Friday, June 29, 2012

கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி !


                  How to increase Your Computer Speed?
பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.
சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.
இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின் அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .
உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.
               How to increase your computer speed?
இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.
வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.

Tuesday, June 26, 2012

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் !


                                               
பணத்தின் பயன்பாடு, அதன் தேவை, அதன் அருமை போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். கல்வி என்பது பல வழிகளிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த கல்வி கிடைக்க காரணமாக அமையும் பணத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுரையாகும்.
தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு இருக்கும். கல்வி, விளையாட்டு, இசை, மற்றும் இன்னபிற செயல்பாடுகளில் தம்மால் அடைய முடியாததை தம் குழந்தைகளை ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
பள்ளியில் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்கு, விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு. அந்த கல்விக்கும் விளையாட்டிற்கும் தேவையான பணம் பற்றியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணத்தின் மீதான அருமை தெரியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பண்டைய காலங்களில் குலகுரு கல்வி முறையில் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்தும் விதமான கல்வி கற்பிக்கப்பட்டது சிறிய வயதில் குருவின் ஆசிரமத்திற்கு வந்து தங்கி பயிலும் மாணவன் கல்வி கற்று பெற்றோரிடம் செல்லும் போது அவன் கையாலேயே குருவிற்கு தட்சிணை அளிப்பான். இதுதான் வழக்கம். இதன் மூலம் பணத்தின் அருமையும் அதன் தேவையும் சிறு வயதிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இன்றைய கல்வி முறை மாறிவிட்டது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து லட்சம் லட்சமாக கொட்டி படிக்க வைக்கின்றனர். எனவே இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.
எந்த முறைகளில் கற்பிக்கலாம்?
குழந்தைகளின் கையில் பணத்தைக் கொடுத்து எண்ணச் சொல்லலாம். இந்த பணத்தை சம்பாதிக்க எப்படி எல்லாம் போராடி வேண்டியிருக்கிறது எத்தனை மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் குழந்தைகளுக்கு கூறலாம். பணத்தின் மதிப்பையும் அதன் தேவையையும் கதைகள், விளையாட்டுக்கள் மூலம் குழந்தைகளுக்கு புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அவர்களின் கையில் பணத்தை கொடுத்து வாங்கி வரச்சொல்லலாம். மீதமுள்ள பணத்தை சேமிக்க கூறலாம்.
குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான தேவையும், செலவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவர்கள் எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம்.
பணத்தினால் ஏற்படும் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றியும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதற்கு செலவழிக்க வேண்டும்? எதற்கு செலவழிக்கக் கூடாது என்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள்.
சில சமயம் குழந்தைகளிடம் இருந்து பணத்தை கடன் வாங்கி சில நாட்கள் கழித்து அதற்கு வட்டியுடன் திருப்பி தரலாம். இதனால் பணத்தை முதலீடு செய்தால் அதன்மூலம் வருவாய் பெருகும் என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அந்த பணத்தை சம்பாதிப்பதைப் பற்றியும், சேமிப்பதைப் பற்றியும் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்-தமிழக மத தலைவர்கள் கண்டனம்



 
கொழும்பு: இலங்கையில் உள்ள இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வழிப்பாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு, தமிழக மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வழிப்பாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சில மத குருமார்களுக்கு மிரட்டலும், தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் இச்சம்பவத்திற்கு, தமிழகத்தை சேர்ந்த மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கத்தோலிக்க ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, போராசிரியை சரஸ்வதி, இந்தியன் தெளஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர் அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட பல மத தலைவர்கள் கூட்டாக சேர்ந்து சென்னையில் பேட்டி அளித்தனர்.
பேட்டியின் போது அவர்கள் கூறியதாவது,
இலங்கையில் நடைபெற்ற போருக்கு முன்னும், போருக்கு பின்னும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களை முற்றிலும் அழிப்பதில் இலங்கை அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்துக்களின் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கி தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களை கடத்தி சென்று கொலை செய்து விடுகின்றனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு இலங்கை அரசு மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இலங்கை அரசின் அடக்கு முறைகள் மற்றும் உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஈழ தமிழர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் கடமை, தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இலங்கையில் இனி தமிழர்கள் வாழ வாய்ப்பு இல்லை.அனைத்து மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் கோவில்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. இது ஒரு பயங்கரவாத சம்பவமாகும்.
மதம், மக்கள், கலாச்சாரம் ஆகியவற்றிற்கு எதிரான சம்பவங்கள் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க, ஒன்று சேர வேண்டும்.
இது குறித்து ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பன்னாட்டு சபையும் உடனடியாக தலையிட்டு, இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.

Friday, June 22, 2012

காணாமல் போன கண்டன அறிக்கை - ஜால்ரா இயக்கத்தின் உண்மை முகம !


ஜவாஹிருல்லாவின் பதில் என்ன் ?

சமீபத்தில் இட ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகை பேராட்டம் நடத்தியது. இந்த பேராட்டம் நடந்த பிறகு ஆளும் கட்சிக்கு அடிமைகளாக இருக்கும் இயக்கத்தினர், ஆளும் கட்சிக்கு வழக்கம் போல் ஜால்ரா தட்டியுள்ளார்கள்.

இந்த ஜால்ராவை வைத்துக்கொண்டு சிலர் தவ்ஹீத் ஜமாஅத் ஏதோ விளம்பரத்திற்காக பேராட்டம் நடத்தியதை போல் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இட ஒதுக்கீடு முறைகேட்டை, கலைஞர், முஸ்லிம் லீக் காதர் முகைதீன் ஆகியோர் கண்டித்தனர். தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக போராட்டம் நடத்தியது. இப்போது இவர்கள் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஜால்ரா தட்டியுள்ளார்கள். இவர்களுக்கு சமுதாய அக்கரையிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத்தின் பேராட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். நாம் தான் அடிமைகளாக மாறிவிட்டோம், இவர்களாவது சமுதாயத்திற்கு ஒரு துரோகம் இழைக்கப்படுவதை உணர்ந்தவுடன் பொங்கி எழுகிறார்களே என்று. இவர்கள் அதை செய்யவில்லை. மாறாக, எதையுமே சுயமாக சிந்திக்க தெரியாத இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் அறிவித்தவுடன், தங்களின் அதிகாரபூர்வ (காணாமல் போகும் செய்திகளையே) இணையதளத்தில் இடஒதுக்கீடு முறைகேட்டை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுயிருந்தார்கள்.

அந்த அறிக்கை இதோ. இப்போது அந்த அறிக்கையை அவர்களது இணையதளத்தில் காணவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தியது என்றால், விளம்பரத்திற்காக கண்டன அறிக்கை வெளியிடலாமா? கழக கண்மணிகளுக்கு புரிந்தால் சரி.



(கழக கண்மணிகளே, உங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் ஸ்கீரீன் சாட் போட்டு வையுங்கள். அப்போது தான் உங்களின் இயக்கத்தின் சால்ராவை புரிய முடியும்)

ஸ்கீரீன் சாட் எடுத்து வைத்த முஹம்மது உபைஸ் அவர்களுக்கு நன்றிகள்!

தானே புயல் நிவாரணத்தை பாராட்டி, தானே புயல் வராதா என்று தமிழக மக்கள் ஏங்குவதாக ஜால்ரா தட்டி, அதிமுகவினர் கூட அடிக்காத ஜால்ராவை அடித்த பேராசிரியர், இதில் ஜால்ரா தட்டி இருக்கிறாரா இல்லை என்பதை காலம் பதில் சொல்லும்.

தொடர்புடையவை:

தானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (?) – சொன்னது யார் தெரியுமா?

நன்றி : அதிரைtntj

Thursday, June 21, 2012

சவுதி அரேபியாவில் நால்வருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்



சிறுமியை கடத்தியது, பாலியல் ரீதியான தாக்குதல் போன்றவற்றின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் நால்வருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது பின் நேப்பு, ஜமலத் பின் நேப்பும் 9 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று தங்களது இருப்பிடத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும் அச்சிறுமியை பலமுறை பாலியல் ரீதியான தாக்குதலுக்கும் உள்ளாக்கி உள்ளனர். அதன் பின் அச்சிறுமியை நாடு கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதே போன்று தன் நண்பரை சுட்டுக் அலி பின் முகமது அல் கஹ்தானி என்பவருக்கு அந்நாட்டின் அஸிர் பிராந்தியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இரு பெண்களுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவை வைத்திருந்தமை, சூனிய வேலைகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் முறாபின் அலி அல்அஸிரி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதன் மூலம் சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.

Tuesday, June 12, 2012

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம் !

                                   


முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!


தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:

அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.

பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.