கை ராணுவம் புலிகளை வேறோடு அழிக்கமுடிந்தது.
விடுதலைப்புலிகள் தங்களுக்கு பக்கபலமாக இருந்த மாபெரும் நாட்டை தங்களது கொடும் செயலால் எதிரியாக ஆக்கிக் கொண்டு இருக்கா விட்டால்தனிஈழம் இன்னேரம் அமைந்திருக்கலாம்.
அல்லது அதிகாரப் பகிர்வுடன் கூடிய தனிமாகாணம் இந்துத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். அதைக் கெடுத்து விடுதலைப்புலிகள் நாசமாக்கிக் கொண்டனர்.
மதத்தால் வேறுபட்டாலும்மொழியால் ஒன்றுபட்ட தமிழ்கூறும் முஸ்லிம்களைத் தங்களின் முதல்எதிரியாக இவர்கள் ஆக்கிக் கொண்டதாலும்முஸ்லிம்களை வேறோடு கிள்ளி எறிய அவர்கள் செய்த கொடுமைகளாலும்அவர்களின் பலம் குன்றியது. இந்துத்துவாவிற்கு நிகரான விடுதலைப்புலிகளை விட சிங்களபௌத்த வெறியர்கள் பரவாயில்லை என்ற நிலைமை இதனால் ஏற்பட்டது.
இவர்கள் போராளிகள் அல்ல பிறநாடுகளிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் (வல்லரசு நாடுகள் உட்பட) எல்லா நாடுகளுக்கும் ராஜிவ் கொலையால் ஏற்பட்டது. பலநாடுகளும் இவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.
இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்களஅரசு அனைத்து நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு புலிகளை முற்றாக ஒழித்தே கட்டிவிட்டது.
புலிகளின் கொடூரமான ஆட்சிமுறையால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடமாகாணத் தமிழர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழ்ந்த நிலை மாறியுள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் பாதையில் செல்லக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் உறுதியுடன்உள்ளனர்.
இவர்களின் விருப்பத்திற்கு நேர்மாறாகத்தான் இங்குள்ளவர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றி வருகிறார்கள்.
இங்கே இந்தக் கோரிக்கை வைப்பதால் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள்மீது அடக்குமுறை அதிகரிக்கத்தான் செய்யும். சிங்களர்களின் கோபம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பும்பட்சத்தில் ராஜபக்சேஅரசு அதை வேடிக்கை பார்க்குமே தவிரதமிழர்களைப் பாதுகாக்காது.
திராவிடநாடு கேட்டு அண்ணாதுரை போராடினார். வடக்கு வாழ்கிறதுதெற்கு தேய்கிறது என்றெல்லாம் வாதங்களை எடுத்து வைத்தார். இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கி விட்டது.
திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம்ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன என்று அண்ணா அந்தர்பல்டி அடித்ததை நாம் மறந்துவிட முடியாது. காரணங்கள் இருந்தாலும் அதைக் கேட்டுப்பெற முடியாத அளவிற்கு அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அது கைவிடப்பட்டது. தனிநாடு கோரிக்கைக்கு இதுதான் முடிவாகும்.
ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கே பல உயிர்களைப் பலிகொடுத்து போராட வேண்டியிருக்கிறது. இன்னும் தெலுங்கானா உருவானபாடில்லை.
பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிட்டு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. அவ்வாறு செய்யாமல் அவர்கள் சென்றிருந்தால் இந்த இருநாடுகளும் ஒரே நாடாகத்தான் இன்றுவரை இருந்திருக்கும்.
பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் அவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும்கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய ராணுவத்தை அனுப்பியதால்தான் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாறியது.
பாலஸ்தீனம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சுதந்திரநாடாக ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் மண்ணுக்கு வெளியே வேறுநாடுகளில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதும், முழு இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களிடத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்பதால் ஏற்பட்ட அனுதாபமும் காரணமாகஇருந்தது.
இது போன்ற எந்தச் சாதகமான அம்சமும் இலங்கையில் இல்லாத போதுஇங்கிருந்து தனிநாடு கேட்பதற்கு நிகரான அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.
அடுத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமான ஒன்றே. அமெரிக்கா தீர்மான நகலை வெளியிட்டுஅதன் நகலை வாசித்துப் பார்த்துவிட்டு இப்படியான கோரிக்கையை தமிழீழ ஆதரவாளர்களும் மாணவர்களும் வைக்கவில்லை.
மனிதஉரிமை மீறல்களிலும்போர்க்குற்றங்களிலும் முதல்இடத்தில் உள்ள அமெரிக்காவைப் பற்றி இங்குள்ள அரசியல்கட்சித் தலைவர்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது.
தனது ஆதாயத்திற்காக உலகநாடுகளை மிரட்டுவதும்காரியம் சாதித்துக் கொள்வதும் அமெரிக்கவிற்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சுப்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்தியது.
இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால்உப்புசப்பு இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழகப் போராளிகள் அனைவர் மீதும் கரியைப்பூசி விட்டது. ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தீர்மானம் உள்ளது.
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்து விட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து,அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியஅரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றுபுரண்டு பேசுகிறார்கள்.
ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கூறுவதற்கு முன் அந்தத் தீர்மானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
அறிவுஜீவிகளுக்கும்ஊடகங்களுக்கும் கூட இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஒன்றே தனிஈழத்தைப் பெற்றுத்தரும்ராஜபக்சேயைத்த ண்டிக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஊடகங்களில் முகம் காட்டியவர்கள் வெட்கமின்றி பல்டி அடிக்கின்றனர்.
எமது கணிப்பு பிரகாரம்தமிழகமே கொந்தளித்தாலும்மத்திய அரசு இலங்கைக்கும் ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிவ்காந்தி படுகொலைக்கு கணக்கு தீர்ப்பதற்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும். ராஜபக்சேவுக்கு வலிக்காத வகையில் தடவிக் கொடுக்கும் மத்திய அரசின் நிலையில் எந்தமாற்றமும் இருக்காது.

NOTE :-
(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க)

தற்கொலை பற்றி இஸ்லாம்

தற்கொலை பற்றி இஸ்லாம்

ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும் தற்கொலை செய்வதில்லை..

யார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை தேடிக் கொள்கிறான். எனவே இவ்வழி சரிதானா? இதற்க்கு இஸ்லலாத்தில் என்ன தீர்வு? என்பதைப் பற்றியும் இது போல் எண்ணங்கள் வந்தால் அதைக் களைய வேண்டிய வழிகள் என்னென்ன என்பதையும் காண்போம்.

தற்கொலை செய்யத் தூண்டும் காரணிகள்

ஒரு மனிதன் தற்கொலை செய்வதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் உந்துதலாகக் கருதப்படுகின்றன.

நோய், நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், தனிமைப்படுதல், பயம், , குழப்பம், பாதுகாப்பற்ற சூழல், மனஅழுத்தம், , மனக்கவலை, குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையிழத்தல் ஆழ்ந்த துக்கம், வரதட்சனை கொடுமை, காதல்தோல்வி, கள்ளக்காதல், கடன்தொல்லை, பயம், உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் பசி, பட்டினி, பஞ்சம், , கடவுளுக்கு பலி கொடுப்பது, விவாகரத்து, பிரிவுகள் மற்றும் உறவு முறிதல் இன்னும் பல...

அற்பமான விஷயங்களுக்காக தற்கொலைகள்

தினசரி பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் நாம் காணும் அற்பமான தற்கொலைகளில் சில....

1.ஆசிரியை திட்டியதால்,

2.பரிட்சையில் தோல்வி அடைநத்தால் மாணவ மாணவியர் தற்கொலை 

3.காதலி வேறு ஒருவருடன் பேசியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

4.நடிகர், நடிகைகளின்/அரசியல் தலைவர்களின் இறப்பு செய்தியால் தற்கொலை, 

5.குடும்பத் தகராறு அல்லது கணவன் மனைவியை திட்டியதால் 

6.வேலை இழப்பு, பணிபுரியுமிடத்தில் பிரச்சனை

என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது.

விதியை நம்ப மறுத்தல் 

விதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. வாழ்க்கையில். தற்கொலை செய்பவர் விதியை மறுத்து விட்டுத்தான் மரணமடைகிறார்.

விதியைப் பொறுத்த வரை கடைசி நேரம் வரை எது நடந்ததோ அதை விதி மேல் போட்டு விட்டு வருங்கால நடவடிக்கைகளுக்கு நமது முயற்சியிணை கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது....

பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் ஏற்படுகிறது.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் (57 : 22)

மேலே கூறிய படி வருங்கால நடவடிக்கைகளுக்கு விதி மேல் பலி போடாமல் நமது முயற்ச்சிகளை மேற கொள்ள வேண்டும்....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

விதியை நம்பி (சோம்பேறியாயிருக்காதீர்கள்) செயல்படுங்கள், ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் எதற்காக படைக்கப்பட்டீர்களோ அதற்கான வழிகள் எளிதாக்கித் தரப்படும்.

நூல்: புஹாரி – 4945, 4946, 4947, 4949, 6217, 6605, 7551, 7552

தற்கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்

நமது உயிருக்கு சொந்தக்காரன் அல்லாஹ் மாத்திரமே. அதனை எடுக்கும் உரிமையும் அவனுக்கு மாத்திரமே உண்டு. தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிடுவதாகும். அதனால்தான் இறைவன் மிகப் பெரும் தண்டனையான நிரந்தர நரகத்தை இதற்கான தண்டனையாக நிர்ணயித்திருக்கின்றான்.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன் எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)
நூல்: புஹாரி-1364

இஸ்லாத்தில் மிக உன்னதமான அமலாக கருதப்படுவது ஜிஹாத் எனப்படும் புனிதப்போர். இதில் கூட தனது உயிரை தானே எடுக்க முடியாது. இதனால் தான் தற்கொலை படை தாக்குதலை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களி[ல் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே* தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்மை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே* தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே* எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி 6606

ஜனாஸா தொழுகை கிடையாது

நிரந்தர நரகம் என்றாகி விட்ட பிறகு ஜனாஸா தொழுகை தொழுது என்ன பயன் என்பதினால் தான் இதைக்கூட அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.

நூல்: முஸ்லிம் 1779

தற்கொலை செய்தவரின் மறுமை நிலை

கோபத்தால் அது வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் ""எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?’’ என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

(அல் குர்ஆன் 6:8)

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

(அல் குர்ஆன் 6:10)

“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365

“யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-5778)

தற்கொலை எண்ணத்தை களையும் வழிமுறைகள்

இன்பமும், துன்பமும் மனித வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தது. மாத்திரமன்றி அதுவே இறைவனின் நியதியுமாகும் வாழ்வை புரிந்து கொள்ள வேன்டும்.

தற்கொலையைத் தீர்வாக நினைக்க கூடியவர்கள் முக்கியமாக கருதுவது தான் மாத்திரமே உலகில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கருதுவது.ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வடிவங்களில் தினந்தோறும் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.

ஏழைக்கு உண்பதற்கு உணவில்லை என்ற பிரச்சினை என்றால் பணக்காரனுக்கு இருக்கின்ற உணவினை உண்ண முடியாத சூழ்நிலை சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள். சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும், ஊர், நாடு மற்றும் உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

குர்ஆன் ஹதிஸ் வழியில் சில அறிவுரைகள்

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல் குர்ஆன் 2:155)

""நம்பிக்கை கொண்டோம்’’ என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?
(அல் குர்ஆன் 29:2)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி-5645

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி – 5641

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319

எந்த நிலையிலும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது, மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5671, 6351

ஜசகல்லாஹ் கைர் சகோ இஸ்மத் 

Reference by : http://tamilwebislam.blogspot.com/

தொடர்பு உடையவை :

பெருமையடித்தல் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=565621296790280

நற்குணம் பற்றி இஸ்லாம் பகுதி -1: http://www.facebook.com/photo.php?fbid=440299172655827

நற்குணம் பற்றி இஸ்லாம் பகுதி -2: http://www.facebook.com/photo.php?fbid=515340085151735

வரதட்சணை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=504505779568499

பிரார்த்தனை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=493513024001108

ஜம் ஜம் தண்ணீர் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=486860447999699

இரக்கம் கொள்ளுதளின் அவசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=474289869256757

ஆரோக்கியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=442586625760415

தீய குணங்கள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=440747249277686

உறவினர்கள் பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=436121243073620

திருமணம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=428787667140311

கற்பு பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=426250134060731

கோபதை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=425646767454401

உலக முடிவின் நாளை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=417280944957650

யுக முடிவின் நாளை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=567219073297169

புறம் பேசுவதை பற்றி இஸ்லாம்!!! : http://www.facebook.com/photo.php?fbid=414017775283967

தாடி வளர்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=413330282019383

காதல் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=411782918840786

நோயின் ரகசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410893568929721

கணவனின் கடமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410120679007010

பதவியை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=409223415763403

வட்டியின் தீமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=406637962688615

இஸ்லாம் பார்வையில் நட்பு: http://www.facebook.com/photo.php?fbid=404734932878918

பில்லி சூனியம் செய்வினை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=402084653143946

வறுமையை ஒழிப்பதை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=399031366782608

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=398326716853073

ஹலாலான உழைப்பின் சிறப்பு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=396731247012620

சொத்துப் பங்கீடு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=381023331916745

பெண் சிசுக் கொலை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=522152887803788

அடிமைகள் பற்றி இஸ்லாம்
இஸ்லாம் அடிமைகளை கொடுமைபடுத்த சொல்கிறதா? : http://www.facebook.com/photo.php?fbid=380474561971622

பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=368359163183162

இஸ்லாத்தின் பார்வையில் கிரிக்கெட் : http://www.facebook.com/photo.php?fbid=354585167893895

விபச்சாரம் பற்றி இஸ்லாம் :http://www.facebook.com/photo.php?fbid=352137724805306

சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ??? : http://www.facebook.com/photo.php?fbid=351434681542277

உறவுகளைப் பேணவேண்டியதின் அவசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=343666425652436

இரக்கம் கொள்ளுதளின் அவசியம் பற்றி இஸ்லாம் :http://www.facebook.com/photo.php?fbid=474289869256757

ஆரோக்கியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=442586625760415

தீய குணங்கள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=440747249277686

உறவினர்கள் பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=436121243073620

திருமணம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=428787667140311

கற்பு பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=426250134060731

கோபதை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=425646767454401

உலக முடிவின் நாளை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=417280944957650

யுக முடிவின் நாளை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=567219073297169

புறம் பேசுவதை பற்றி இஸ்லாம்!!! : http://www.facebook.com/photo.php?fbid=414017775283967

தாடி வளர்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=413330282019383

காதல் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=411782918840786

நோயின் ரகசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410893568929721

கணவனின் கடமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410120679007010

பதவியை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=409223415763403

வட்டியின் தீமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=406637962688615

இஸ்லாம் பார்வையில் நட்பு: http://www.facebook.com/photo.php?fbid=404734932878918

பில்லி சூனியம் செய்வினை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=402084653143946

வறுமையை ஒழிப்பதை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=399031366782608

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள் பற்றி இஸ்லாம் :http://www.facebook.com/photo.php?fbid=398326716853073

ஹலாலான உழைப்பின் சிறப்பு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=396731247012620

சொத்துப் பங்கீடு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=381023331916745

பெண் சிசுக் கொலை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=522152887803788

அடிமைகள் பற்றி இஸ்லாம்
இஸ்லாம் அடிமைகளை கொடுமைபடுத்த சொல்கிறதா? :http://www.facebook.com/photo.php?fbid=380474561971622

பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=368359163183162

இஸ்லாத்தின் பார்வையில் கிரிக்கெட் : http://www.facebook.com/photo.php?fbid=354585167893895

விபச்சாரம் பற்றி இஸ்லாம் :http://www.facebook.com/photo.php?fbid=352137724805306

சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ??? :http://www.facebook.com/photo.php?fbid=351434681542277

உறவுகளைப் பேணவேண்டியதின் அவசியம் பற்றி இஸ்லாம் :http://www.facebook.com/photo.php?fbid=343666425652436