Wednesday, May 15, 2013

ஓதிடும் மவ்லிது வரிகளும்! மோதிடும் குர்ஆன் வசனங்களும்!

ண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில்...


                     



இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை.(அது)அவருக்கு தேவையுமில்லை.(அல்குர்ஆன்: 36:69)  

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விட சீழ்சலத்தால்   நிரம்பியிருப்பது  நன்று (புகாரீ 6154, முஸ்லிம்-4191)

ஓதிடும் மவ்லிது வரிகள்:

    اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ السَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْب

பாவங்களை அழிப்பவரே! உங்கள் மீது ஸலாம்! கவலைகளை அகற்றுபவரே! உங்கள் மீது ஸலாம்!

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا   وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

குற்றங்கள் மன்னிப்பது தாங்களன்றோ, அழிவேற்படுத்தும் பாவங்களை மன்னிப்பது தாங்களன்றோ,

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!சின்னஞ்சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள்புரிவரே!

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ      تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பனே!குற்றம் இழைத்து விட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பார்த்துக் கொள். புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக்கொள்.அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ   مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ   لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது. இது எங்களின் பாவக் கறைகளி லிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும். தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக அவர் இழப்பினை அடையவில்லை.

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

ஆனால் அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில், பாவங்களை மன்னிப்பவன் யார் என்பதை அழகாக சொல்லிக் காட்டுகிறான்.  

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன்: 3:135) 

மேலும், தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53) 

ஓதிடும் மவ்லிது வரிகள்:

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ     فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக  நான்  இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கி விடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ َآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான  நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலவாத்துச் சொல்லுங்கள்!

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்று வோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக!

மேலேயுள்ள மௌலீத் வரிகள் முஸ்லீம் சமுதாயத்தை நரகின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. ஆனால் அல்லாஹூதஆலா நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு இந்த தகுதி இல்லை என்று கூறுகின்றான்.

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

அல்லாஹ்வையன்றி உதவி செய்யும் பாதுகாவலர்கள் எவரும் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை. (அல்குர்ஆன் 42:46)

நான் ''அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன். (அல்குர்ஆன் 40:42)

ஓதிடும் மவ்லிது வரிகள்:

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ     

என்னை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் என்னைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே!''என்றுரைப்பேன்.

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப்படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள்தான்!

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ      فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ        اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்குக் காரணங்கள் (உபாயங்கள்) நெருக்கடியாகி விட்டன.எனவே நபியே தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்துவிட்டேன்.தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன்.நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

ஆனால் திருமறை கூறுகிறது:

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உனக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?(அல்குர்ஆன் 2:107)

ஓதிடும் மவ்லிது வரிகள்:

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே, என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக! என்னால் பற்றி நிற்கப் படுவதற்குரிய நபியே! தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ      

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை  விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே நான், கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா? என்று கேட்பீராக! ''பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44)

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

أَذْهِبْ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (البخاري -5675

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். : புகாரீ(5675)

ஓதிடும் மவ்லிது வரிகள்:

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ   مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا     مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜூவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களைக் காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்களை அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும்.

وَاَطْفِؤُا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ  وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ

நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜூவாலையை அணைத்து விடுங்கள்! தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

عَالِمُ سِرٍّ وَأَخْفى   مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ

அகமிய ரகசியம் அறிபவரே!ஆழிய மர்மம் அறிபவரே! அகமுணர்ந்திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே!

மோதிடும் குர்ஆன் வசனங்கள்: 

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக! . (அல்குர்ஆன் 27:65)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188)

இந்த அளவுக்கு இஸ்லத்தை விட்டு வெளியேறற்றக் கூடியதும்,அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரவல்லது தான் இந்த மவ்லீது வரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

ஆகவே அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் ஸலவாத்தைக் கூறுவோம்.அளப்பரிய நன்மைகளை அடைவோம்.


இஸ்லாமியன் என்றால் கொஞ்சம் படியுங்கள்.....


                              
 
அஸ்ஸலாமுஅலைக்கு வரஹ்

இஸ்லாமிய சமூகத்தில் இன்று இளம்பெண்கள் மாற்று  மதத்தவருடன் ஓடி போதல், மணவிலக்கு, குடும்பஉறவுகளில் பிரச்சனை, பெற்றோர்களை புறக்கணித்தல் போன்ற சமூக கேடுகள் அதிகரித்துள்ளது.

ஜமத்தார்களால் பேசி தீர்கப்படவேண்டிய குடும்ப விசயங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் பேசவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.இதற்கு போறுப்பேற்க வேண்டியது இன்றைய இளைய சமூதாயம்.
மார்கத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றோம் . ஊரில் சின்ன பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு முன்னால் நிற்கின்றோம்.ஆனால் தன்னுடைய திருமணவிவகாரங்களில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.இவர்களிடம் ”என்னபாய்  கொள்கை எல்லாம் பேசினிங்க இப்ப இப்படி நபிவழிக்கு மாற்றமாக செய்துவிட்டிர்களே என கேட்டால் இந்த மடையர்களின் பதில் இப்படியாக இருக்கும்.   ”இல்ல பாய் அம்மா செத்து போயிருவேனு மிரட்டுராங்க”.என்பதாக .

 கொள்கைக்காக சொந்தங்களையும் பெற்றோர்களையும் இழந்த நபிமார்களின் வரலாற்றுகளை பேசுகின்றோம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்களை பெற்றோர்களை விட்டு வந்ததற்க்காக பராட்டுகிறோம்  ஆனால், நாம் அல்லாஹ்விற்க்காக எதையும் இழக்க துணிவதில்லை
பிறகு எப்படி நம்மை தவ்ஹீத்வாதி பரம்பரை இஸ்லாமியன் என அடையாள படுத்த நமக்கு துணிவுவருகிறது இதற்கு நாம் வெட்கப்படவேண்டாம...?

அல்லாஹ் தன்திருமறையில்கூறுகிறான்:



நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள் அதிலிருந்துஏதேனும் ஒன்றை மனமுவந்து அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். அல்குர்ஆன்.4:4



வேதத்தையுடையவர்களே ! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின்வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்.அல்குர்ஆன்.3:71



யார் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நரகத்தில்புகுத்திவிடுவோம் அவர்களின் தோல் கருகிவிடும் போதேல்லாம் அவையல்லா(வேறு) தோல்களை அவர்கள் வேதணையை அனுபவிப்பதற்கென அவர்களுக்கு மாற்றிக்கொண்டெ இருப்போம் நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்.  அல்குர்ஆன்.4:56


இஸ்லாமிய சமூகத்தில் பெரும்சீர்கேட்டை உண்டாக்குகின்ற விசயமாக இந்ததிருமணங்கள் அமைந்துவிட்டது என்பதை யாரு மறுக்க முடியாது.  

வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியகாலங்களில் வரதச்சணை வாங்ககூடாது என்பதில் உறுதியாக இருக்ககூடியவர்கள்.தாயகம் திரும்பியவுடன் தாயின் சொல்லை தட்டுவதில்லை.இந்த கெடுகெட்டவர்களினால், மார்க்கத்திர்காக இழப்புகளை சந்தித்தவர்களின் தியாகம் கேலியாக்கப்படுகிறது.

இவர்கள் நிலை இப்படியென்றால் ஏகத்துவம் பேசும் பெற்றோர் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது.இவர்களும். மார்க்கத்தை பற்றியும் வரதட்சணை வாங்ககூடாது என்பது பற்றியும் வாய்கிழிய பேசிவிட்டு தங்கள் பெண்பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க நினைத்துவிட்டால் கொள்கைகள் குப்பைக்கு போய்விடும்.இவர்களிடம் கேட்டால் நான் ”கொமராலி“என டயலாக் பதிலாக வரும். இவர்களிடம் நாம் கேட்பதேல்லாம் உங்களுடைய பெண்களை ஒழுக்கமான நல்ல வேலையுள்ள ஒரு முஸ்லிமுக்கு திருமணமுடிக்க வேண்டியதுதானே ஆனால் பணத்தை முக்கியபடுத்தி கொள்கை சிறிதளவும் இல்லாதவர்களுக்கு மணமுடிப்பதில் குறிக்கோளாக அலைந்தால் வரதட்சணை திருமணங்கள் எ்ப்படி நடக்காமல் இருக்கும்.

சரி இவர்கள் தங்கள் மனோ இச்சைப்படி திருமணம் முடிக்கிறார்களே இந்த திருமணங்கள் முழுமையாக வெற்றி பெருகின்றதா என்றால் கிடையாது.இத்திருமணங்களின் முடிவு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும இடையில் உறவு விரிசல் இதனால் பெற்றோல் புறக்கணிக்படுதல்.கணவன் மனைவி இருவருக்கிடையே புரிந்தணர்வு ,பரஸ்பர நம்பிக்கை,போன்றவை குறைந்து மணவிலக்கு அதிகரித்துவிட்டது.பொலிஸ் டேஷன் கோட் என அலைதல் போன்றவை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

 நபியே நீர் கூறும் ”உங்களுடைய தந்தை மார்களும் உங்களுடைய  பிள்ளைகளும்உங்களுடைய சகோதரர்களும் ,உங்களுடைய மனைவிமார்களும்,  உங்களுடைய  குடும்பத்தார்கர்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்ப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்ற வியாபாரமும் ,நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும் அல்லாஹ்வையும் அவன்துாதரையும் அவனுடைய வழியில் போர்புரிவதைவிட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால்அல்லாஹ் அவனுடைய கட்டளையை கொண்டுவரும் வரை நீங்கள் எதிர்ப்பார்திருங்கள் அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்துவதில்லை”  அல்குர்ஆன்.9:24


எவர் அல்லாஹ்வுக்கும் அவன் துாதருக்கும் மாறுசெய்கிறாரோ நிச்சயமாக அவருக்கு நரகநெருப்பு இருக்கிறது.  அல்குர்ஆன்.9:63.



மார்கத்தை மற்றவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு தங்கள் கடைப்பிடிப்பதில் ”நயவஞ்சகம்” புரியும் கேடுகெட்டவர்களை சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்கவேண்டும்.


நீங்கள் வேததை ஓதிக்கொண்டே உங்களை நீங்கள் மறந்துவிட்டு மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ளவேண்டாமா...? அல்குர்ஆன்.2:44

அன்பான சகோதரர்களே உங்கள் உள்ளங்களில் ஈமானை உறுதிப்படுத்தாமல்  மற்றவர்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள்.இதுதான் மார்க்கம் என தெளிவான பிறகும் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறும் கூட்டத்தாரை அல்லாஹ் நேசிப்பதில்லை .அல்லாஹ்வுக்கும் அவனுடைய துாதருக்கும் கட்டுப்பட்ட நல்ல முஸ்லிம்களாக மரணிக்க செய்யவேண்டும் என எனக்கும் உங்களுக்கும் பிராத்தித்தவனாக நிறைவு செய்கிறேன்.

Monday, May 13, 2013

படிக்கும் சிறார்கள் பெருமளவில் இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள்



   


 

 

 
 




 
ஷேர் (SHARE) செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்,
இன்ஷா அல்லாஹ்.!!

சமீபத்தில் இங்கிலாந்தில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவுகள்
அதிர்ச்சியை வரவழைப்பதாக அமைந்துள்ளது. ஆம்! இங்கிலாந்தில்
தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் சிறார்கள் பெருமளவில் இன்டர்நெட்
ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக அந்த புள்ளிவிவரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளி சிறார்கள் 3000 பேர் இன்டர்நெட்டில்
ஆபாசப் படம் பார்த்தும், ஆபாச நிகழ்ச்சிகளைப் பார்த்தும்
சிக்கி பள்ளிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை.
எதிர்பார்த்ததை விட டீன் ஏஜ் வயதிலும், அதற்கு முந்தைய வயதிலும்
பெருமளவிலான சிறார்கள் ஆபாசத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும்
இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

தினசரி 15 பேர் :

இங்கிலாந்து பள்ளிகளைப் பொறுத்தவரை சராசரியாக
ஒவ்வொரு நாளும் 15 சிறார்கள், செக்ஸ் தொடர்பான புகார்களில்
சிக்கி பள்ளிகளை விட்டு நீக்கப்படுகிறார்கள்.

15 பேரில் ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவர் :

இந்த 15 பேரில் குறைந்தது ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவராக
இருக்கிறார்.

ஆண்டுதோறும் 3000 பேர் :

செக்ஸ் சேட்டைகள், பாலியல் அத்துமீறல்கள், தொந்தரவு புகார்கள்
காரணமாக 3000 சிறார்கள் பள்ளிகளை விட்டு டிஸ்மிஸ்
செய்யப்படுகிறார்கள்.

சிறார்களைப் பொறுத்தவரை அவர்கள் எஸ்.எம்.எஸ்.மூலம்தான்
பெருமளவில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள்.

கூடப்
படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ். அனுப்புவது,
ஆபாச படங்களை எம்.எம்.எஸ்.அனுப்புவது ஆகியவைதான் அவர்கள்
செய்யும் பெரிய சேட்டைகளாகும்.
சிறார்களில் பெரும்பாலானோர் ஆபாசப் பத்திரிக்கைகளை படிக்கும்
பழக்கம் உடையவர்களாகவும் உள்ளனர்.

அந்த ஆபாசப் புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் உள்ள
படங்களை கத்தரித்து பென்சில் பாக்ஸில் வைப்பது, நோட்டுப்
புத்தகத்தில் ஒட்டுவது ஆகிய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.

மேற்கண்டவாறு அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

இங்கிலாந்தில்தான் இந்த நிலைமை; நம்ம நாட்டில் இந்தப்
பிரச்சனை இல்லை என்று யாரும்
தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது.

சமீபத்தில் தேனியில் நடந்த சம்பவத்தை சிந்தித்தால்
இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் இந்த விஷயத்தில் பெரிய
வேறுபாடு இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்

இதோ அந்த செய்தி :

“வாடகை மொபைலில் ஆபாசப் படம் - மாணவர்களின் விபரீதப்
பழக்கம்”

தேனி: தேனியில் நாள் வாடகைக்கு மொபைல் போன் வாங்கி, அதில்
ஆபாச படம் பார்க்கும் பழக்கம், பள்ளி மாணவர்களிடம் பரவி வருகிறது.

தேனி மாவட்டத்தில் பல பள்ளிகளில், ஆபாசப் படத்துடன் கூடிய
வாடகை மொபைல் போனுடன் மாணவர்கள் வலம் வருகின்றனர்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில்
இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ள ஒரு பள்ளியில்,
பிளஸ் 1 படிக்கும் மாணவனிடம் விலை உயர்ந்த மொபைல் போன்
இருந்தது. ஏழ்மையில் இருக்கும் மாணவனிடம், எப்படி விலை உயர்ந்த
மொபைல் போன் இருக்கும், என ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவர்களை ரகசியமாகக்
கண்காணித்து வந்தார்.

அப்போது, அதே மொபைல் போன் வேறு வகுப்பில் உள்ள
மற்றொரு மாணவரிடம் இருந்தது. அதை பறிமுதல் செய்த ஆசிரியர்,
மாணவரிடம் அன்பாக விசாரித்து, சோதனை செய்தபோது, பல ஆபாச
வீடியோ படங்கள் இருந்தன. இந்த மொபைல் போனை ஐ.டி.ஐ.,
மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது.
இதை மாணவர்கள் போட்டி போட்டு, நாள் வாடகைக்கு வாங்கி படம்
பார்த்து வருவது தெரிந்தது.

இந்தக் கலாச்சாரம் அனைத்து மாவட்டங்களிலும்
உள்ளது என்பது கூடுதல் தகவல். மாணவர்களின் இந்த மொபைல்
போன் ஆபாசப் படம் பார்க்கும் மோகத்தை பெற்றோர்களும்,
ஆசிரியர்களும் கண்காணித்து, அவர்களை விளையாட்டு, படிப்பு என
நல்வழிப்படுத்த வேண்டும். மொபைல் போனில் ஆபாசப் படம்
பதிந்து கொடுக்கும், கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

படிக்கக் கூடிய பள்ளி மாணவர்கள் வாடகைக்கு செல்ஃபோன்
வாங்கி அதில் ஆபாசப் படம் பார்க்கக்கூடிய
அளவிற்கு நிலைமை உள்ளதென்றால் பெற்றோர்கள் இதை ஒரு கனம்
சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமா? கடந்த 2011 - 2012க்கான கல்வியாண்டின்
போது இராமநாதபுரம் பரமக்குடியில்
முதன்மைக்கல்வி அதிகாரி பள்ளிக்கூட ஆய்விற்குச் செல்கின்றார்.
அங்கு நடந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் குறித்து செய்தித்தாள்களில்
வெளியான செய்தியை பெற்றோர்கள் கொஞ்சம் கவனியுங்கள் :

பள்ளி மாணவ, மாணவிகளின் அவலம் : பாடப் புத்தகங்களுக்குள்
காதல் கடிதம், ஆபாசப் புத்தகங்கள்!

பரமக்குடி: அரசுப் பள்ளிக்கூடங்களில் சோதனை நடத்தச் சென்ற
முதன்மை கல்வி அதிகாரி, மாணவ, மாணவியரின் பாடப்
புத்தகங்களுக்குள் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், பைகளில்
செல்போன்கள் ஆகியவை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
எல்லாம் 10,11, 12வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்.

நல்லவர்களாக இருக்க கிடைக்கும் வாய்ப்புகளை விட கெட்டுப்
போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாம் எப்படி திடமாக
இருக்கிறோம் என்பதை வைத்துத்தான் நிலை தடுமாறாமல்
வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். இன்றைய
மாணவர்கள், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் மீது பல
குற்றச்சாட்டுக்கள் குவிகின்றன. இந்த வயதிலேயே காதலிக்கிறார்கள்,
இந்த வயதிலேயே செல்போனும் கையுமாக விடாமல் பேசுகிறார்கள்
என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள். இதேபோல ராமநாதபுரம்
மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது சில
புகார்கள் வந்தன.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பரமக்குடி வந்தார்.
அங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலில் சோதனையில்
இறங்கினார். மேல்நிலை வகுப்புகளுக்குச் சென்று மாணவர்களின்
பைகளை சோதனையிட்டார். அப்போது செல்போன்கள் பல சிக்கின.
அதை விட அதிர்ச்சியாக ஆபாசப் புத்தகங்கள் எக்கச்சக்கமாக சிக்கின.
பலர் தங்களது பைகளில் இருந்த இதுபோன்ற
குப்பைகளை தூக்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அதைப்
பார்த்த அதிகாரி அவற்றையும் கைப்பற்றினார்.

பின்னர் பைகளில் செல்போன், ஆபாசப் புத்தகம்
உள்ளிட்டவற்றை வைத்திருந்தவர்களைக் கூண்டோடு டிஸ்மிஸ்
செய்ய தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட
மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரியின் காலில்
விழுந்து கெஞ்சிக் கதறி அழுதனர்.
இதையடுத்து அவர்களை மன்னித்த அதிகாரி,
மாணவர்களுக்கு புத்திமதி கூறி இனிமேல் ஒழுங்காகப் படிக்க
வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

பார்த்திபனூரிலும் இதே நிலைதான் :

அடுத்து பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூரில் உள்ள
அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றார் ராதாகிருஷ்ணன். அங்கும்
சோதனை நடத்தினார். அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சியைத்
தரும் வகையில் மாணவிகள் பலர் காதல் கடிதங்களை பைகளில்
வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இங்கும் மாணவ,
மாணவியர்களுக்கு கடும் எச்சரிக்கை கலந்த அறிவுரையைக்
கூறினார் ராதாகிருஷ்ணன். இந்த சோதனை குறித்து அவர்
கூறுகையில், பெரும்பாலும் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும்
மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில்
ஈடுபடுகின்றனர். தஙக்ளது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எப்படிப்
படிக்கிறார்கள் என்பது குறித்து கவலையும், அக்கறையும் செலுத்த
வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். தொடர்ந்து அவர்களைக்
கண்காணித்து வர வேண்டும்.அப்போதுதான் இதுபோன்ற
தவறுகளைத் தடுக்க முடியும் என்றார்.

மேற்கண்ட செய்திகள் நமக்குக் கூறுவதென்ன?

வீட்டிலுள்ள பெற்றொர்கள் தங்களது பிள்ளைகளை கவனிக்கத்
தவறுதுதான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது.

இப்படி தங்களது பெற்றோர்களால் கவனிப்பாரற்று விடப்படும்
பிள்ளைகள் மூன்று வகைகளில் சீரழியக்கூடிய
நிலை ஏற்படுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

1.ஆபாச படங்கள், இன்டர் நெட் மூலம் வழிகேடு, மது, மாது,
போதை, புகையிலை, பான்பராக் என்று வழிகெடுவது ஒரு பக்கம

2.வன்முறை, சமூக விரோதச் செயல்கள்
என்று செல்வது ஒரு பக்கம

3.இஸ்லாமிய நெறிமுறைப்படி வளர்க்கப்பட வேண்டிய,
வார்த்தெடுக்கப்பட வேண்டிய பிள்ளைகள் இணைவைத்தலின் பக்கம்
போய் நிரந்தர நரகத்திற்குரியவர்களாக மாறக்கூடிய அவலம்
ஒரு பக்கம்

மேற்கண்ட மூன்று வகையான
வழிகேடுகளிலிருந்து நமது பிள்ளைகளை காக்க வேண்டுமென்றால்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனித்து பொறுப்புணர்வுடன்
வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இந்த உலகத்திலும்
இழப்பை அடைவதுடன், மறுமையிலும் இழப்படைய நேரிடும்
என்பதை அறிவுரையாக சொல்லிக் கொள்கின்றோம்.

தடுக்க வழி என்ன? :

இதுபோன்ற மோசமான
செயல்களிலிருந்து நமது பிள்ளைகளை காக்க வேண்டுமென்றால்
அவர்களை சீரழிக்கக் கூடிய வகையிலான அனைத்திலிருந்தும்
அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு பெற்றொர்களுக்கு உள்ளது.

சீரியல்கள்; சினிமாக்கள் :


இவைதான் பெரும்பாலானோர் வழிகெடுவதற்கு முக்கிய காரணமாக
விளங்குகின்றன. அனைத்து சீரியல்களுமே தவறான
உறவுகளை சித்தரிகக்கூடியவைகளாகவும், வன்முறையைத் தூண்ட
வழிகோள்பவையாகவும் உள்ளன.
இவற்றை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் கேவலங்கள்தான்
பின்னாளில் பெரும்பெரும் விளைவுகளுக்கு காரணமாக
அமைந்து விடுகின்றன.

சீரழிக்கும் செல்ஃபோன் :

படிக்கக்கூடிய பிள்ளைகளிடத்தில் செல்ஃபோன்களை வாங்கிக்
கொடுத்து, “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி”
என்று சொல்வதுபோல பிள்ளைகளை வழிகெடுப்பதே இந்த
பெற்றோர்கள்தான்.
செல்ஃபோனிலிருந்துநமதுபிள்ளைகளைகாப்பாற்றினாலேபெரும்பாலான
பிரச்சனைகள் ஒழிந்துவிடும்.

(நமது மேற்கண்ட குற்றச்சாட்டை உண்மைப்படுத்தும் வைகையில்
அமைந்த சம்பவங்களை, “இன்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்!
டிவியினால் பெருகும் வன்முறைகள்!!” என்ற தலைப்பிலான
கட்டுரையில் 13ஆம் பக்கத்தில் காண்க)

மேற்கண்டவைகளை தவிர்ந்து மார்க்க போதனைகளை சரியான
முறையில் அவர்களுக்கு புகட்டினால் நல்ல
தலைமுறைகளை உருவாக்கலாம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள்
குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன்
எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்,
கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ்
ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச்
செய்வார்கள்.

அல்குர் ஆன் 66 : 6

THANKS TO ONLINE  P J WEB SITE