Friday, June 7, 2013

அதிரையில் 14.6 மில்லி மீட்டர் கொட்டித் தீர்த்த மழை !


தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததில் 14.6 மில்லி மீட்டர் பதிவானது. நகரில் சில மணி நேரங்கள் மின் இணைப்பும் துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.


அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் என்ற மீனவ கிராமத்தில் ராஜேந்திரன் [ 33 ] என்பவர் வீட்டின் அருகிலிருந்த தென்னை மரத்தில் இடி விழுந்ததில் அந்த மரம் கருகியது. மேலும் வீட்டில் உள்ள டிவி, மின் விளக்குகள் சேதமடைந்தன. தகவலறிந்த ராஜாமடம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Courtesy : Dinamani / Dinathanthi
Photos Credit : ADIRAI NEWS

No comments:

Post a Comment