ஒரு பெண்ணை பார்க்கும் போது, சில வார்த்தைகள் பேசி பழக...ும் போது அவள் இனிமையானவளாகவே தெரிவாள். அப்போது அவளது இயல்பான குணம் தெரியாது. அவளோடு வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவளது இயல்பான குணம் இன்னதென்று கண்டுபிடிக்க முடியும்.
பெண்களாக இருந்தால் ஆண்களின் இயல்பான குணமும் முதலில் தெரியாது, எனவே மணவாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் அவர்களது இயல்பான குணம் எப்படிப்பட்டது, அது நமக்கு ஒத்து வருமா..?? என்பதை யோசிக்க வேண்டும்.
மண வாழ்க்கை அமைந்த பின்னால், இருவரும் தங்கள் விருப்பு, வெறுப்புகள் இன்னதென்று பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலிலேயே கணவனை பற்றி மனைவியும், மனைவியை பற்றி கணவனும் நன்கு புரிந்து வைத்தால், பின்னாளில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படாது. எனவே விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம். கணவன் மனைவிக்கு கணவராக மட்டுமல்ல காதலனாக, தோழனாக, இருக்க வேண்டும். மனைவியும் கணவனிடம் அப்படியே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு நல்ல தாயாகவும் இருக்க வேண்டும்.
தனக்கு அமையப் பெற்ற மணவாழ்க்கையை அழகுற அமைக்கும் பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே உள்ளது, சில வீட்டில் தினந்தோறும் சண்டை ஏற்பட காரணம், விட்டுக் கொடுக்க தெரியாமையினால் தான். துன்பத்தையும், இன்பத்தையும் பங்கு போட்டுக்கொள்ளும் இல்வாழ்வில் விட்டுக்கொடுத்து போவது ஒன்றும் கடினமான காரியமல்ல. விட்டுக் கொடுப்பதிலும் சுகம் இருக்கிறது அதை அனுபவித்து பாருங்கள்.
சின்ன சின்ன கோபங்கள், பிரச்சனைகள் எல்லாமே சுகமானது தான். இதுவே மனம் பொருந்தாத வாழ்வில் சிறு பிரச்சனைகளும் உலக போரை போல பெரிதாக வெடித்துக் கொண்டிருக்கும். எனவே நீங்கள் அமைத்துக்கொள்ளும் மண வாழ்க்கையின் அழகை அடிக்கடி மெருகேற்றிக் கொண்டிருங்கள். வழக்கமான விஷயங்களை விட்டு விட்டு, புதிது புதிதான விஷயங்களுக்கு, செயல்களுக்கு தாவிக்கொண்டிருங்கள். மாற்றங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது வாழ்க்கை பூவைப் போல அழகாக மலர்ந்து நிற்கும
POSTED BY ADIRAI WSC
No comments:
Post a Comment