Thursday, June 21, 2012

சவுதி அரேபியாவில் நால்வருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்



சிறுமியை கடத்தியது, பாலியல் ரீதியான தாக்குதல் போன்றவற்றின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் நால்வருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது பின் நேப்பு, ஜமலத் பின் நேப்பும் 9 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று தங்களது இருப்பிடத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

மேலும் அச்சிறுமியை பலமுறை பாலியல் ரீதியான தாக்குதலுக்கும் உள்ளாக்கி உள்ளனர். அதன் பின் அச்சிறுமியை நாடு கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதே போன்று தன் நண்பரை சுட்டுக் அலி பின் முகமது அல் கஹ்தானி என்பவருக்கு அந்நாட்டின் அஸிர் பிராந்தியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இரு பெண்களுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவை வைத்திருந்தமை, சூனிய வேலைகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் முறாபின் அலி அல்அஸிரி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதன் மூலம் சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment