அஸ்ஸலாமுஅலைக்கு வரஹ்
இஸ்லாமிய சமூகத்தில் இன்று இளம்பெண்கள் மாற்று மதத்தவருடன் ஓடி போதல், மணவிலக்கு, குடும்பஉறவுகளில் பிரச்சனை, பெற்றோர்களை புறக்கணித்தல் போன்ற சமூக கேடுகள் அதிகரித்துள்ளது.
ஜமத்தார்களால் பேசி தீர்கப்படவேண்டிய குடும்ப விசயங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் பேசவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.இதற்கு போறுப்பேற்க வேண்டியது இன்றைய இளைய சமூதாயம்.
மார்கத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றோம் . ஊரில் சின்ன பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு முன்னால் நிற்கின்றோம்.ஆனால் தன்னுடைய திருமணவிவகாரங்களில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.இவர்களிடம் ”என்னபாய் கொள்கை எல்லாம் பேசினிங்க இப்ப இப்படி நபிவழிக்கு மாற்றமாக செய்துவிட்டிர்களே என கேட்டால் இந்த மடையர்களின் பதில் இப்படியாக இருக்கும். ”இல்ல பாய் அம்மா செத்து போயிருவேனு மிரட்டுராங்க”.என்பதாக .
கொள்கைக்காக சொந்தங்களையும் பெற்றோர்களையும் இழந்த நபிமார்களின் வரலாற்றுகளை பேசுகின்றோம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்களை பெற்றோர்களை விட்டு வந்ததற்க்காக பராட்டுகிறோம் ஆனால், நாம் அல்லாஹ்விற்க்காக எதையும் இழக்க துணிவதில்லை
பிறகு எப்படி நம்மை தவ்ஹீத்வாதி பரம்பரை இஸ்லாமியன் என அடையாள படுத்த நமக்கு துணிவுவருகிறது இதற்கு நாம் வெட்கப்படவேண்டாம...?
அல்லாஹ் தன்திருமறையில்கூறுகிறான்:
நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள் அதிலிருந்துஏதேனும் ஒன்றை மனமுவந்து அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். அல்குர்ஆன்.4:4
வேதத்தையுடையவர்களே ! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின்வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்.அல்குர்ஆன்.3:71
யார் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நரகத்தில்புகுத்திவிடுவோம் அவர்களின் தோல் கருகிவிடும் போதேல்லாம் அவையல்லா(வேறு) தோல்களை அவர்கள் வேதணையை அனுபவிப்பதற்கென அவர்களுக்கு மாற்றிக்கொண்டெ இருப்போம் நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன்.4:56
இஸ்லாமிய சமூகத்தில் பெரும்சீர்கேட்டை உண்டாக்குகின்ற விசயமாக இந்ததிருமணங்கள் அமைந்துவிட்டது என்பதை யாரு மறுக்க முடியாது.
வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியகாலங்களில் வரதச்சணை வாங்ககூடாது என்பதில் உறுதியாக இருக்ககூடியவர்கள்.தாயகம் திரும்பியவுடன் தாயின் சொல்லை தட்டுவதில்லை.இந்த கெடுகெட்டவர்களினால், மார்க்கத்திர்காக இழப்புகளை சந்தித்தவர்களின் தியாகம் கேலியாக்கப்படுகிறது.
இவர்கள் நிலை இப்படியென்றால் ஏகத்துவம் பேசும் பெற்றோர் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது.இவர்களும். மார்க்கத்தை பற்றியும் வரதட்சணை வாங்ககூடாது என்பது பற்றியும் வாய்கிழிய பேசிவிட்டு தங்கள் பெண்பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க நினைத்துவிட்டால் கொள்கைகள் குப்பைக்கு போய்விடும்.இவர்களிடம் கேட்டால் நான் ”கொமராலி“என டயலாக் பதிலாக வரும். இவர்களிடம் நாம் கேட்பதேல்லாம் உங்களுடைய பெண்களை ஒழுக்கமான நல்ல வேலையுள்ள ஒரு முஸ்லிமுக்கு திருமணமுடிக்க வேண்டியதுதானே ஆனால் பணத்தை முக்கியபடுத்தி கொள்கை சிறிதளவும் இல்லாதவர்களுக்கு மணமுடிப்பதில் குறிக்கோளாக அலைந்தால் வரதட்சணை திருமணங்கள் எ்ப்படி நடக்காமல் இருக்கும்.
சரி இவர்கள் தங்கள் மனோ இச்சைப்படி திருமணம் முடிக்கிறார்களே இந்த திருமணங்கள் முழுமையாக வெற்றி பெருகின்றதா என்றால் கிடையாது.இத்திருமணங்களின் முடிவு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும இடையில் உறவு விரிசல் இதனால் பெற்றோல் புறக்கணிக்படுதல்.கணவன் மனைவி இருவருக்கிடையே புரிந்தணர்வு ,பரஸ்பர நம்பிக்கை,போன்றவை குறைந்து மணவிலக்கு அதிகரித்துவிட்டது.பொலிஸ் டேஷன் கோட் என அலைதல் போன்றவை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
நபியே நீர் கூறும் ”உங்களுடைய தந்தை மார்களும் உங்களுடைய பிள்ளைகளும்உங்களுடைய சகோதரர்களும் ,உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்கர்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்ப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்ற வியாபாரமும் ,நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும் அல்லாஹ்வையும் அவன்துாதரையும் அவனுடைய வழியில் போர்புரிவதைவிட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால்அல்லாஹ் அவனுடைய கட்டளையை கொண்டுவரும் வரை நீங்கள் எதிர்ப்பார்திருங்கள் அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்துவதில்லை” அல்குர்ஆன்.9:24
எவர் அல்லாஹ்வுக்கும் அவன் துாதருக்கும் மாறுசெய்கிறாரோ நிச்சயமாக அவருக்கு நரகநெருப்பு இருக்கிறது. அல்குர்ஆன்.9:63.
மார்கத்தை மற்றவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு தங்கள் கடைப்பிடிப்பதில் ”நயவஞ்சகம்” புரியும் கேடுகெட்டவர்களை சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்கவேண்டும்.
நீங்கள் வேததை ஓதிக்கொண்டே உங்களை நீங்கள் மறந்துவிட்டு மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவேண்டாமா...? அல்குர்ஆன்.2:44
அன்பான சகோதரர்களே உங்கள் உள்ளங்களில் ஈமானை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள்.இதுதான் மார்க்கம் என தெளிவான பிறகும் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறும் கூட்டத்தாரை அல்லாஹ் நேசிப்பதில்லை .அல்லாஹ்வுக்கும் அவனுடைய துாதருக்கும் கட்டுப்பட்ட நல்ல முஸ்லிம்களாக மரணிக்க செய்யவேண்டும் என எனக்கும் உங்களுக்கும் பிராத்தித்தவனாக நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment