Wednesday, January 23, 2013

குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தொடர்பு.. உள்துறைச் செயலாளர் பரபரப்பு தகவல்



                               


டெல்லி: நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 10 பேருக்குத் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங கூறியுள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா மற்றும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையின்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 10 பேருக்கு இச்சம்பவங்களில் தொடர்புள்ளதாகத் தெரியவந்தது.

இவர்களுக்கும், அந்த வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்றார் சிங்.
சமீபத்தில்தான் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே,நாட்டில் தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதாகவும், காவி தீவிரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

THANKS TO

THATS TAMIL NEWS 23-01-2013

No comments:

Post a Comment