Saturday, March 31, 2012

பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட் !


                                  Kfc Pepsi Mcdonalds Pizza
புதுடெல்லி : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உணவுகள்

இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன்

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள்

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.

நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்

THANKS TO POST : THATSTAMIL NEWS

Thursday, March 29, 2012

இளமையை மீட்டுத்தரும் ஆவகேடோ !

                               equal parts avocado oil



ஆவகேடோ பழம் சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் சிறந்தது. இயற்கையிலே சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. ஆவகேடோவின் பழத்தின் அழகியல் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆரோக்கியமான சருமம்

ஆவகேடோவில் உயர்தர வைட்டமின் ஏ உள்ளது. சருமத்தின் இறந்த செல்களை போக்குகிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், குளுடோமின் சருமத்தினை ஆரோக்கியமாக மாற்றுகிறது. ஆவகேடோவில் வைட்டமின் இ அதிகம் அடங்கியுள்ளது. இது சரும பாதுகாப்பிற்கு ஏற்றது. வறண்ட சருமத்தை மென்மையாக்குவதில் ஆவகேடோ எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. ஆவகேடோ பேக் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ஸ் ஆக செயல்படுகிறது. இது பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பித்து இளமையை மீட்டெடுக்கிறது.

முகச்சுருக்கம் போகும்

முகச்சுருக்கத்தினால் வயதான தோற்றம் ஏற்படும். ஆவகேடோ இதனை போக்குகிறது. அதிகமான மேக் அப், ரசாயனங்கள் அடங்கிய அழகு சாதனங்களை உபயோகிப்பதனால் முகச்சுருக்கம் ஏற்படும். இதனை இயற்கையான வழியில் ஆவகேடோ போக்குகிறது. ஆவகேடோ பழத்தை மசித்து அதில் பேஷியல் மாஸ்க் போல போடவும். 20 நிமிடம் கழித்து ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும், இதனால் சருமத்தில் தங்கியுள்ள எண்ணற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

முகம் பளபளப்பாகும்

ஆவகேடோ பழத்துடன் ஒரு வாழைப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் சேர்த்து நன்றாக கூழ் போல பிசைந்து முகம், கழுத்து மற்றும் வறண்ட சருமத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சருமத்தில் தழும்புகள், வடு குறைந்து வறண்ட சருமம் பளபளப்பாகும்.

ஆவகேடோ எண்ணெய் சில துளிகளை எடுத்து சருமத்தில் மென்மையாக பூசி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் ஊறவைத்து கழுவ சருமம் பளபளப்பாகும் .

பளபளக்கும் கூந்தல்

ஆவகேடோ சதையை எடுத்து அதனுடன் ஒரு முட்டையின் வெண்கருவை உடைத்து ஊற்றி கலக்கி சிறந்த கண்டிசனராக பயன்படுத்தலாம். இந்த கலவையை தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் கூந்தலுக்கு எண்ணெய் பசை தன்மை கிடைப்பதோடு வறண்ட சருமம் மிருதுவாகும். இதில் உள்ள வைட்டமின் இ கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.
வெப்பக்கொப்புளங்கள்

கோடை காலத்தில் ஆவகேடோ எண்ணெய் இயற்கை சன்ஸ்கிரீன் லோசனாக செயல்படுகிறது. இது அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறது. வெப்பக் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ள இடத்தில் ஆவகேடோ எண்ணெய் பூச வலி குறையும். கொப்புளங்கள் குணமாகும்.
   
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு...

இளைஞர்களே! சகோதரர்களே!! இந...்தப்பதிவை மேலோட்டமாக படித்து விட்டு "கமெண்ட்" கொடுக்க வேண்டாம்!!
ஒன்றுக்குப் பலமுறை படித்து விட்டு "உண்மையை மட்டும் " கமெண்ட் கொடுங்க!

****ஒரு முதிர்க் கன்னி..இளைஞர்களை நோக்கி....****

வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன்...
என்னை நோக்கி....
என் தோழியின் பத்து வயது மகள் ஓடி வந்தாள்..
"ஆண்டி" என்று என்னை நெஞ்சோடு இருக்க கட்டிக் கொண்டாள்...!

நான் "ஆண்டி"யாம் ...?

என்னைவிட வயதில் குறைந்த என் தோழிக்கு

பத்து வயதில் ஒரு குழந்தை....!

நானோ...
திருமணச் சந்தையில் இன்னும்

"விலை" போகாத,காட்சிப் பொருளாய்....!

நாட்கள் செல்கிறது...

வயதோ கூடிக் கொண்டே போகிறது...

என்னை பெண் பார்க்க ஒவ்வொரு நாளும்,

ஒவ்வொருவராய் வருகிறார்கள்..!

நானோ காட்சிப் பொருளாய் ..
ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்காகவும் அலங்கரிக்கப்படுகிறேன்...!

அழகில் குறையில்லை என்றார்கள்..
நிறத்தில் குறையில்லை என்றார்கள்...
குணத்தில் குறையில்லை என்றார்கள்...

பணத்தில் மட்டும் குறையைக் கண்டார்கள்!

ஆம்! நானோ ஏழைக்குப் பிறந்த பேழை..!

என்னை ஏழை என்பதற்காக ஒதுக்கும் இளைஞர்களே!

நான் உங்கள் வீட்டில் பிறந்த சகோதரியாக இருந்தால்..
முதிர்க் கன்னியாக இருந்தால்...
என் "வேதனையின் வலி" உங்களுக்குப் புரியும்தானே!

கை கூலி வாங்குவது கையாலாகாத தனம்
என்பது புரிந்தும் புரியாமல் நடிக்கும் இளைஞர்களே!!

எந்தப் பெண்ணும் கேட்காத,
எந்தப்பெண்ணிடமும் நீங்கள் கேட்டிறாத..
ஒன்றை உங்களை நோக்கி ..நான் கேட்கவா..?

என்னைத் திருமணம் செய்ய விலை பேசும்
கையாலாகாத இளைஞனே!

திருமணத்திற்குப் பின்பு...உன் குழந்தையை
என் வயிற்றில் சுமக்கப்போறேனே....
அதற்கு என்ன விலை நீ தருவாய்...?

என் கஷ்டத்தைத் தாங்கி ...
உன்னை சந்தோஷப் படுத்துவேனே..
அதற்கு என்ன விலை நீ தருவாய்....?

உன் குழந்தைகளைப் பராமரிக்கப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்...?

உனக்காக என் சொந்தப் பந்தத்தை
தியாகம் செய்யப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்..?

நீ என்னை என்ன கொடுமைப் படுத்தினாலும்,
பெண்ணா பிறந்ததினால்....
அதையும் அனுபவிக்கப் போறேனே...
அதற்கு என்ன விலை நீ தருவாய்....?

கோபம் வருகிறதா..?
ரோஷம் வருகிறதா..?
வெட்கம் வருகிறதா..?

உனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும்
என்னை விலை பேச மட்டும் .....
உனக்கு எப்படி மனசு வருகிறது....?

இருப்பினும்...
அல்லாஹ்வுக்காக என் உணர்வுகளை...
கட்டுப் படுத்திக் கொள்கிறேன்...!

நான் மறுமைக்காக வாழ்பவளாக இருப்பதால்...
தவறு செய்வதை என் கற்பனையில் கூட
நான் நினைக்கவில்லை...!

என் இறைவன் எண்ணைக் கைவிட மாட்டான்..
என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு..
இன்னும் இருக்கிறது...! இன்ஷா அல்லாஹ் இந்த நம்பிக்கைத் தொடரும்!

வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்!
ஒரு உண்மையான (கை கூலி வாங்காத)
ஆண் மகனை எதிர்பார்த்து......!!


(அன்புச் சகோதர்களே! நான் பழகிய என் சில சகோதரிகளின் கண்ணீர்க் கதைக்காக இந்தப் பதிவு!எழுத்துக்கள் என்னுடையதாக இருந்தாலும்..உணர்வுகள் ..என் சகோதரிகளின் உணர்வுகள்!
அல்லாஹ்வைப் பயப்படுவோம்!
வரதட்சனையின்றி திருமணம் செய்வோம்!!)

இந்தப் பதிவின் மூலம் வரதட்சணை வாங்க நினைக்கும்..
ஒரு இளைஞன் திருந்தினாலும்...அது இந்தப் பதிவிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக நான் கருதுவேன்!!

--சகோதரி உம்மு ஸமீஹா ஸமீஹா அவர்களின் பதிவு....

Tuesday, March 27, 2012

மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கான கோடைகால குர்ஆன் வகுப்புகள் .

                                           

திருவாரூர்: பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆர் வகுப்புகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மன்னார்குடியில் நடைபெற உள்ளது.

பள்ளி ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கிறது. பள்ளி மாணவிகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மன்னார்குடியில் தங்குமிடத்துடன் கூடிய குர்ஆன் வகுப்புகள் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வாணக்காரத் தெருவில் உள்ள பெண்கள் அரபி ஹிஃப்ளு மத்ரஸாவில், ஜாமிஆ மன்பஉஸ் ஸாலிஹாத்தில் பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெறும் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குர்ஆன் வகுப்புகளில் தஜ்வீதுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி, இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள், ஐந்து வேளை தொழுகைப் பயிற்சி, சுன்னத்தான துஆக்கள், சுன்னத்தான வாழ்க்கை நடைமுறை, வரலாற்றுச் சம்பவங்கள் (ஹயாத்துஸ் ஸஹாபா), அவசியமான ஹதீஸ்கள் (முன்தகப் அஹாதீஸ்), அரபி மொழி ஆகிய வகுப்புகள் நடைபெறும். மேலும் எம்பிராய்டிங் பயிற்சியும் அளிக்கப்படும்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் 04367-252925, 9500608252 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் girlsislamicschool@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

THANKS TO POST : THATS TAMIL NEWS  : 28-03-2012

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

                                 
'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நா...ட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பலி போடும் கையாலாகாத காவல்துறையும் மீடியாவும் – பிரஸ் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு கடும் கண்டனம்

“நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது” என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்” என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். “உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது” என்றார்.
“அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

POSTED BY : ADIRAI WSC

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்

                           
                     பிரிட்டனில்  வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுபில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர்  கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உன்னத பாட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதி கூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …
பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)
கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்
ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்
இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)
கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,
சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள உலரள்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.

POSETD BY TNTJ

Saturday, March 24, 2012

இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ?

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது கட்டிடப் பணிக்கு உதவுங்கள்.

 
அஸ்ஸலாமு அலைக்கும்,,, 

அதிராம்பட்டினம் ECR ரோட்டில் (காதிர் முகைதீன் கல்லூரிக்கு பள்ளிக்கு எதிரில்) நிலம் வாங்கப்பட்டு, கீற்று கொட்டகையில் தவ்ஹீத் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. இந்த பள்ளிக்கு 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகை மட்டும் முதலில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும்,தவ்ஹீத் பள்ளியின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவை:

1. ஐவேளை தொழுகை

2. ஜும்ஆ தொழுகை

3. ரமலானில் இரவு தொழுகை மற்றும் பயான்

4. ரமலானில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு

5. ரமலானில் ஸஹர் சாப்பாடு

6. தர்பியா நிகழ்ச்சி

7. கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

8. இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

9. பெண்களுக்கு ஜூம்ஆ தொழுகை
 
இப்படி பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் இந்த பள்ளியின் கட்டுமானப்பணி முடிந்தால் இன்னும் பல பணிகளை விரைவாக செய்ய முடியும். மேலும் ஜும்ஆ தொழுகையின் போது வெயிலில் தொழும் சகோதரர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். பள்ளிவாசல் சிறியதாக உள்ளதால் பெண்கள் இந்த பள்ளியில் தொழுவதற்கு முடியவில்லை.

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் தற்போதைய நிலவரம்:

அதிராம்பட்டினம் ECR ரோட்டில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி தற்சமயம் கீற்று கொட்டகையில் தான் நடந்து வருகிறது.

பள்ளியின் கட்டுமான பணி துவக்கம்:

அல்லாஹ்வின் அருளால், 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணி துவங்கி, முதல் தளத்தின் கான்கீரிட் வரை முடிந்துள்ளது. பொருளாதாரம் கையிருப்புயில்லாத காரணத்தினால், கட்டிட பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


பள்ளியின் கட்டிட செலவு மதிப்பீடு:

இந்த பள்ளியின் கட்டிட பணிகளுக்கு ரூபாய் 35 லட்சம் செலவாகும் (35,00,000) என்று பொறியாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது (இது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட மதிப்பீடு).

குறிப்பு:
கட்டிட பொருட்களின் விலை மற்றும் கூலி ஆட்களின் சம்பள உயர்வின் காரணமாக கட்டிட பணியின் தற்போதைய மதிப்பீடு 56 லட்சம் அளவுக்கு உள்ளது.
ஜூம்ஆ தொழுகையில் பெண்கள்:

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இடம் பற்றாக்குறையால் இதுவரை ஆண்கள் மட்டுமே தொழுது வந்தனர். கடந்த 20.1.2012 முதல் பெண்களுக்கு ஜூம்ஆ தொழ, புதிய கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் புதிய கட்டிடத்தின் முதல் தளத்தை முழுமையாக நிரப்பினார்கள். இரண்டாம் தளத்தையும் சரி செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.



'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு உதவுங்கள்:

அல்லாஹ்வின் இந்த ஆலயத்தை கட்ட உங்களின் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில் தலைமையின் பரிந்துரை கடிதம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும், 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு நன்கொடை வழங்கும்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை வழங்கிய பரிந்துரை கடிதம்:





இந்த பள்ளியின் கட்டிடப் பணிகளுக்கு உங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

அதிரை எக்ஸ்பிரஸ்: மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ பயான் (23.03.12)

அதிரை எக்ஸ்பிரஸ்: மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ பயான் (23.03.12):


மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ பயான் (23.03.12)

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – நான்காவது கூட்டம் !


அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக நான்காவது கூட்டமாக இன்று ( 23-03-2012 )  அஸர் தொழுகைப்பின் நமதூர் கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர்  M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், ஆசிரியர் சகோ. முகமது அலியார் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது. 

நிகழ்ச்சியின் நிரலாக...........................
சகோ. அதிரை அஹமது அவர்களால் கிராஅத் ஓதுப்பட்டது.




அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு சார்பாக கடந்த 24/02/2012  அன்று நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகிய இரு நிர்வாகத்தினரும் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.

இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ. பரகத் அலி மற்றும் அதிரை சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர்கள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அகமது அன்சாரி அவர்களால் சில நாட்களுக்கு முன்பாக வழக்கு சம்பந்தமான “தன்னிலை விளக்கம்” ஓன்று நோட்டிசாக விநியோகிக்கப்பட்டது ( விரைவில் இவை பதிவுக்குள் கொண்டுவரப்படும் )

AAMF ன் சார்பாக இந்த நோட்டிசை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக இப்பிரச்சனையை AAMF கையிலெடுத்து சுமுகமாக தீர்த்து வைப்பது என்றும் இதற்காக தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுங்கப்பட்டு கீழ்க்கண்ட குழு ஓன்று நியமணம் செய்யப்பட்டது.

அதிரை அஹமது
M. நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )
P.M.K. தாஜுதீன்
மான் A. நெய்னா முகமது
K. யாஹியா கான்
J. சாகுல் ஹமீது
A. முகமது மொய்தீன்
E. வாப்பு மரைக்காயர்
T.A. அகமது அனஸ்

மேலும் கூடுதலாக AAMF ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், சகோ. S.M.A.  அக்பர் ஹாஜியார், M. A. அஹமது ஹாஜா மற்றும் பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்கள் இக்குழுவில் இடம்பெற்று சமரசம் ஏற்பட உறுதுணையாக இருப்பார்கள்.

இக்குழு விரைவில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கும்  ( இன்ஷா அல்லாஹ் ! )







சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் AAMF ’ன் இரண்டாவது கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் சகோ. K. சலீம் ( தாஜுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களின் தலைமையில் தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு  AAMF ன் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சார்பாக அனைத்து முஹல்லா நிர்வாகிகளுக்கும் “நினைவூட்டல் கடிதம்” அனுப்பப்பட்டு, அதில் நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நமதூரில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது தொடர்பாக அறிவிப்பு செய்வது என ஆலோசிக்கப்பட்டது.





நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி செய்வது தொடர்பாக ஏற்கனவே இவ்வழக்குகளை கையாள்வதற்காக சகோ. மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கிற்காக கீழத்தெரு முஹல்லா நிர்வாகத்தினர் சார்பாக ருபாய் 5000/- நிதி உதவி ஆசிரியர் சகோ. முகமது அலியார் அவர்களின் முன்னிலையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.



பட்டுக்கோட்டை ஆனந்தா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் உரிமையாளர்கள் கொடுத்த மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




தக்வா பள்ளி மீன் மார்க்கெட் சம்பந்தமாக இரு தரப்பினர்கள் இடையே சமீபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வைக் கருத்தில் கொண்டு இருதரப்பினர்களிடேயே சமரசம் ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுமுகமாக முடித்து தந்த சகோ. சேக்தாவுது ( கீழத்தெரு முஹல்லா ) மற்றும் அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்களுக்கு AAMF ன் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.




அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அரசு மருத்துவமனை இரவு நேர சேவை, அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகம் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ள, SDPI மற்றும் த.மு.மு.க. ஆகிய இரு சமுதாய அமைப்புகளுக்குள் சமிபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வை மறந்து அவர்களிடேய ஒற்றுமையை ஏற்படுத்துவது, பெரிய ஜும்மா பள்ளியில் “சுகாதார விழிப்புணர்வு அறிவிப்பு” போன்றவைகள் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 




நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கீழத்தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ கடற்கரைத்தெரு முஹல்லாவில் “ வருகிற 04-05-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

அதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் !


அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப் ( WCC ) சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாளான நேற்று  ( 22-03-2012 ) வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசளிப்புகள் நடைபெற்றது.



இத்தொடர் போட்டியில் அதிரையைச் சார்ந்த WCC , AFCC, KCC, SYDNEY, RCCC,  ABCC,  ASC, போன்ற உள்ளூர் அணிகளும், மேலும்  XXX மிலாரிக்காடு, வேதாரண்யம், நெய்வேலி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, புதுப்பட்டினம், கறம்பக்குடி, முல்லாங்குறிச்சி, தம்பிக்கோட்டை, மறவக்காடு, மன்னாங்காடு, வடகாடு, எட்டாம்புலிகாடு போன்ற வெளியூர் அணிகளும் பங்கு பெற்று சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.




போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளின் விவரங்கள் :
1.       முதல் பரிசு : பாப்பாநாடு அணியினர்
2.       இரண்டாம் பரிசு : அதிரை  WCC அணியினர்
3.       மூன்றாம் பரிசு : அதிரை AFFC அணியினர்
4.       நான்காம் பரிசு : மதுக்கூர் அணியினர்




மேலும் போட்டிகளில் விளையாடி தங்களின் தனித்திறமைகளை வெளிபடுத்திய விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா நிகழ்ச்சிகளை அதிரை  WCC அணியின் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துருந்தனர்.



POSTED BY ADIRAI WSC . 

Thursday, March 22, 2012

அதிரை எக்ஸ்பிரஸ்: பெண்கள் அணியும் “Face Cover” பற்றிய வதந்தி : பேரூர...

அதிரை எக்ஸ்பிரஸ்: பெண்கள் அணியும் “Face Cover” பற்றிய வதந்தி : பேரூர...: ப்ளாஸ்டிக் தடை நிலவரங்கள் மற்றும் பொதுமக்களின்  ஒத்துழைப்புகள், பெண்கள் அணியும் “Face Cover” பற்றி ஊரில் நிலவும் வதந்தி போன்றவைகள் பற்றி நமத...

Wednesday, March 21, 2012

அறிவையும், ஆண்மையையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய் !

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது!


உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

கொழுப்பை கரைக்கும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

கொழ கொழ காய்

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வாய்நாற்றம் அகலும்

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.